முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 35
நவம்பர் 2011

  புலம்பெயர் முகங்கள்... 3
வி. ஜீவகுமாரன்
 
 
       
நேர்காணல்:

“தமிழ் இங்குப் பெயரளவில் தேசிய மொழிதான்” றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 2
ம. நவீன் - கே. பாலமுருகன்



கட்டுரை:

அப்சரா
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

கோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?”
கே. பாலமுருகன்

சாதிகள் இல்லையடி பாப்பா
யோகி

ஓர் இலக்கியச் சர்ச்சை

ஷம்மிக்கா

விவேகமான காயம்
செல்மா பிரியதர்ஷன்

யாதும் இசையே யாவரும் கேளிர்
அகிலன்



பத்தி:

புலம்பெயர் முகங்கள் ...3
வி. ஜீவகுமாரன்



புத்தகப்பார்வை:

துரத்தும் நிழல்களின் உக்கிரம் - சித்தாந்தன் கவிதைகள்
கருணாகரன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

தர்மினி பக்கம்
தர்மினி



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...25

அசரீரி

ந. பெரியசாமி

ம. நவீன்

புலம்பெயர் வாழ்வும் சமயமும், கலாச்சாரமும்

சமயம், கலாச்சாரம் இரண்டுமே ஒருநாட்டின் பொருளாதார, சமுதாய அமைப்புடன் கைகோர்த்தே வந்திருக்கின்றது. அல்லது அதன் மேல்கட்டி எழுப்பப்பட்டியிருக்கின்றது.

மேற்கு நாடுகளில் கைத்தொழிற்புரட்சி வந்தபொழுது ஏற்பட்ட கலாச்சார சமயமாற்றங்களை கிழக்காசிய நாடுகளில் இருந்த நாம்பெரிதாக அவதானிக்கவில்லை. அல்லது அந்த வாழ்வின் மீதான மாற்றம் எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.

புலம்பெயர்ந்து மேற்குநாடுகளுக்கு வந்தபொழுது இங்குள்ள தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கைவிட்டு எண்ணும் அளவிற்கே இந்த நாட்டுமக்கள் இருந்தமை மிக ஆச்சரியமாக இருந்தது.

இறைபக்தி அல்லது நம்பிக்கை என்பது அறவே அற்றுப்போய் திருமணம், இறுதிச்சடங்கை நடத்திவைக்கும் ஒரு நிறுவனமாகவே அதிக தேவாலயங்கள் இங்கு இயங்கிக்கொண்டு வருகின்றது என்ற உண்மை காலம் செல்லச்செல்லவே புரியத்தொடங்கியது.

”நான் என்னை கிறிஸ்த்தவன் என பிரகடனப்படுத்துகின்றேன்” என்ற ஞானஸ்தான நிகழ்வை தேவாலயங்களுக்குச் செல்லாமலே நகரசபையில் செய்யக்கூடிய நடைமுறை இங்கு வந்துவிட்டது.

மேற்காட்டிய இந்த மேற்குலகின் வாழ்வியல் பின்னணியில் எமது இந்து சமயமும் கலாச்சாரமும் அடையும் மாற்றங்களை நோக்குவது இலகுவாக இருக்கும்.

கிழக்காசிய மக்களைப் பொறுத்தவரை சமயம் என்பது பக்தியை அடிப்படையாக கொண்டதா? அல்லது பயத்தை அடிப்படையாக கொண்டதா? அல்லது இரண்டையும் இணைத்த பயபக்தியை அடிப்படையாக கொண்டதா? அல்லது சடங்குகளை முன்னிலைப்படுத்தியா? அல்லது இறைவுடன் செய்து கொள்ளும் சில கொடுக்கல் வாங்கல்கள் அல்லது வேண்டுதல்களை அடிப்படையாகக் கொண்டதா? அல்லது அனைத்தும் சேர்ந்த ஒரு கலவையாக பார்க்கப்பட்டுவந்ததா எனச் சமுதாயத்தில்;வேறுமட்டத்தில்; வேறுவாதப்பிரதிவாதங்கள் இருந்து கொண்டுதான் வந்தது. ஆனாலும் அன்றைய சமுதாய ஓட்டத்திற்கும் நிம்மதிக்கும் இந்தச் சமயமும் அதனை ஒட்டிய ஒருதாரமண முறைகளும் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கப்படாமல் அது அதுவாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால் புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளுக்கு மக்கள் வந்தபொழுது அடிப்படையான உணவு, உறைவிடம், வாழ்வின்தரத்தை உயர்த்தும்கல்வி, அன்றாட ஜீவனத்திற்கான தொழில், வேலைவாய்ப்பு, எந்த நோய்குமான மருத்துச் செலவுகள் என அனைத்தும் அடிப்படைச்சட்டத்தில் இலவசமாக வழங்கப்பட்ட பொழுது இவற்றில் எதையுமே கடவுளிடம் கேட்டுப்பெற வேண்டும் என்ற எண்ணம் அல்லது தேவைஎவர்க்கும்; இருக்கவில்லை.

பக்திகாரணமான கடவுளை வணங்கியவர்கள் வணங்கியபடியே இருந்தாலும் வாழ்வின் அன்றாட சுகதுக்கங்களுக்கு பரிகாரம் கடவுள் வழிபாடு என எண்ணிய ஒரு பெரும்பான்மைச் சமுதாயத்திற்கு அந்தக் ”கடவுளாரின் தேவைகள்” மிகமட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தது.

கால ஓட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள்தங்கள் தங்கள் புலம் பெயர்நாடுகளில் நன்குகால்களை ஊன்றியபின்பு ஒருசமுதாய, கலாச்சார அடையாளமாக கோயில்கள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்தது. அவ்வாறான பெரும்பான்மையான கோயில்களில் பக்தி என்பதன் தார்ப்பரியம் மிகமட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சடங்குகளும் அதனைகடைப்பிடிக்கும் தன்மையும் அதனூடான கோயில் நிர்வாகங்களின் பணச்சேகரிப்பும் மேல் ஓங்கிவருவதுகண்கூடு. இலண்டன் நகரில்சுமார்25 – 30 சைவக்கோயில்களின் பெருக்கத்தையும் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வியலைப்பார்க்கும் பொழுது சமயம் என்பது பக்திமார்க்கத்தைதாண்டி வேறு ஒரு மார்க்கத்தில் பயணப்பட்டுக்கொண்டு இருப்பதை அவதானிக்கமுடியும். இவ்வாறே மற்றைய மேற்குலக நாடுகளிலும் கனடா போன்ற பெரும் தொகையான தமிழர்கள் வாழும் நாடுகளிலும் காணமுடியும்.

சமயத்தில் இலகுவாக நாம் கைவைத்த பொழுது கலாச்சாரத்தில் இன்னும் எளிதாக கைவைக்கக்கூடியதான இருந்ததை மேலும் பூதக்கண்ணாடி போட்டுகாட்ட வேண்டியதில்லை. ஒருதாரமணம் - தாலிக்கொடி - தமிழ்மொழி என்ற சின்ன சின்ன நூழிலைகளில் மட்டுமே இன்று எமது கிழக்காசியக்கலாச்சாரங்கள் தொங்கிக்கொண்டு இருக்கிறது. கூடவே அது அறுந்து போவதற்கு அல்லது அறுத்து வீழ்த்தப்படுவதற்கான கத்திகளும் அதன் மேலே தொங்கிக்கொண்டு இருக்கின்றது.

எதிர்காலம் பதில் சொல்லட்டும் என்றுதப்பிப்பதைவிட கட்டாயம் இதைப்பற்றி நிகழ்காலம் சிந்திக்கவேண்டும்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768