|
எழுத்தாளர் எம். குமாரன் மறைவையொட்டி
அஞ்சலி பதிவுகள்
அஞ்சலி - எம். குமாரன் : காணாமல் போகும் தொலைபேசி எண்கள்!
ம. நவீன்
எல்லோர் போலவும் எழுத்தாளர் எம்.குமாரனின் மரணச்செய்தியும்
எவ்வித விசேட ஓலங்களை எழுப்பாமல் குறுஞ்செய்தியில் வந்து
சேர்ந்தது. முதலில் இயக்குநர் சஞ்சைதான் தகவல் அனுப்பினார்.
பின்னர் சை.பீர் முகம்மதுவிடமிருந்து சற்று விரிவான தகவலுடன்
வந்தது...
சிறுகதை : சீனக் கிழவன்
எம். குமாரன்
யாரோ தொலைவில் வருவது தெரியவே லட்சுமி புன்னகையுடன் அகன்றாள். கண்ணில் ஊறிய கண்ணீர் வற்றாமலும் உதிராமலும் இமைக்குள் தொக்கி நின்றது. லிம், அவள் போவதையே நோக்கிக் கொண்டிருந்தான். லட்சுமியும் அடிக்கொரு தரம் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்று மறைந்தாள்...
எம். குமாரனின் 'செம்மண்ணும் நீல மலர்களும்'
ம. நவீன்
இந்நாவலின் பெயரை மலேசியாவில் நாவல் குறித்து பேசும் எல்லார் வாயிலும் அகப்படுவதைப் பார்த்துள்ளேன். நான் இந்த நாவலைத் தேடத்தொடங்கியப் போதுதான் மலேசியாவில் மீண்டும் சில படைப்பிலக்கியங்களை மறுப்பதிப்பு செய்ய வேண்டிய அவசியத்தை உணரமுடிந்தது...
கட்டுரை
இழக்கப்பட்ட தேசிய சினிமா
கே. பாலமுருகன்
இதுவரை மலேசிய சினிமா அப்படி என்ன சாதித்திருக்கிறது எனக் கேட்டால் ஒட்டுமொத்த வரலாற்றையும் நீண்டு கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு விதமான பாதிப்புக்களுக்குள்ளாகிய மலேசிய சினிமா அதன் தனித்துவத்தை அடைந்திருக்கிறதா என்பதே மிக முக்கியமான கேள்வி...
சிறுகதை
மேம்பாலம்
கே. பாலமுருகன்
மயக்கமே வருவது போல ஆகிவிட்டது. மாமா குவளையில் நீரை நிரப்பி ஒரு மிடறில் தொண்டையை நனைத்தார். அடுத்ததாக இன்னொரு லோரி எப்பொழுது வேண்டுமென்றாலும் கடந்து போகலாம். வீடு ஓர் அதிர்வுக்காகத் தவம் கிடந்தது...
புத்தகப்பார்வை
தானே மழையாகிப் பெய்யும்
'எதுவும் பேசாத மழை நாள்'
கிண்ணியா எஸ். பாயிஸா அலி
பெருநாளினை எதிர்கொள்ள ஆவலோடு காத்திருந்த புனித நோன்பு நாளொன்றில், கரம் சேர்ந்திருந்த சகோதரர் நபீலின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்ட எதுவும் பேசாத மழை நாளின் மூன்றாவது கவிதையின் சில வரிகளிவை. கவிதைகளூடே இதுகாலவரை கண்டுரசித்த பிறையினின்றும் மிகவும் மாறுபட்ட வடிவேந்தி மிளிர்கிறது இன்னமும் முகையவிழாத இப்பெருநாள்பிறை.
|
|
கேள்வி பதில்
கவிதை
வல்லினம் கலை, இலக்கிய விழா 4 தொடர்பான பதிவுகள்
நினைவுக் குறிப்பு : அ. மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, தேவாவின் மலேசிய வருகை
ம. நவீன்
புத்தகப்பார்வை : துடைக்கப்படாத இரத்தக் கறைகள்
பூங்குழலி வீரன்
புத்தகப்பார்வை : தீர்ந்து போகாத வெண்கட்டிகள்
சு. காளிதாஸ்
புத்தகப்பார்வை : கடக்க முடியாத காலம்
அகிலன்
புத்தகப்பார்வை : என்னை நாயென்று கூப்பிடுங்கள்!
மா. சண்முகசிவா
தொடர்
இனியவளின் குறிப்புகள்... 1
பூங்குழலி வீரன்
என் வாழ்வில் நான் குழந்தைகளுக்கு வழங்கியிருக்கும் இடம்
மிக முக்கியமானது...
|
|