முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 35
நவம்பர் 2011

  இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...25
இரஷ்ய மூலம்: யுவ்ஜெனி யுவ்துஷெங்கோ | தமிழில் : இளங்கோவன்
 
 
       
நேர்காணல்:

“தமிழ் இங்குப் பெயரளவில் தேசிய மொழிதான்” றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 2
ம. நவீன் - கே. பாலமுருகன்



கட்டுரை:

அப்சரா
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

கோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?”
கே. பாலமுருகன்

சாதிகள் இல்லையடி பாப்பா
யோகி

ஓர் இலக்கியச் சர்ச்சை

ஷம்மிக்கா

விவேகமான காயம்
செல்மா பிரியதர்ஷன்

யாதும் இசையே யாவரும் கேளிர்
அகிலன்



பத்தி:

புலம்பெயர் முகங்கள் ...3
வி. ஜீவகுமாரன்



புத்தகப்பார்வை:

துரத்தும் நிழல்களின் உக்கிரம் - சித்தாந்தன் கவிதைகள்
கருணாகரன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

தர்மினி பக்கம்
தர்மினி



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...25

அசரீரி

ந. பெரியசாமி

ம. நவீன்

முகத்தின் பின் முகம்

எங்கே வசிக்கிறது
முகத்தின் பின்முகம்?
ஒவ்வொருவரும்
தத்தம் முகத்தின் சரித்திரத்தை
ஒழுங்காய் உணர்ந்திருக்க வேண்டும்.

பொதுவாக மக்களுக்கு
அவரவர் 'நான்' பற்றிய
அடையாளங்கள் தெரிவதில்லை.

நாம் எல்லோரும்
நமக்கு நாமே
நல்ல வழக்கறிஞன் ஆவோம்.

தெரிந்தோ தெரியாமலோ
நீரோ
நானொரு கவிஞனென்றே நினைத்தான்
அகிலத்தைச் சோகத்திலிருந்து மீட்க
அவதரித்ததாக
ஹிட்லர் எண்ணினான்.

கருமி தான் கொடையாளி என்றும்,
அறிவிலி தன்னை அறிவாளியாகவும்
கருதுவதுபோல் இப்படி
கடவுளும் அலுத்துக் கொள்வதுண்டு:
'நான் ஒரு புழு'
புழு சீறும்: 'நான் கடவுள்!'

புழுக்கள் திமிரோடு மேல் நோக்கி ஏறும்.
பேடிகள் மேகங்களில் ஒளிந்து மகிழ்வார்கள்.
சுதந்திரமானவன்
மட்டுமே சிந்திப்பான்:
'நான் ஓர் அடிமை'

இரஷ்ய மூலம்: யுவ்ஜெனி யுவ்துஷெங்கோ (1933)


இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய இரஷ்ய இலக்கியத்தின் இளந்தலைமுறைக் கவிஞர்களின் குறிப்பிடத்தக்கவர் யுவ்துஷெங்கோ. இரஷ்ய சர்வாதிகாரம் பல தரமான படைப்பாளிகளைப் பலி வாங்கிக்கொண்டிருந்தச் சூழலிலும் தனது அரசியல் எதிர்ப்புக் கவிதைகளால் மக்களின் ஆதரவைப்பெற்று, 1963ல் தன் சுயசரிதையை அரசாங்க அனுமதியின்றி பிரான்சில் பதிப்பித்து பெரும் கண்டத்துக்குள்ளானார்.

இரஷ்யாவில் பல்லாயிரக்கணக்கானோர் சூடிச்சுவைக்க கவிதை வாசிப்பை ஒரு மேடைக்கலையாக்கியப் பெருமை இவரையே சாரும். இரஷ்ய மகாகவி மாயகோவ்ஸ்கியின் பாதிப்பு இவரது கவிதைகளின் காணக்கிடப்பதாக விமர்சனங்கள் தெரிவித்தாலும், உலகக்கவியரங்கில் தனிநடை போடும் கவிஞரின் படைப்புகள் பல்வேறு மொழிகளின் முகங்களை வசீகரித்து வருகின்றன.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768