முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 39
மார்ச் 2012

  புத்தகப்பார்வை : தீர்ந்து போகாத வெண்கட்டிகள்
சு.காளிதாஸ்
 
 
       
பதிவு:

கலை இலக்கிய விழா 4 : நிறைவுறாத நிகழ்வுகள்

ம. நவீன்



எழுத்தாளர் எம். குமாரன் மறைவையொட்டி அஞ்சலி பதிவுகள்:


அஞ்சலி - எம். குமாரன் : காணாமல் போகும் தொலைபேசி எண்கள்!
ம. நவீன்

சிறுகதை : சீனக் கிழவன்
எம். குமாரன்

எம். குமாரனின் 'செம்மண்ணும் நீல மலர்களும்'
ம. நவீன்



வல்லினம் கலை, இலக்கிய விழா 4 தொடர்பான பதிவுகள்:

நினைவுக் குறிப்பு : அ. மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, தேவாவின் மலேசிய வருகை
ம. நவீன்

புத்தகப்பார்வை : துடைக்கப்படாத இரத்தக் கறைகள்
பூங்குழலி வீரன்

புத்தகப்பார்வை : தீர்ந்து போகாத வெண்கட்டிகள்
சு. காளிதாஸ்

புத்தகப்பார்வை : கடக்க முடியாத காலம்
அகிலன்

புத்தகப்பார்வை : என்னை நாயென்று கூப்பிடுங்கள்!
மா. சண்முகசிவா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



கட்டுரை:

இழக்கப்பட்ட தேசிய சினிமா
கே. பாலமுருகன்



சிறுகதை:

மேம்பாலம்
கே. பாலமுருகன்



புத்தகப்பார்வை:

தானே மழையாகிப் பெய்யும் 'எதுவும் பேசாத மழை நாள்'
கிண்ணியா எஸ். பாயிஸா அலி



தொட‌ர்:

இனியவளின் குறிப்புகள்
பூங்குழலி வீரன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...29

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ஸ்ரீவிஜி

சின்னப்பயல்

குமரன்

கருணாகரன்

தீர்ந்து போகாத வெண்கட்டிகள் என்ற சினிமா கட்டுரையின் தொகுப்பைப் பற்றி ஒரு சில கருத்துகளைக் கூற எனக்கு வாய்ப்பளித்த நண்பர் நவீனுக்கும் பாலமுருகனுக்கும் நன்றி. போரினாலும் அதிகாரத்தினாலும் எப்பொழுதும் பாதிப்புக்குள்ளாபவர்கள் குழந்தைகளே. அவர்களின் மனநிலையையும் வலியையும் வாழ்வியலையும் இக்கட்டுரையும் மூலம் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார் பாலமுருகன். இக்கட்டுரை தொகுப்பில் மொத்தம் பத்து கட்டுரைகள் உள்ளன. சினிமா திரைக்கதைப்பற்றிய புரிதலோடு, சீரிய சினிமாவைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து அதை இலாவகமாக தன் சுய வாழ்க்கை அனுபவத்தோடு கோர்த்து கொடுத்திருக்கிறார்.

சினிமா விமர்சனத்தில் ஐந்து கூறுகள் முக்கியமாக இருக்க வேண்டும். அவை கதைக்கோர்வை (plot), கதைக்களம் (plot keyword), கதைமையம் (theme-sence of believability) கதாப்பாத்திரம் (character), மற்றும் குறியீடு (symbolism) ஆகும். சிறுவர்கள் சினிமா, neorealistic அலை காலக்கட்டத்தில் இத்தாலி தொடங்கி பிறகு மெல்ல ஆசியா சினிமாவை நோக்கி பெரும் பாதிப்பை உருவாக்கியது. சிறுவர் சினிமா அதிகமாக மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுவதற்கான காரணம் அவை எளிதில் நம்பகத்தன்மை உடையது. சிறு சிறு எதிர்பாராத ஆச்சரியங்களைத் தரக்கூடியது. அகத்தேடலில் புதிய புத்துணர்ச்சியைத் தரக்கூடியது. சுருக்கமாகக்கூறின், சிறுவர் சினிமா என்பது நம் மனதுக்கு நெருக்கமானதாகவும் மிகவும் உணர்வுபூர்வமானதாகவும் உள்ளது.

பாலமுருகனின் பத்து கட்டுரைகளில் ஒரு கட்டுரையைத் தேர்ந்தெடுத்து சினிமாவை விமர்சன ரீதியில் அணுகும் முறையில் தொகுத்துப்பார்க்க எண்ணினேன். அதனடிப்படையில் 'திருடப்பட்ட தலைமுறை' எனும் கட்டுரையைத் தேர்வு செய்தேன். ஒரு வகையில் அக்கட்டுரை எனக்கு மிக முக்கியமானதாகப் படுவதும் இத்தேர்வுக்குக் காரணம்.

திருடப்பட்ட தலைமுறை (RABBIT PROOF FENCE)

PLOT - கதைக்கோர்வை

ஆஸ்திரேலிய நிலப்பரப்பின் துயரம் மிகுந்த பகுதியை அம்பலப்படுத்தும் படம். ஆஸ்திரேலிய ஆழ்மனதைத் தேடி அலைந்து இறுதியாக அடைந்த இடம் வேலிகள் (fence). இந்த வேலிகள் மூன்று பகுதிகளாக பிரித்து வைக்கப்பட்டிருந்தன. இது என்ன இடம்? ஏன் இவ்வளவு பெரிய வேலி? இந்த வேலிகள் ஏன் உருவாக்கப்பட்டன? யாரை யாரிடமிருந்து பிரித்து வைக்க இந்த வேலிகள் எழுதப்பட்டன? வேலியை எப்படிக் கடப்பது? மூர் நதியோரம் இருக்கும் அந்தக் காப்பகம் எதற்காக இயங்கிக் கொண்டிருக்கிறது? அங்கிருந்து தப்பிக்கும் அந்த மூன்று சிறுமிகள் யார்? அவர்கள் எங்குச் செல்கிறார்கள்? இதுதான் இப்படத்தின் மையம். இதை ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்வதன் மூலம் இப்படம் நமக்கு சொல்ல வரும் வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடியும்.

Plot keyword - கதைக்களம்

3253 கிலோ மீட்டர் நீளம் கொண்டிருக்கிறது இவ்வேலி. இவ்வேலிகள் வெயிலையும் வானத்தையும் வெறித்தபடியே வன்முறைகளை தனக்குள் அடக்கி வைத்திருப்பதை இச்சிறுமிகளின் பயணத்தின் வழி உணரலாம்.

ஆஸ்திரேலிய நாட்டின் மாநில அரசாங்கமும் தலைமை சேர்ந்து அரை ஜாதி குழந்தைகளை குடும்பங்களிலிருந்து பிரித்துத் தனியாக அடைத்து வைக்கின்றனர். அந்நாட்டின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் இந்த அரை ஜாதி குழந்தைகள் சேதப்படுத்திவிடுவார்கள் என்றும் அவர்களின் வளர்ச்சியும் வாழ்வும் இங்குள்ள இன உருவாக்கங்களின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்களை தனிக்காப்பகத்தில் வைத்து பல்வகை ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர்.

முக்கிய கதாப்பாத்திரம்

பாத்திரப்படைப்பில் முக்கியமாக கவனிக்கக்கூடியது படத்தின் முக்கிய பாத்திரத்தின் எழுச்சி. இந்த மாற்றத்தை வசனம் மூலம் இல்லாது செயல்களின் மூலம் கொண்டு வருவது நல்ல திரைக்கதையாகும். இத்திரைப்படத்தில் இவை அனைத்தும் இயல்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

மோலி - இக்கதையில் முக்கிய கதாப்பாத்திரம். மிருகங்களை வேட்டையாடக்கூடிய திறமையும் கால் பாதத்தின் சுவடுகளை கொண்டு மிருகங்களை வேட்டையாடும் தந்திரமும் கைவரப்பெற்றவள். காடு, மலை என தன் அம்மாவுடனும் தங்கைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்கிறாள். மோலியையும் அவளின் தங்கைகளையும் அம்மாவிடமிருந்து பிரித்து அரை ஜாதி குழந்தைகளின் காப்பகத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். மோலி அம்மாவின் மேல் உள்ள ஏக்கத்தினால் காப்பகத்திலிருந்துத் தப்பிக்கிறாள்.

நோவில்- அரை ஜாதி குழந்தைகளைத் தேடி அலைந்து பிடித்து வருவதில் சர்வதிகாரியாகச் செயல்படுகிறான். தப்பிக்கும் மோலியையும் அவளின் தங்கைகளையும் தேடி அலைகிறான். அவளின் அம்மா வேறு ஊருக்குச் சென்றுவிட்டதாக வதந்தியைப் பரப்பி மற்றவர் மூலம் மோலியையும் தங்கை கிரேசியையும் நம்ப வைக்கிறான். ஆனால் மோலி நம்ப மறுக்கிறாள். கிரேசி அதனை நம்பி மீண்டும் அக்காப்பகத்தில் அடைப்படுகிறாள்.

குறியீடு - symbolism

திரைப்பட விமர்சனத்தில் கவனிக்கக்கூடிய மிக முக்கிய திரைப்பட நுட்பம் குறியீடு. குறியீடு திரைக்கதை நகர்வை பார்வையாளர்களுக்கு ஒரு புதிய சிந்தனை கொடுக்கும். படத்தில் வரும் சம்பவத்தின் ஓட்டத்தை அழகியலோடு எடுத்துரைக்கிறது. இப்படத்தில் பாலைவனம் அதன் மீது தகித்து மிதக்கும் வெயிலையும், மிகப்பெரிய பரப்பளவில் கட்டப்பட்ட வேலிகள், வெளுத்த மேலங்கி போன்ற குறியீடுகள் படக்காட்சியை அழகிய பார்வையாக பதிவு செய்துள்ளது.

கதைமையம் (theme-sence of believability)

இத்திரைப்படத்தில் மூன்று சிறுமிகளின் பயணத்தின் வழி குழந்தைகள் தங்கள் வாழ்க்கை அடையாளத்தையும் தலைமுறை திருட்டின் மூலம் ஒட்டுமொத்தமாக ஒழிக்க நினைக்கும் ஆதிக்கவாதிகளிடமிருந்து முழுமையாக சரணடையாமல் தம் வாழ்க்கையை தன் சந்ததியினருடன் வாழ வேண்டும் என்கிற வேட்கை படத்தின் முக்கிய பாத்திரமான மோலியின் மூலம் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

தரிசனம்

சினிமா கலைஞன்/படைப்பாளி ஒரு தேசாந்திரியைப் போல அலைந்து திரிந்து தனது வெளியையும் அதன் உள்ளடுக்குகளையும் கண்டறிந்து அதை பொதுவிற்கு கொண்டு வருபவன். அதை அதிகமான அக்கறையும் தீவிரமாகவும் காட்டுபவன். இது புறச்சூழலில் காட்டப்படும். ஆனால் ஒரு படைப்பாளி அதை மட்டும் நோக்கி பயணம் செய்தால் ஒரு புது தரிசனத்தை அடைய இயலாது. அவன் அச்சூழலை அல்லது அவனிடம் ஓர் ஆன்மீக தேடல் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். எல்லா காரணங்களையும் தாண்டி மனிதன் புறச்சூழலைக் காட்டி வாழ்வின் உன்னதமான கொண்டாட்டத்தை இழக்க மாட்டான்.

தன் விரிந்த உலக சினிமா தேடல் மூலம் காட்சி ஊடகம்பற்றிய பரிட்சயமும் படக்காட்சியின் நுணுக்கத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய பயிற்சியையும் இயல்பாக எழுத்தாளர் பாலா பெற்றிருப்பதால் தன் எழுத்துகளினூடே இந்தப் பத்து கட்டுரையிலும் முன்னிறுத்தும் கருத்துகள் திரைப்பட விமர்சனத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. ஒரு தேர்ந்த விமர்சனத்தன்மையுடன் அவர் படங்களை அணுகியுள்ளது மகிழ்வூட்டுகிறது. இந்நூலில் பாலா எழுதியக் கட்டுரையை விமர்சிப்பதைவிட அவருடன் சக பயணியாய் ஒவ்வொரு படத்தையும் என்னளவில் விமர்சித்துப்பார்க்க முயன்றதை மேலே எழுதியுள்ளேன். அதற்கான ஊக்கத்தை பாலாவின் கட்டுரைகள் வழங்கியுள்ளன. அதுவே அதன் வெற்றியாகக் கருதுகிறேன்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768