|
|
மரணித்துக் கொண்டே...
இரவுப் பாடகன்
என்றெண்ணி உற்று கேட்டேன்
பாடல்கள்
இழவுப் பாடல்கள்
இழவுப் பாடகன்
மரணம்
மரித்துப் போகும் வரை
மரணப் பாடல்களை
பாடுகிறான்
மரணத்தின்
வலிகளை
வரிகளில் நீக்கும்
வழிகளாக
கடைசித் துளியில்
எரியும்
கை விளக்கு போல
விடிகால நிலவின்
வெளிச்சம் போல
மழலை புன்னகையில்
மரண மாளிகை
வாசலில் நின்று
மழலை சொல்லோ
முகமோ
கேட்கவோ
பார்க்கவோ இயலும் போது
இல்லாது போகும் மரணம்
அன்பை பாடுகிறான்
அன்பை கூட
மரணமாகத் தான் பாடுகிறான்
நட்ப
காதல்
காமம்
மௌனம்
கடவுளையும்
மரணமாகத் தான்
பாட முடியும் அவனுக்கு
மரணத்தில் பிறந்தவன்
மரணத்தில்வலர்ந்தவன்
மரணத்தில் பயின்றவன்
மரணத்தில் பயணிப்பவன்
மரணத்தின் கதையை
வண்ணத்துப் பூச்சி கொண்டு
வாசிக்கிறான்
மரணத்தை நகர்தலை
தீக்கங்கு கொண்டு
தீட்டுகிறான்
மரணத்தின் சுவையை
காம மிருகம் போல
ருசிக்கிறான்
மரணிப்பதால் மனிதன்
கடவுளுக்கும் மேலாகிறான்
கடவுளுக்கு கிடைக்காத
உன்னத
உயர்ந்த மரணத்தை
உற்சாகமாக
பாடுகிறான் மரணித்திக்கொண்டே...
|
|