முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 39
மார்ச் 2012

  புத்தகப்பார்வை : என்னை நாயென்று கூப்பிடுங்கள்!
மா.சண்முகசிவா
 
 
       
பதிவு:

கலை இலக்கிய விழா 4 : நிறைவுறாத நிகழ்வுகள்

ம. நவீன்



எழுத்தாளர் எம். குமாரன் மறைவையொட்டி அஞ்சலி பதிவுகள்:


அஞ்சலி - எம். குமாரன் : காணாமல் போகும் தொலைபேசி எண்கள்!
ம. நவீன்

சிறுகதை : சீனக் கிழவன்
எம். குமாரன்

எம். குமாரனின் 'செம்மண்ணும் நீல மலர்களும்'
ம. நவீன்



வல்லினம் கலை, இலக்கிய விழா 4 தொடர்பான பதிவுகள்:

நினைவுக் குறிப்பு : அ. மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, தேவாவின் மலேசிய வருகை
ம. நவீன்

புத்தகப்பார்வை : துடைக்கப்படாத இரத்தக் கறைகள்
பூங்குழலி வீரன்

புத்தகப்பார்வை : தீர்ந்து போகாத வெண்கட்டிகள்
சு. காளிதாஸ்

புத்தகப்பார்வை : கடக்க முடியாத காலம்
அகிலன்

புத்தகப்பார்வை : என்னை நாயென்று கூப்பிடுங்கள்!
மா. சண்முகசிவா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



கட்டுரை:

இழக்கப்பட்ட தேசிய சினிமா
கே. பாலமுருகன்



சிறுகதை:

மேம்பாலம்
கே. பாலமுருகன்



புத்தகப்பார்வை:

தானே மழையாகிப் பெய்யும் 'எதுவும் பேசாத மழை நாள்'
கிண்ணியா எஸ். பாயிஸா அலி



தொட‌ர்:

இனியவளின் குறிப்புகள்
பூங்குழலி வீரன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...29

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ஸ்ரீவிஜி

சின்னப்பயல்

குமரன்

கருணாகரன்

சோலை, மாலை, தென்றல், நிலா என சுகித்துக்கொண்டிருந்த மலேசிய தமிழ்க்கவிதை மொழி ஒரே மாதிரியான வடிவத்திலும் உள்ளடக்கத்திலுமே நீண்ட காலமாக இருந்து வந்தது. புதுக்கவிதையின் வருகைக்குப் பின்னரும் கூட அதன் உள்ளடக்கம் காதலி, கண்ணீர், கல்லறையை விட்டு முன்னகர முடியாமல் அங்கேயே நின்றிருந்தது.

சமீப காலமாகத்தான் கவிதை மொழி வேறொரு தளத்திற்கு செல்வதை காணமுடிகிறது. அகிலன், பாலமுருகன், சிவம், நவீன், தோழி போன்ற புதிய தலைமுறையினரின் வருகைக்குப் பின்தான் அதன் தளமாற்றம் நிகழ்ந்துள்ளது. மொழியிலும் பல நுட்பங்களை கவிதை தனதாக்கிக் கொள்ளும் காலமிது. இந்தச் சூழலில்தான் 'என்னை நாயென்று கூப்பிடுங்கள்' என்ற உரத்தக் குரலில் உள் நுழைகிறார் ரேணுகா.

கவிதைக்குள் ரேணுகா விரித்துக்காட்டும் 'ஆல்பத்தில்' பல காட்சிகள். அவரது கவிமனதின் பல்வேறு வண்ணங்களை அதன் சாயல்களை, விரக்தியாய், சோகமாய், இழப்பின் வலியாய், கோபமாய், கிண்டலாய் என பல்வேறு உணர்வு நிலைகளில் பார்க்கமுடிகின்றது.

மழையில் நனைந்த மகனை தலைதுவட்டிவிடும் அம்மா; நெத்திலி, முட்டை, சோற்றுக்குவியலில் உணவூட்டும் அம்மா; காற்று போலான பட்சத்தில் குசலம் விசாரிக்க தனக்காகக் காத்திருக்கும் அம்மா, இப்போது இல்லாது போன, ஆனால் எப்போதும் மனம் முழுக்க நிறைந்திருக்கும் அம்மா; என அம்மாவின் முகத்தை அதிகம் காட்டும் ஆல்பம் இது.

ஆழ்மனதிலிருந்து புறப்படும் ஒரு முடிவற்ற துயரத்தின் குரலாக புறப்படுகிறது கவிதைக்கான வார்த்தைகள். மீண்டும் கருவறைக்குள் இருப்பதாய் உணரவைக்கும் 'இருள் தின்று புடைத்திருந்த பனிக்குட பொழுதுகள்'. மனோவியல் வார்த்தைகளில் Regression வேண்டி பின்னோக்கி பயணிக்கும் மனம் கருவறைக்குள் தஞ்சம் புகுகின்றது.

முட்டிப்பால் குடித்த முலையை புற்று அரிந்து கொண்டதும், கத்தையாய் மயிரிழந்த அன்னை மெல்ல கரைந்து, மரித்து, மறைந்து போனதும் வார்த்தைக்குள் வசப்படுத்த எத்தனிக்கும் மனதின் முயற்சி அவளது இழப்பை, இறப்பை மீண்டும் மீண்டும் நனவு நிலைக்குக் கொண்டு வந்து முகத்துக்கு முகம் எதிர்க்கொள்கிறது. குரூரமான எதார்த்தத்தோடு சமரசம் செய்ய முயன்று தோல்வி காண்கிறது. ஆனாலும் எந்தச் சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அந்த ஏக்கமும் துக்கமும் ஆழ்மன நிலைக்கும் நனவு நிலைக்குமான ஊடாட்டத்தில் அல்லல் படுகிறது. அந்தப் பெரும் துயரம் தற்காலிகமாகவேணும் அமிழ்வதும் மீண்டும் பேரலைகளாக மேழெழுவதுமாக மாறி மாறி அலைக்கழிக்கின்றது. கவிதையாக அது தன்னை எழுதிப்பார்த்துக் கொள்வது ஒரு சமாதானத்திற்காகத்தான்.

உறக்கம் கொள்ளாத பொழுதுகளில், பிதுங்கிய மார்புக்காரி, பழைய காதலி, நண்பனின் காதலி, அந்தக் காதலியின் நண்பன் என அரைத் தூக்கத்தில் வந்துபோன பிம்பங்களினூடே மனைவியை இழந்துவிட்ட அப்பாவின் நினைவுகளும் தூக்கத்தை விரட்டுகின்றன. அந்தத் தவிப்பு வெட்டித்தள்ளியும் தள்ளமுடியாதவாறு அவதியுறும் ஒரு மகனின் கரிசனையை இதுவரையில் நான் எந்தக் கவிதையிலும் பார்த்ததில்லை.

வசனத்தை உடைத்துப் போடுவதல்ல புதிய கவிதை. பொருளம்சத்தினால் மட்டுமே நிர்ணயிக்கபடுவதுடன், வசனத்துக்கு எட்டாத கவித்துவத்தைக் கொண்டிருப்பதால்தான் புதியது கவிதையாகிறது.

இழந்த காதலைப் பற்றி எழுதாத கவிஞனில்லை. ரேணுகா விதிவிலக்கல்ல. மன பயணங்களில் பின்னோக்கி வெறி கொண்டோடும் மரங்களும், கட்டிடங்களும், இன்ன பிறவும் அதனதன் இருப்பில் அங்கேயேதான் இருக்கும். அவள்? திரும்புதல் நிகழும்போது விரும்பியவள் அங்கிருப்பதில்லை. கவிதை மனம் பயணத்தைக் காட்சிப்படுத்துகிறது. 'மனம் கடந்து செல்வது' என்பதை காட்சியாகக் கொண்டுவருவது புதிது. அடுத்தக் காட்சியில் அவள் தன் குழந்தையோடு அவதிப்படுகிறாள். தனிமை பேரிரைச்சலோடு அவரைக் கவ்விச்செல்கிறது.

'நிகழ்தொடர்' என்ற கவிதையில்

'வெறுமனே வெறித்திருப்பதைத் தவிர
வேறொன்றும் செய்வதில்லை
விட்டு விட்டு உயிர்கொள்ளும்
குமிழ் விளக்கை.
நிகழ்ந்து கொண்டே இருக்கிறது வாழ்வு'

குமிழ் விளக்கு படிமம் எதைச் சொல்கிறது. காதலையா? உயிரையா? வாழ்வையா? ஒரு surrealistic tone-ல் எழுதப்பட்டிருப்பது மலேசியத் தமிழ்க் கவிதைக்குப் புதிய வரவு.

வீடு திரும்புதல் மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் உண்டு. இந்தியர்களுக்கு? எனக்கு இந்த நாடு சொந்தம். இந்த நாடு, அதற்கு நான் சொந்தம் என்று சொல்லுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தக் கேள்விக்கு அரசு நம்மை குடியேறிகளின் சந்ததிகளாக பார்க்கும் வரை விடைகிடைக்காது.

'இடைத்தேர்தல்' கவிதையில் ரேணுகா தனது பகடியின் உச்சத்தில் வாக்காளர்கள் தங்கள் ஆசன வாயை விரித்துக் காட்டினால் அதன் மூலநோய்க்கு மருந்திட நீளும் மாயக்கைகள் ஆயிரம் என்பார். வேடிக்கையாகத்தான் என்றாலும் 'அரசியல்வாதியின் உயிர் பிரிதலுக்கான வேண்டுதல்கள் செய்யலாம்' என்பது கொஞ்சம் நெருடுகிறது. ஒரு கவியின் மனதில் கருணையற்ற வார்த்தைக் கிஞ்சிற்றும் கசியலாமா?

சமகால அரசியல் நிகழ்வுகளை கவிதைக்குள் கொண்டுவருவதில் கவிஞனின் நாடி சமூகத்துடன் சேர்ந்தே துடிக்கிறது.

ரேணுகா இரு முனைகளிலும் இழுத்துக்கட்டப்பட்ட 'நாண்'. ஒரு முனை அம்மா... மறு முனை முன்னால் காதலி. மீட்டப்படும் நாதம் இழப்பின் சோகம். கவிதை என்பது மொழியால் ஆனது மட்டுமல்ல, அதுவே மொழியாகவும் இருக்கிறது.

ரேணுகாவின் மௌனம் விரிந்து மொழியானது. மொழி விரிந்து கவிதையானது. இந்தக் கவிதை வழியாக தன் அனுபவங்களின் சாரம்சங்களிலிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் ரேணுகா.

ரேணுகா அதிகம் பேசாத கவிஞர். அழுத்தமான மனிதரும் கூட. இவ்வளவு ஆண்டுகளாகப் பேசி புரிந்துகொள்ள இயலாத ரேணுகாவின் மனம் பற்றிய ஒரு சித்திரம் அவரது கவிதைகள் வழியாக எனக்கு கிடைக்கிறது. அதன் சோகம் என்னையும் பாதிக்கின்றது. புறத்தே எல்லாவற்றையும் பகடி செய்யும் இவரின் அகத்தில் ஆழமான சோகம் கனன்று கொண்டிருக்கின்றது. அதனிலிருந்து அவர் 'விட்டு விடுதலையாக' வேண்டும்... கவிதை வழியாக வேணும்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768