முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 34
அக்டோபர் 2011

  வழித்துணை ...10
ப. மணிஜெகதீசன்
 
 
       
கட்டுரை:

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு : பாலில் விழுந்த நஞ்சு
ம. நவீன்



நேர்காணல்:

“வன்முறைதான் மிகக் கவர்ச்சியான ஒன்றாகத் தெரிகிறது” றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 1
ம. நவீன் - கே. பாலமுருகன்


பத்தி:

தேர்தலும் கலர் துண்டும்

கே. பாலமுருகன்

புலம்பெயர் முகங்கள் ...2

வி. ஜீவகுமாரன்


சிறுகதை:

தமிழ்க்கதை
யோ. கர்ணன்



பதிவு:

தூது போகும் போராளிகளும், போராடும் தூதுவர்களும்...
தயாஜி



எதிர்வினை


கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

விருந்தாளிகள் விட்டு செல்லும் வாழ்வு
ம. நவீன்

தர்மினி பக்கம்
தர்மினி


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...24

ந. பெரியசாமி

மாதங்கி

லதாமகன்

வ.ஐ.ச. ஜெயபாலன்

ஷம்மி முத்துவேல்

ரவிக்குமார்

தேனு

இலக்கிய விமர்சனம்

கோ. முனியாண்டியின் 'இராமனின் நிறங்கள்' நாவலை இன்னும் வாசிக்கவில்லை. இணையத்தில் அது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் (தாக்குதல் - எதிர் தாக்குதல் - சவால்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்) வாசிக்கக் கிடைக்கின்றன. அது நாவலே இல்லை என்று நவீன் எதிர்வினையாற்றியிருக்கிறார். 'பறை'யில் தனது கூற்றை மெய்பிப்பதாக தனது வலைப்பூவில் எழுதியிருக்கிறார். சரியான அணுகுமுறை. நானும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். அதற்குமுன் நாவலைத் தேடி வாசிக்கவேண்டும்.

அப்புறம், விமர்சனம் செய்ய என்னென்ன தகுதிகள் வேண்டும் என்ற புதிய 'பூதம்' ஒன்று முளைத்துவிட்டால்?

ஏனெனில், விமர்சனம் என்பது பல முகம் கொண்ட ஒரு அறிதல் முறை. ஒரு விமர்சகர் முன்னெடுக்கும் வாதங்களை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. `காவல் கோட்ட'த்தை எஸ்.ரா பிடி பிடியெனப் பிடித்தார். தர்க்கப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய பல தரவுகள் கொண்டு தன் விமர்சனத்துக்கு வலு சேர்த்திருந்தார். சூப்பராக இருந்தது! அப்புறமா அவர் 'வாங்கிக் கட்டியதைப்' படித்தபோது புரிந்தது விமர்சனத்தின் பன்முகத் தன்மை. ஜெயமோகன் தனது விமர்சனங்களை எவ்விதப் பச்சாதாபங்களும் இன்றி (அப்படித்தான் நினைக்கிறேன்), மிகக் கறாராகவே முன்வைக்கிறார். அதற்கான காரணங்களையும் தனது பரந்த, ஆழமான வாசிப்பின் மூலமாக, செறிவான நடையில், விரிவாக முன்வைக்கிறார். நாவல் இலக்கியத்தைப் பற்றி அவர் எழுதியுள்ள புத்தகம் நல்லதொரு வாசிப்பாகவும், நாவல்களைப் புரிந்துகொள்ள உதவக்கூடிய ஒரு `கருவி'யாகவும் பயனளிக்கிறது.

அப்படியும், அவரையும்தான் இணையத்தில் `பிரித்து மேய்ந்து' விடுகிறார்கள்! (பல பதிவுகள் வெறும் வசைகள் அளவிலேயே நீர்த்துவிடுவதும், மற்றும் சில `ok` ரகப் பதிவுகளோ உள்ளீடற்று, வலுவற்ற வாதங்களை முன்வைத்து, எடுபடாமலும் போகின்றன.) பிடிக்கிறதோ, இல்லையோ, இப்போதையச் சூழலில், தமிழ் இலக்கியத்தின் முகமாகத் தெரிவது ஜெ.மோ.தான் என்பது என் கணிப்பு.

நம்மூர் விமர்சனம் எப்படி?

நல்ல, தரமான படைப்புகளைத் தந்த/தரும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். நல்ல எழுத்துகளைத் தருவதாக நினைத்துக்கொள்ளும் எழுத்தாளர்களும், எழுத்துகளை மட்டும் தரும் எழுத்தாளர்களும் கூட இருக்கிறார்கள். பெரும்பாலும், இவர்களே விமர்சகர்களாகவும் இருக்கிறார்கள். இலக்கியக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன், இடைவேளைகளில் கூட்டம் முடிந்த பின்னும் மட்டுமே பெரும்பாலும் தங்களுக்குள்ளாகவே பல கடுமையான கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். பிறகு, அடுத்தச் சந்திப்பு வரை அமைதியாகிவிடுவார்கள். மிகச்சில சமயங்களில்தான் காராச்சாரமான விவாதங்கள் நாளிதழ்களில் இடம்பெற்றிருக்கின்றன. சீ.முத்துசாமியின் `மண்புழுக்கள்` அதன் `கொச்சைத்' தமிழுக்காக ஒரு விவாதத்தைக் கண்டது. பிரதியின் மற்ற கூறுகள் பெரிய அளவில் பேசப்படவில்லை. ரெ.கார்த்திகேசு அருமையான ஒரு திறனாய்வை செய்திருந்தார்; ப.ஆ.சிவமும், கே.பாலமுருகனும் சிலாகித்து எழுதியிருந்தனர். அத்துடன், நமது காலத்தின் முக்கிய நாவலொன்று மறதியின் மடிப்புக்குள் பத்திரமாக அடங்கிவிட்டது. நாவல் போட்டியின் நீதிபதிகளில் ஒருவரான டாக்டர் சபாபதியுடன் பேசிய ஒரு சந்தர்ப்பத்தில் `மண்புழுக்கள்` நாவலை ஒரு பின்நவீனப் பிரதியாகக் கருதமுடியுமா எனக்கேட்டபோது, `இல்லையென்று' அழுத்தமாகக் கூறினார். அதற்கான காரணங்களையும் சில வரிகளில் சொன்னார்.

அவர் மட்டும் அதனை பதிவு செய்தால்...ம்ம்ம் (ரொம்ப எதிர்பார்க்கிறோமா? பரிசு கொடுத்தீங்களே, ஏன் கொடுத்தீங்க...கொடுத்த காரணத்தக் கொஞ்சம் சொன்னீங்கன்னா புண்ணியமா இருக்குமே? சொல்ற வரைக்கும் உங்களுக்குச் சொல்லத் தெரியலையோ என்று இருந்திடவேண்டியதுதான் போல!) நமது விமர்சனப் போக்கில் ரெ.காவின் `விமர்சன முகம்` மட்டுமே வாசலாக இருக்கிறது. சிலசமயம் விமர்சனக் கட்டுரைகள் வருகின்றன. பெரிய பாதிப்பொன்றும் நிகழ்வதில்லை.

சரி, எழுத்தாளர் அல்லாத விமர்சகர்கள் (என்னைப்போன்ற `கருத்து கந்தசாமி`களையும் சேர்த்துதான் சொல்கிறேன்) நிலை என்ன? வாசக எதிர்வினை என்ற அளவில் சில வரிகளில் `கருத்து' சொல்வோம்; பத்திரிகையில் போடுவார்கள். பார்த்து பரவசமடைவோம். கொஞ்சம் `தலையெடுத்தவுடன், பார்க்க `பாந்தமான', கருணைத் ததும்பும் விழிகள் கொண்ட, சொற்களில் சொக்க வைக்கும் (சுருக்கமாகச் சொன்னால், `டோஸ்` விடாத, அறிவின் ஆழத்தைப் பொருட்படுத்தாத) எழுத்தாளராகப் பார்த்து பேசுவோம். இருசாராருக்கும் பிடித்தமான ஏற்பாடு இது.

கொஞ்சம் தாண்டிப்போய், சில விமர்சன கோட்பாடுகள், நீளமான விமர்சனக் கட்டுரைகள் வாசித்தப் பாதிப்பில் சில கேள்விகளை முன் வைப்போம். எழுத்தாளர் சில சமயம் புன்னகைத்து ஒரு பதிலைச் சொல்லக் கூடும்; சில சமயம் ஒரு எதிர் கேள்வியைப் போட்டு நம்மை ஆழம் பார்க்கவும் கூடும். பதில் தருவதும், தராமல் போவதும் பெரும்பாலும் நாம் தரும் பதில் சார்ந்ததல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது நமது கடமை. இத்தகைய உரையாடல் ஊடான இலக்கிய விமர்சனப் போக்கு நம்மிடையே இருக்கவே செய்கிறது. பல எழுத்தாளர்களின் எழுத்துகளை படிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வது உத்தமமான காரியம் என்பதையும் இப்படியாக நாம் தெரிந்துகொள்ள முடியும். எழுத்தாளன் நல்ல விமர்சகனாகவோ, விமர்சகன் நல்ல எழுத்தாளனாகவோ இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லையே!

ஆனால், ஒரு பிரச்சனை இருக்கிறது! ஒரு கவிஞரைக் கண்டு பேசியபோது கண்டது. அவர் ஒரு புதுக்கவிஞர். இனிமையானவர். அவரது கவிதைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை; அது முக்கியமும் அல்ல. வேறு நல்ல பண்புகள் கொண்டவர். அது போதும். அதுவல்ல பிரச்சனை.

பிரச்சனை என்னவென்றால், "எல்லா கவிதையையும், கதைகளையும் தரம் இல்லையென்று சொல்கிறீர்களே, நீங்களே `தரமான' படைப்புகளைக் கொடுக்களாமே," என்று அவர் கூறியதுதான்.

என்ன பதில் சொல்வது?

இனி நான் வழக்கமாகச் செல்லும் ஸ்ரீகாந்தி உணவகத்தில் விரும்பிச் சாப்பிடும் ரவா தோசை சரியா வரவில்லையென்றால், நானே சுட்டுக்கவேண்டியதுதானோ... உஸ்ஸ்... முடியல...

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768