முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 36
டிசம்பர் 2011

  மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள் ...12
ஏ. தேவராஜன்
 
 
       
நேர்காணல்:

'தமிழின் நவீன கவிதையைவிட மிகச் சிறப்பாக ஒப்பாரி வைக்க எந்தக் கவிதைகளாலும் முடியாது' றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 3
ம. நவீன் - கே. பாலமுருகன்


"தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை"
நிலாந்தன்



கட்டுரை:

கோ. முனியாண்டி கொட்டிய குப்பை
ம. நவீன்

குரு தட்சணை
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் : சொற்கள் தொகுக்கும் சித்திரங்கள்
லதா

தக்க வைத்தல்

ஷம்மிக்கா



பத்தி:

புலம்பெயர் முகங்கள்... 4
வி. ஜீவகுமாரன்



சிறுகதை:

குளியல்
கே. பாலமுருகன்



அறிவிப்பு:

நேர்காணல் இதழ்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...26

வ.ஐ.ச.ஜெயபாலன்

ந. பெரியசாமி

ராஜா

எம். கே. குமார்

எலிக்குப் பயப்பட்டுப் பழகி பின்பு புலியைப் பந்தாடுவோம்!

சிறகு முளைத்த கதை
மறந்து போயிருந்தது
கிளிக்கு
புலி துரத்தியபோதுதான் ‎
கிலி பிடித்தது
இப்போது தேவை
புலியல்ல
எலி!

மாணவர்கள் சீரழிந்து போவதற்கு மூலக் காரணமே சினிமாதான், அதிலும் தமிழ்ச் சினிமாவினால் கெட்டுக் குட்டிச் சுவராகிப் போனவர் அநேகரெனக் கற்றறிந்த பலரும் கண்ட மேனிக்கு விடும் அறிக்கையாகிவிட்டது. மலேசியச் சூழலில் தமிழை நிலைநிறுத்துவதில் (வளர்ப்பதல்ல) தமிழ்ச் சினிமாவின் பங்கு மகத்தானது என்பது எமது தாழ்மையான கருத்து. தமிழ்ச் சினிமாவற்ற மலேசிய தமிழர்களின் அரைநூற்றாண்டுத் தமிழின் புழக்கத்தை மாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியுள்ளது.முன்பெல்லாம் தரமான தமிழ் காத்த திரைப்படங்கள் வந்த காலத்திலேயே நல்ல தமிழ் வாசிப்பும் இலக்கியப் பரிட்சயமும் ஒரு சேர இருந்த காரணத்தால் சினிமா உள்ளீடுகள் இரண்டாம் பட்சமாகவே இருந்தன. ஆனால், இன்றைய நிலையில், அன்றாட வாழ்க்கையில் தமிழின் நிலைப்பாடு உறுதியற்றதாக இருப்பதுபோல் உள்ளது. அதற்கு மாறிப் போன இன்றைய வாழ்க்கை முறையைச் சொல்லியாக வேண்டும்.

இதற்கிடையில் இலக்கியத்தைக் கொண்டு செல்வதும் அதனால் மொழி இயக்கம் நீட்சிப்படவும் யோசிக்க வேண்டிய திகில் உருவாகியுள்ளது.இன்றைய மலேசியத் தமிழ்ச் சூழலில் தமிழ் மொழியின் ஆளுமையும் புனைவிலக்கிய ஆக்கமும் பள்ளியில் வளர்கின்றனவோ இல்லையோ, அ•து அவசியமோ இல்லையோ, பேச்சு மொழி தமிழகத்தைவிட செழுமையாகவே வளர்ந்துள்ளது என்று கூறுவோரும் உளர். தமிழ் மொழியைக் கற்க எதற்குத் தமிழ்ப்பள்ளி, அ•து அவசியமேயில்லை எனும் சாராருக்கும், ஏனோதானோவென்று வழக்கம்போல பிள்ளைகளைப் பள்ளிக்குப் பிடித்துத் தள்ளும் பெற்றோர்களுக்கும் மத்தியில், பள்ளியின் பாடத்திட்டம் பரிந்துரைக்கும் தமிழ் மொழித் திறன்களைக் கைக்கொள்ள வேண்டுமெனும் ஆர்வம் உண்மையில் இருக்கிறதா எனும் கேள்விக்குச் சட்டென்று இல்லையென்று கூற முடியும். அந்தத் திறன்களைக் கற்று இன்றைய உலகில் எதைத்தான் சாதிக்க முடியும், மாண்டரினைக் கற்றாலாவது நாலு வார்த்தை பேசிப் பிழைத்துக்கொள்ளலாம் என்பதான புரிதல் அவர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இவர்களுக்கு மத்தியில், தமிழுணர்வின் காரணமாகத் தமிழைச் சுய வாசிப்பின் மூலம் வளப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் பற்று வெகுச் சிலரிடமே உண்டு. பெரும்பாலோருக்குத் தமிழின் ஆழ அகலங்களையோ அதன் இலக்கியச் செழுமையை உள்வாங்குவது பற்றியோ எள்ளளவும் பிரக்ஞையில்லை. சிலர் அத்தகையவர்களைப் போல் ‘பாவ்லா’ காட்டுவதை ஆங்காங்கு நடைபெறும் இலக்கியக் கருத்தரங்கில் கட்டணம் செலுத்திக் கலந்துகொண்டு அடையாளம் காட்ட முனைகின்றனர். இவர்களில் முன்னணியில் இருப்பவர்கள் இடைநிலைப் பள்ளித் தமிழாசிரியர்கள் என்ற சின்ன ஆறுதல் இருந்தாலும், ஆரம்பப் பள்ளித் தமிழாசிரியர்களின் ஈடுபாடு படு மோசமாக உள்ளது. அப்படியே நிகழ்வில் கல்ந்து கற்றுக்கொண்டாலும், அது எவ்வளவு தூரம் இன்றைய தொழிலியல்-பொருளியல் வாழ்க்கைக்கு உதவி செய்யும் என்பதே அவர்களது இரகசியக் கேள்வியாய்த் தொக்கி நிற்கிறது. இதற்கு மத்தியில் இந்த உணர்தலை மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் பெரும் பங்கு தமிழாசிரியர்களிடம் உண்டு என்று கூறினாலும் பெற்றோர்களைவிட இவர்களின் மொழி குறித்த அக்கறை படுமோசமாக உள்ளது!

தமிழ்ப் பள்ளிகளின் பயணம் கண்களுக்கு மங்கலாகவே தட்டுப்படுகிறது.அப்படியே இருந்தாலும், அது கூண்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது.கற்றல் திறன்களிலும் தேர்வு அடைவு நிலையினிலும் மட்டுமே குறியாய்க் கிடக்கும் தமிழாசிரியர்களுக்கு அதைத் தாண்டி தமிழை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகவே, மலேசியக் கல்விச் சூழலில் எல்லாப் பாடங்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் அவற்றின் வளர்ச்சிக்கு மற்றப் பிற அணுகூலங்கள் அவற்றை வளர்த்துவிடும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. ஆனால், தமிழைப் பொறுத்தமட்டில் மற்றப் பிறரைவிட தமிழாசிரியர்களையே அதிகம் நம்பிக்கொண்டிருக்க வேண்டியுள்ளது. ஆசிரியர்களின் மீது தமிழ்ச் சமூகம் வைத்திருக்கிற பிளவுபடாத புனித பிம்பம் இன்னும் தூர்ந்து போகவில்லையென்றாலும், இன்றைய சவால்மிக்க நிலையில் தமிழாசிரியர்கள் தங்களைத் தமிழிலிருந்து மேன்மேலும் தொலைத்துவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இன்னொரு பக்கம் பெற்றோர் குழாமில் இருக்கின்ற மெத்தனம் இன்னமும் வீழ்ச்சியில் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.

இந்தச் சூழலில் தமிழ் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறது எனும் கேள்வியை முன் வைப்போம்.ஆக, பள்ளியும் இல்லமும் கைவிட ,தமிழ் மாணவர்கள் தங்களின் தமிழை வேறு தளத்தில் தேட வேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம். உலகமயமாதலின் விளைவாகப் பலதிறப்பட்ட தரவுகள் உள்நுழைய, அவற்றைக் கிரகிப்பதில் ஆசிரியர்களைவிட மாணவர்களே முன்னணியில் இருக்கிறார்கள்.அவர்களின் இரசனைத்திறத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஆசிரியர்களால் ஈடுகொடுகொடுக்க அல்லது அவர்களைத் தங்களின் வழிக்குக் கொண்டு வர மிகவும் சிரமமாயிருக்கிறது. அப்படியே மாணவர்கள் தற்கால உலகில் நின்று ஏதேனும் கேட்டுவிட்டால், அதற்குரிய பதிலை வழங்கவியலாமல் பள்ளித் தேர்வை முன்னிலைப்படுத்திக் கதையை அலேக்காகத் திருப்ப, மாணவர்களின் பார்வை வேறு பக்கம் திரும்புகிறது. அந்த வகையில் அவர்களின் தேடல்களுக்குத் தீனி போடுபவை வானொலியும் தொலைக்காட்சியுந்தான். அதைவிட மேன்மையானதாக இன்றைய இணைய உலகம் யாதுமாகி அவர்களுக்கு வடிகாலாகிவிட்டது.

அவர்களைப் பொறுத்தமட்டில் தமிழ் வெகு இயல்பான வாழ்க்கை மொழியாகப் பேச்சு வழக்கில் இருந்துவிட்டால் போதும், ஆழமான வாசிப்போ அதன் மூலம் கிடைக்கும் அகவின்பமோ,ஆக்கத் திறனோ தேவையில்லை என்பது அவர்களின் அசைக்க முடியாத கருத்து.

இப்படிப்பட்ட சூழலில்தான் இன்றைய மலேசிய தமிழ்க் கல்வியுலகம் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதில் தமிழாசிரியர்கள் ஆற்ற வேண்டிய பங்கு ஏராளம் உள்ளது. ஆசிரியர்ப் பணியை வேறு வழியே இல்லாத வெறும் வருமானம் தரும் பணியாகவோ, சராசரித் தொழிலாகவோ கருதாமல் கூடுதல் பொறுப்புடன் சேவையாற்ற வேண்டும். மலேசிய தமிழ்ச் சமூகம் கடந்த காலத்தைப் போல், இன்றைய தமிழாசிரியர்களின் மீது அறிந்தோ அறியாமலோ பெரும் நம்பிக்கையை வைத்துள்ளது. தமிழாசிரியர்களால் மாணவர்களின் சிந்தனையை மட்டுமல்ல, அவர்களின் மொழி, இனப் பற்றோடு வாழ்வின் மீது ஒழுக்கத்தையும் நம்பிக்கையையும் இரட்டிப்பாக்க முடியும் என நம்பிக்கொண்டிருக்கிறது. கடமைக்கப்பால் மொழி சார்ந்த அவர்களின் பொதுப் பணியும் அதிகம் தேவைப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லாத் தமிழாசிரியர்களும் ஆலய ஆன்மிக நடவடிக்கைகளுக்கு முதல் சலுகை வழங்குகிறார்கள். ஆனால்,சமூகம், கலை, இலக்கியம்,மொழி என்றாலோ மனம் சுணங்கி முகம் சுருங்கிப் போய்விடுகிறார்கள். முன்னது இறமையைத் தேடிப் போவது. பின்னது, முன்னதைவிட பழமையும் பண்பும் மிக்கது. இந்தப் ‘ பின்னதை’ அநேகமாக ஒரு பொருட்டாகக் கருதாத நிலை பலரிடத்தில் வேரூன்றியுள்ளது. முன்னதை வளர்க்க வேண்டிய அவசியமே இல்லை; அது வளர்வதற்குரிய மக்களும் சமஸ்தானமும் பீடமும் உலகம் முழுக்க ஆல் போல் தழைத்துக்கொண்டிருக்கிறது; புதுசு புதுசாய் முளைத்துக்கொண்டிருக்கிறது. முன்னதை நாம் உருவகிக்க முடியாது. பின்னது நம் கண்ணேதிரிலேயே நிகழ்வது. புரியாத முன்னதுக்கே இத்துணை யத்தனம் என்றால், நம் உயிரிலும் தாய்மையிலும் கலந்த ஒன்றுக்கு எத்துணை யத்தனம் இருக்க வேண்டும்?பின்னதைப் பற்றிக் கொஞ்சமாவது உணர்ந்துகொள்ளவும் அதன் நீட்சியைக் கிரகித்துக்கொள்ளவும் காலத்தோடு கொண்டு செல்லவும் என்ன முடியாத காரியமா? முன்னதில் காட்டும் அக்கறையில் கடுகளாவது பின்னதில் காட்டக்கூடாதா?கலை, இலக்கியம்,பண்பாடு,மொழி போன்றவற்றை அறிவதற்கு வாசிப்பு வளாகத்தைத் தமிழாசிரியர்கள் விரிவுபடுத்த வேண்டும். அதிலும், இன்றைய கலை, இலக்கியப் போக்கை மாணவர்களிடத்தில் அறிமுகப்படுத்தி அவர்களின் உலகத்தை அவர்களிடமே காட்டி, அவர்கள் உய்த்ததை ‘அவர்களது தமிழில்’ பெயர்த்துக்கொடுக்க ஊக்கப்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் பெற்றோர்களைத் தவிர்த்துத் தமிழாசிரியர்களின் பங்களிப்பு மிக அதிகம். காலத்திற்கேற்ற உள்ளீடுகளை அதுவும் நமது மொழியில் கொண்டு சேர்ப்பிக்கும் பொறுப்பைத் தமிழாசிரியர்கள் கைவிடுவார்களேயானால், மாணவர்கள் நுகர்வின்பக் கலாச்சாரத்தில், பேச்சு மொழிக்கு இன்பம் சேர்க்கும் ஊடகத்தை மட்டுமே நாடிப் போய், காலப்போக்கில் புத்தாக்கங்களின் மயானத்துக்கு எல்லோருமே காரணமாகிவிடுவோம்.

தமிழாசிரியர்கள் சமூக இயக்கங்களில் தெளிவு நிலையில் இணைந்தோ, தனி நபராகவோ இம்மொழிப்பணியை முடுக்கிவிடலாம். இயக்கங்களின் தலைமைத்துவம் சரிபட்டுவராதெனில், தனிநபராகவே இயங்குவது உசிதம். தமிழாசிரியர்கள் மனம் வைத்தால் இக்காரியத்தைப் பள்ளி அல்லது தங்கள் வாழ்விடத்தில் செய்துவிடலாம். முன்னதுக்கு விளம்பரம் தேவையில்லை.பின்னதை நனவாக்க தமிழாசிரியர்கள் மனம் வைத்தால் கூடும். காரணம்,பின்னதை வளர்க்க நம்மைத் தவிர வேறு யார் உண்டு?

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768