|
கட்டுரை
கோ. முனியாண்டி கொட்டிய குப்பை
ம. நவீன்
கோ. முனியாண்டி மிக அண்மையில் வெளியீடு செய்த 'ராமனின்
நிறங்கள்' எனும் நாவல் குறித்த (வாசகர்கள் புரிந்துகொள்வதற்காக
நாவல் என இங்கே சுட்டுகிறேன்) எனது பார்வையை எழுதுகிறேன்
எனச்சொல்லி மூன்று மாதங்கள் ஆன நிலையில் இப்போதுதான் அது குறித்து
எழுதும் மனம் வாய்த்துள்ளது...
குரு தட்சணை
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி
அப்போது எனக்கு 13 வயது. அன்று நாட்டிய வகுப்பு. அந்த வயதில்
படிப்பும் நடன வகுப்பும் மட்டுமே எனது உலகமாக இருந்தது. சிந்தனை
செயல் அனைத்தும் பரதத்தையொட்டியே இருந்த காலம் அது. வழக்கம் போல
அன்று நடன வகுப்பு இறை மற்றும் குரு வணக்கத்துடன் ஆரம்பித்தது...
தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் : சொற்கள் தொகுக்கும் சித்திரங்கள்
லதா
இந்த ஆண்டுக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்படும் வரை கவிஞர்
தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் பற்றி எதுவும் நான் அறிந்திருக்கவில்லை.
பின்னரும் அவரைப் பற்றிய தகவல்கள் இணையங்களில் வெளிவந்த அளவுக்கு
அவரது படைப்புகள் குறித்தோ, அவரின் கவிதைகளோ இடம்பெறவில்லை...
தக்க வைத்தல்
ஷம்மிக்கா
நான் நூல் நிலையம் செல்லும் சமயங்களில் அடிக்கடி ஒரு வயது
முதிர்ந்தவரைச் சந்திப்பேன். அவர் தனது மனைவி மகளுடன் வந்து
நிறையவே தமிழ்ப் புத்தகங்களை எடுத்துச் செல்வார். ஒரு தடவையில் 25
புத்தகங்கள் மட்டில் இங்கு எடுத்துச் செல்லலாம். ஒரு மாதம் வரையும்
வைத்திருந்து படிக்கலாம்...
பத்தி
புலம்பெயர் முகங்கள்... 4
வி. ஜீவகுமாரன்
புலம் பெயர்ந்தநாடுகளின் இன்றைய கலாச்சாரசூழ்நிலை, வாழ்க்கைமுறை, பொருளாதார அமைப்பு என்பன தென்கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது 180 பாகையூடாக மாறியதாகவே இந்தநாட்டினுள் வந்தவுடன் அனைவரும் உணர்ந்துகொள்வார்கள்...
சிறுகதை
குளியல்
கே. பாலமுருகன்
துண்டை இழுத்துக் கட்டும்போது அது தொடைவரை இறங்கி கால்களைக்
கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது. என்னுடைய குளியல் நேரம் சரியாக 6
மணிக்குத் தொடங்கும். முன்கதவை அடைத்துவிட்டு அறைக்கதவை தாழ்ப்பாள்
போட்டுவிட்டு முதலில் ஆடையைக் களைவேன். சிறிது நேரம் நிர்வாணமாக
இருப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு குளியலுக்கு முன்பும் குளியலின்
போதும் உருவாகும் இந்தக் கணம் மட்டுமே...
|
|
கேள்வி பதில்
கவிதை
அறிவிப்பு
நண்பர்களுக்கு வணக்கம். நேர்காணல் இதழ் இதுவரை நான்கு இதழ்கள் வந்துள்ளது.
ந.முத்துசாமி, வண்ணநிலவன், நடிகர் நாசர் மற்றும் வெ.ஸ்ரீராம். இது
தமிழின் முதல் முயற்சி. அடுத்த இதழ் ஜனவரி புத்தகக்
கண்காட்சியையொட்டி வெளிவரும். தொடர்ந்து சமரசமில்லாமல் கொண்டுவர
ஆசை. நண்பர்களின் உதவியினால்தான் கொண்டுவர முடிகிறது. உதவ
வேண்டுகிறேன்.
நன்றி.
மிக்க அன்புடன்,
பவுத்த அய்யனார்
ஆசிரியர் - நேர்காணல்
Phone - 90947 83000
P. Ayyanar,
3/363, Pajanai Koil St.,
Kelambakkam, Chennai-603 103.
|
|