முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 37
ஜனவரி 2012

  வழித்துணை... 13
ப. மணிஜெகதீசன்
 
 
       
வல்லினம் பதிப்பக நூல்கள்:

சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்

தீர்ந்து போகாத வெண்கட்டிகள்: நான் ஒரு கதை உருவாக்கி
கே. பாலமுருகன்

கடக்க முடியாத காலம்
ம. நவீன்

துடைக்கப்படாத இரத்தக்கறைகள்: நினைவில் உயிர்த்திருக்கும் வாழ்வு
யோகி

என்னை நாயென்று கூப்பிடுங்கள்
ரேணுகா



கட்டுரை:

அபிநயம்
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

'உம்மை நீர் விற்க வேண்டும்!'
ஷம்மிக்கா



பத்தி:

புலம்பெயர் முகங்கள்... 5
வி. ஜீவகுமாரன்



திரைப்பார்வை:

போராளி : மனநோய் சித்திரம்
கே. பாலமுருகன்



பதிவு:

வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா
இ. ஏகன்




கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

தர்மினி பக்கம்
தர்மினி



நேர்காணல் இதழ் 4 (அக்டோபர் - டிசம்பர் 2011)



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...27

ந. பெரியசாமி

எம். ரிஷான் ஷெரீப்

கணேஷ்

ராஜா

ம. நவீன்

2011-க்கு வணக்கம் சொல்லி வழியனுப்பும் தருணம் இது!

I

கெடா மாநில எழுத்தாளர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த 'மலேசிய தமிழிலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்' ஆய்வரங்கிற்கு நண்பர் குமாரசாமியுடன் சென்றிருந்தேன். அநேகமாக இந்த ஆண்டில் கலந்து கொள்ளும் இறுதி இலக்கிய நிகழ்ச்சியாக இது இருக்கலாம். சிறப்பாக, நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தனர். சங்கத்திற்கும், ஏற்பாட்டுக் குழுவினருக்கும் மனமுவந்த வாழ்த்துகள். அவை நிறைந்த கூட்டம், நல்ல உணவு, கோப்பு, குறிப்புகள் அனைத்தும் இலவசம். மிகப் பெரிய முயற்சி. இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும்.

மூன்று அமர்வுகளில் மட்டுமே பங்கேற்க நேரமிருந்தது. நாவலில் பெண்ணிலக்கியவாதிகள் என்ற அமர்வில் கலந்துகொள்ளவில்லை. காரணம் - Barcelona FC v Santos!!! இறுதி ஆட்டம். `நீங்களுமா` என்று கேட்ட திருமதி கோமதியிடம் வணக்கம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம். பார்சிலோனா விளையாடுவதைக் காண்பதே ஒரு கவிதை அனுபவம்தான்!

வெகு தொலைவில் இருந்தெல்லாம் எழுத்தாளர்கள் / பார்வையாளர்கள் வந்திருந்தனர். மூத்த எழுத்தாளர்கள் பலரைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான அனுபவம். பலரின் முகத்தில் ஒரு `பிக்னிக்` வந்த மலர்ச்சி. மலாக்கா முத்துகிருஷ்ணன் ரொம்பவும் நட்புணர்வுடன் பழகினார்.

சரி, ஆய்வரங்கு எப்படி இருந்தது?

- ஒரு நாள் நிச்சயம் போதாது. அல்லது, இரண்டு அமர்வுகள் மட்டும் ஏற்பாடு செய்திருக்கலாம். கட்டுரையாளர்கள் போதிய அவகாசமின்றி, அவசர அவசரமாக வாசித்துவிட்டுச் சென்றனர்.

- தலைமை தாங்கியவர்கள், திரு சீனி நைனா முகம்மது அவர்களைத் தவிர்த்து (இவரும் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார், ஆனால் கட்டுரையாளரின் வேண்டுகோள் அப்படி), மிக அதிக நேரத்தை (35 - 45 நிமிடங்கள் வரை!) எடுத்துக் கொண்டனர். கட்டுரைப் படைக்க கொடுக்கப்பட்ட 1 மணி நேரத்தில் அறிமுக 'உரையாற்ற' இவ்வளவு நேரமானதால்... ராஜம் ராஜேந்திரன் தன்னுடைய நேரம் 'திருடப்பட்டதை' நேரடியாகவே சொன்னார்!

- அப்புறம்... விவாத அரங்கு... வாய்ப்பே இல்லை! (நேரமிருந்தால்தானே...) ஆய்வரங்கு என்பதைவிட பெண்ணிலக்கியவாதிகளின் பங்களிப்பு பற்றிய செய்திகளே அதிகம் பகிரப்பட்டன.

- கமலாதேவி அரவிந்தனின் கட்டுரையில் அவரது பரந்த வாசிப்பு பயனர அமைந்தது. பல எழுத்தாளர்களின் படைப்புகளைச் சொல்ல வேண்டிய நிலையில் அவரது ஒப்பீட்டுப் பார்வை மேலோட்டமாகவே இருந்தது. அவர், தொடர்க்கட்டுரைகளாக எழுதினால் ஒரு சீரிய பங்களிப்பாக இருக்கும்.

- ராஜம் ராஜேந்திரன் புதுக் கவிதை, நவீனக் கவிதை ஆகியவைப் பற்றிப் பேசினார். 2005-க்குப் பிறகு, நவீன கவிதை / புதிய கவிதை மொழியில் எழுதும் இளம் பெண் எழுத்தாளர்கள் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசியது வரவேற்கத்தக்கது. ஆய்வாளர்களின் பணி சுலபமானதல்ல. நாளிதழ் / புத்தகம் வாசிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், சிற்றிதழ்கள், வலைத் தளங்கள் என்று பார்த்துக் குறிப்பெடுக்க வேண்டியுள்ளது. கவிதைகளின் உள்ளீடு, சொல் தேர்வு, ஆக்க நேர்த்தி போன்ற விவரங்களையும் கட்டுரையாளர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டால் மேலும் சிறப்பாக இருக்கும்

பொதுவாகவே, நிகழ்ச்சி ஒரு மாதிரியான பிரிவேக்க / களிப்பூட்டும் / reunion போலவே இருந்தது. அப்படி அமைந்ததுதான் நிகழ்ச்சியின் ஒரு வெற்றியாகக் கருதுகிறேன். புதிய / இளம் எழுத்தாளர்கள் சிலர்தான் வந்திருந்தனர். கெடா மாநில எழுத்தாளர்கள் பெரும்பாலோர் விடுமுறையைக் கழிக்க வெளியூர் போயிட்டாங்களோ?

மீண்டும், கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத் தலைவர் திருமதி க. பாக்கியம் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

II

2011-ல் என்ன சாதித்தோம் என்று கூட்டிக் கழித்துப் பார்த்தால்... 2010 போலத்தான் வருகிறது. அதாவது ஒண்ணும் உருப்படியாச் செய்யலணு! ஆகவே, 2012-ல் என்னென்னவெல்லாம் செய்யணும் என்று 2010-ன் குறிப்புகளைப் பார்த்து புதிய பட்டியல் போட்டு இருக்கிறேன், இப்படியாக.

- இணையத்திலேயே வாழ்க்கையைத் தொலைக்காமல், குடும்பத்தையும் கவனிக்கணும்.

- புதிய எழுத்தாளர்கள் / இதுவரை படித்திராத எழுத்தாளர்கள் 5 பேரையாவது வாசிக்கணும்.

- வாசித்தே தீரவேண்டிய 10 புத்தகங்களை மேசையின் மீது எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

- இலக்கியம் சார்ந்த பயணங்கள் / சந்திப்புகளை அதிகரிக்க வேண்டும், குறைந்தது 5 பயணங்கள்.

- மாதத்திற்கு 2 கட்டுரையாவது எழுதவேண்டும்.

பெரும் இலக்கிய ஆக்கங்களைப் படைத்த, என் மரபணுவில் எங்கோ மறைந்திருக்கும் என் பாட்டன் பாட்டி, பூட்டன்களே, அன்புசால் மூதாதையர்களே, என் 6-ஆம் அறிவையாவது சரியாக பயன்படுத்த வழி காட்டுங்கள்!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768