முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 36
டிசம்பர் 2011

  தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் : சொற்கள் தொகுக்கும் சித்திரங்கள்
லதா
 
 
       
நேர்காணல்:

'தமிழின் நவீன கவிதையைவிட மிகச் சிறப்பாக ஒப்பாரி வைக்க எந்தக் கவிதைகளாலும் முடியாது' றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 3
ம. நவீன் - கே. பாலமுருகன்


"தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை"
நிலாந்தன்



கட்டுரை:

கோ. முனியாண்டி கொட்டிய குப்பை
ம. நவீன்

குரு தட்சணை
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் : சொற்கள் தொகுக்கும் சித்திரங்கள்
லதா

தக்க வைத்தல்

ஷம்மிக்கா



பத்தி:

புலம்பெயர் முகங்கள்... 4
வி. ஜீவகுமாரன்



சிறுகதை:

குளியல்
கே. பாலமுருகன்



அறிவிப்பு:

நேர்காணல் இதழ்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...26

வ.ஐ.ச.ஜெயபாலன்

ந. பெரியசாமி

ராஜா

எம். கே. குமார்

இந்த ஆண்டுக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்படும் வரை கவிஞர் தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் பற்றி எதுவும் நான் அறிந்திருக்கவில்லை. பின்னரும் அவரைப் பற்றிய தகவல்கள் இணையங்களில் வெளிவந்த அளவுக்கு அவரது படைப்புகள் குறித்தோ, அவரின் கவிதைகளோ இடம்பெறவில்லை. நோபெல் பரிசு பெற்றிருக்கும் ஒரு பெரும் கவிஞரை மற்றவர்களின் விமர்சனங்கள் மூலம் அறிந்துகொள்வதைவிட, அவரின் கவிதைகள் மூலம் அறிந்துகொள்ளலாம் என ஆங்கில மொழி பெயர்ப்பில் கிடைக்கப்பெற்ற அவரது கவிதைகளை வாசித்தேன். கவிதைகளைப் படிக்கும்போது சட்டென்று ஒரு நெருக்கம் ஏற்படுகிறது. தாம் பிறந்து வளர்ந்த சுவீடன் நாட்டின் சுற்றுச்சூழலையும் வாழ்வையும் அவர் தமது கவிதைகளில் எழுதியிருந்தாலும், அவற்றின் கருத்துகள் நமக்கு வெகு நெருக்கமானவையாகவே தெரிகின்றன. பிரமிளைப் போன்று இவரும் ஒரு படிமக் கவிஞர். பிரமிள் கவிதைகளைப் போன்றே, இவரின் கவிதைகளளிலும் மொழி அழகைக் கடந்து கவிதையின் கருப் பொருள் முக்கியத்துவத்தைப் பெருகிறது. மிக எளிமையான யதார்த்தமான இவரின் கவிதைகளில் வாழ்க்கையின் தேடல்கள், வாழ்வு குறித்த கேள்விகள் மிக ஆழமாக பதிந்துள்ளன.

National Insecurity

The Under Secretary leans forward and draws an X
and her ear-drops dangle like swords of Damocles.
As a mottled butterfly is invisible against the ground
so the demon merges with the opened newspaper.
A helmet worn by no one has taken power.
The mother-turtle flees flying under the water.

என்ற இந்தக் கவிதை அரசியல் கிண்டல் நிறைந்த அங்கதக் கவிதை.

“திறந்திருக்கும் பத்திரிகையுடன் கலக்கிறான் அரக்கன்”
“எவராலும் அணியப்படாத தொப்பி அரியணை ஏறியுள்ளது”
“தாய் ஆமை நீருக்கடியில் நீந்தித் தப்புகிறது”

என்ற வரும் கடைசி மூன்று வரிகளின் ஆழமும் கிண்டலும் இன்றைய சூழலில் எந்த அரசியலுக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது. உலகளாவிய தேசிய பாதுகாப்புக் குறித்த கேள்வியை எழுப்புகிறது.

அட இதைத்தானே நாம் நினைத்துக்கொண்டிருந்தோம் என்ற இணைய வைக்கும் கவிதைகளாக உள்ளன தோமஸின் கவிதைகள். எந்தச் சிறந்த கவிதையும் இப்படித்தான் இருக்கும். சாதாரண வாசகனையும் தன்னோடு இணைத்துக்கொள்ளும். பிரமிளின் கவிதைகள்போல், எளிமையான காட்சிகளை, படிமங்களால் நிரப்பி, ஆழமாக சிந்திக்க வைக்கின்றன இவரது பல கவிதைகள்.

ஏப்ரலும் அமைதியும்

வெறிச்சோடிக் கிடக்கிறது வசந்தகாலம்
எதிரொளிப்புகளற்ற கருத்த கால்வாய்
என்னருகே தவழ்கிறது.
மஞ்சள் பூக்கள் மட்டுமே
பிரகாசமாயுள்ளன.
கரும் பெட்டியில் அடைக்கப்பட்ட வயலினென
நிழலில் சுமக்கப்படுகிறேன் நான்.
நான் சொல்வதெல்லாம்,
அடகுக்கடை வெள்ளியின்
எட்டாத ஒளி.

என்ற தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் கவிதையைப் படிக்கும்போது, பிரமிளின்

பாலை
பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.

என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.

ஆகிய கவிதைகள் நினைவிலாடுகின்றன.

பிரமிள் அளவுக்கு படிமங்கள் ட்ரான்ஸ்ட்ரோமர் கவிதைகளில் இல்லையென்றாலும் (ஒருவேளை ஆங்கில மொழிபெயர்ப்பில் மொழி இன்பமும் படிம அழகும் குறைந்திருக்கலாம். மொழி பெயர்ப்பில் இவை சாத்தியம்தான்) ட்ரான்ஸ்ட்ரோமர் கவிதைகளுக்கு உயிர்ப்பூட்டுவையாக படிமங்கள் உள்ளன. மலைஉச்சியிலிருந்து உலகைப் பார்க்கின்ற அவரின் கவிதைகள், ஆழ்மன ரகசியங்களை சுவீடன் நாட்டின் வளைந்து நெளிந்த நிலப்பரப்புடன் தொடர்புபடுத்தி யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளன என்று சுவீடன் அகாடமியின் நிரந்தரச் செயலாளர் பீட்டர் எங்குலுண்ட். ஸ்காட்லாந்து நாட்டுக் கவிர் ராபின் ஃபுல்டன், “மற்ற கவிஞர்களைப் போலல்லாமல், தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் பயன்படுத்தும் மொழி எளிமையானது; ஆரவாரமற்றது. ஆனால் பரிச்சயமில்லாத காட்சிகளைக் கொடுத்து, வாசகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவார். கவிஞர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்,” என வர்ணிக்கிறார். ட்ரான்ஸ்ட்ரோமரின் ‘தனிமை (I)’ கவிதையில் இதை நன்கு உணர முடிகிறது. நள்ளிரவில் மயிரிழையில் சாலை விபத்தில் தப்பிய ஒரு சம்பவத்தை படிமங்கள் மூலம் பல அடுக்குகளுக்குக் கொண்டு சென்று விடுகிறார் ட்ரான்ஸ்ட்ரோமர்.

தனிமை (I)

நான் கிட்டத்தட்ட கொல்லப்பட்டு விட்டேன், ஒரு பிப்ரவரி இரவில்
எனது கார் நடுங்கியபடி, பனிப் பாதையில் வழுக்கித்
தடம் மாறிச் சென்றது. என் மீது ஒளியுமிழ்ந்தபடி விரைந்தன
எதிர்ப்புற வாகனங்கள்.

எனது பெயர், எனது பெண்கள், எனது வேலை, எல்லாமே
விட்டு விலகி விலகி சென்று, சிறு புள்ளிகளாயின.
நான் எதுவுமற்றவன்:
விளையாட்டுத் திடலில் திடீரென சூழப்பட்டவன்ச

முட்டையின் வெள்ளைக்கருவென தெளிந்த, வழக்கும்
பனியில் சறுக்கிய காரை பிடித்திழுக்கும் எனை
எதிர்ப்புறக் கார்களின் வெளிச்சம்
வீழ்த்தின.
எனது வெளியை பெரிதாக்கியபடி
பெரும் மருத்துவமனை போன்று விரிந்து
வளர்ந்து கொண்டே இருந்தன விநாடிகள்

விபத்துக்கு முன்
மூச்சையிழுத்து
ஓய்வெடுக்கலாம் என நினைத்தேன்

அப்போது அது வந்தது: உதவிக் குணம் கொண்ட மண்ணோ
அல்லது தக்க தருணத்தில் வீசும் காற்றோ. கார்
மீண்டு பாதை சேர்ந்தது.
பலத்த ஒலியுடன் வெடித்துச் சிதறிய
ஒரு வழிகாட்டி கம்பம்
இருளில் கரைந்தது

பேரமைதி. இருக்கையில் அமர்ந்து,
என்னிடம் மீந்திருப்பதைத் துழாவியபடி
சுழன்றடிக்கும் பனிக்காற்றில்
நகர்பவனைப் பார்க்கிறேன்.

ஏற்கனவே ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகளை மேலும் தமிழாக்கம் செய்யும்போது, கவிதைகளின் அழுத்தம் சற்றுக் குறைந்திருக்கலாம். எனினும் அவை சொல்ல வரும் செய்தி, பொதுவானதாகவும் எவராலும் உணரக்கூடியவையாகவே உள்ளன.

ரவீந்திரநாத் தாகூர், பிலிப்னீஸ் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் ரோமியுலோ போன்றோரைப் போல் பல திறன்களைக் கொண்டவர் தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர். சிறந்த கவிஞர், திறமையான மொழிபெயர்ப்பாளர், பன்மொழிப் புலமையாளர், மனோதத்துவ மருத்துவர், கைதேர்ந்த பியானோக் கலைஞர், பூச்சிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர். இவரது பலதிறன் ஆற்றலும் ஆழ்ந்த அறிவும் வாழ்வு குறித்த தேடலை மிக ஆழமாக்கியுள்ள அதேநேரத்தில், அவற்றை சாதாரணமான மொழியில், அழகியலோடு எடுத்துரைக்கும் ஆற்றலையும் தந்துள்ளன.

சூரியன்களுடனான நிலங்கள்

வீட்டுக்குப் பின்னால் எழுந்த சூரியன்
நடுவீதியில் நின்று
தனது செங் காற்றினால்
நம்மீது சுவாசித்தது.
‘இன்ஸ்பிரக்’ உன்னிடம் விடைபெற வேண்டும்
ஆனால்
நாங்கள் வேலை செய்து வாழும்
சாம்பல் நிற, பாதி மரித்த காட்டில்
நாளை
ஒளிமிகு சூரியன் எழும்.

பனியின் இடைக்காலம்

எனது ஆடையிலிருந்தொ
ஒரு நீல ஒளி படர்கிறது.
பனியில் இடைக்காலம்.
ஓங்கியொலிக்கும் பனியில் தாளம்.
கண்களை மூடினேன்.
அமைதியான உலகில்
இறந்தவர்கள்
எல்லை தாண்டி கடத்தப்படும்
விரிசல்.

இந்தக் கவிதைகளை எந்த நாட்டில் வசிப்பவராலும் படித்து உணர முடியும். அவரது சூழலுக்கே படிமங்களைத் தாண்டி, அவை சொல்ல வரும் மனித உணர்வோடு ஒன்ற முடியும்.

ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் இலக்கியம், அறிவியல், உளவியல் பாடப்பிரிவுகளில் 1956ம் ஆண்டு பட்டம் பெற்ற அவர், உளவியலாளராகப் பணியாற்றிக்கொண்டே, தனது இலக்கியப் பணியையும் தொடர்ந்தார்.

1966-ல் அவர் வெளியிட்ட ‘விண்டோ ஸ் அண்ட் ஸ்டோன்ஸ்’ என்ற தொகுப்பு மிகவும் புகழ் பெற்றது. தோமஸின் ஸ்வீடன் பதிப்பகமான போனியர்ஸ், 1954 முதல் 2004-ம் ஆண்டு வரையிலான அவரது படைப்புகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அவரது 80-வது பிறந்தநாளை முன்னிட்டு இத்தொகுப்பு வெளியானது.

2000ஆம் ஆண்டில் ‘செலக்டட் போயம்ஸ்’, 2001ல் ‘தி ஹாப் பினிஷ்ட் ஹெவன்’, 2004ல் ‘தி கிரேட் எனிக்மா’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் தோமஸின் பெயர் சொல்லும் படைப்புகள் ஆகும். இவர் எழுதிய, ‘மிஸ்டிக்கல் வெர்சடைல் அண்ட் சேட்’ என்ற கவிதைத் தொகுப்பு, 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 1931 ஏப்ரல் 15-ல் தோமஸ் டிரான்ஸ்ட்ரோமர் பிறந்தார். அவரது தாய் ஆசிரியை, தந்தை பத்திரிகையாளர். பள்ளியில் படிக்கும்போதே கவிதைகளை எழுதத் தொடங்கிய அவர், 23-வது வயதில் ‘செவன்டீன் போயம்ஸ்’ என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.

கடந்த 1990ஆம் ஆண்டில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதால், உடலின் இடது பகுதி முற்றிலுமாக செயல் இழந்தது. அவரால் பேச முடியாமலும் போனது. பேச முடியாமல் போனாலும் தனது இலக்கியப் பணியையும், மன உறுதியையும் அவர் கைவிடவில்லை. அவரின் கவிதைகள் ஆங்கிலம் உள்பட 60 மொழிகளில் புகழ்பெற்ற பிற மொழி கவிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவர் பெல்மேன் பிரைஸ், ஜெர்மனியின் பெட்ரார்க் பிரைஸ், கவிதைக்கான போன்னியர் விருது, இலக்கியத்துக்கான நியூஸ்டாட் அனைத்துலக விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதை மொழிப்பெயர்ப்பு : லதா

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768