முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 39
மார்ச் 2012

  சுவடுகள் பதியுமொரு பாதை... 15
பூங்குழலி வீரன்
 
 
       
பதிவு:

கலை இலக்கிய விழா 4 : நிறைவுறாத நிகழ்வுகள்

ம. நவீன்



எழுத்தாளர் எம். குமாரன் மறைவையொட்டி அஞ்சலி பதிவுகள்:


அஞ்சலி - எம். குமாரன் : காணாமல் போகும் தொலைபேசி எண்கள்!
ம. நவீன்

சிறுகதை : சீனக் கிழவன்
எம். குமாரன்

எம். குமாரனின் 'செம்மண்ணும் நீல மலர்களும்'
ம. நவீன்



வல்லினம் கலை, இலக்கிய விழா 4 தொடர்பான பதிவுகள்:

நினைவுக் குறிப்பு : அ. மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, தேவாவின் மலேசிய வருகை
ம. நவீன்

புத்தகப்பார்வை : துடைக்கப்படாத இரத்தக் கறைகள்
பூங்குழலி வீரன்

புத்தகப்பார்வை : தீர்ந்து போகாத வெண்கட்டிகள்
சு. காளிதாஸ்

புத்தகப்பார்வை : கடக்க முடியாத காலம்
அகிலன்

புத்தகப்பார்வை : என்னை நாயென்று கூப்பிடுங்கள்!
மா. சண்முகசிவா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



கட்டுரை:

இழக்கப்பட்ட தேசிய சினிமா
கே. பாலமுருகன்



சிறுகதை:

மேம்பாலம்
கே. பாலமுருகன்



புத்தகப்பார்வை:

தானே மழையாகிப் பெய்யும் 'எதுவும் பேசாத மழை நாள்'
கிண்ணியா எஸ். பாயிஸா அலி



தொட‌ர்:

இனியவளின் குறிப்புகள்
பூங்குழலி வீரன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...29

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ஸ்ரீவிஜி

சின்னப்பயல்

குமரன்

கருணாகரன்

வண்ணத்துப்பூச்சிகள் போன பாதை - யோ. கர்ணனின் கவிதைகள்

யோ. கர்ணனை ஒரு சிறுகதை படைப்பாளராக கே. பாலமுருகனின் ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு என்ற தொடர் பத்தியின் வழி அறிந்திருக்கிறேன். அவரின் கவிதைகள் குறித்த தேடலில் ஈடுபட்ட போது அவர் எழுதியிருக்கும் சில கவிதைகளை வாசிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. இம்மாத வல்லினத்தில் ஈழத்து எழுத்தாளர் யோ.கர்ணனின் கவிதைகளோடு பயணிப்போம்.

ஈழத்து விடுதலைப் போராளியாகத் தன்னை இணைத்துக் கொண்டு அதன்வழி பல்வேறு இழப்புகளையும் சந்தித்தவர்; தேவதைகளின் தீட்டுத் துணி என்ற சிறுகதைத் தொகுப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார் என்பதைத் தவிர யோ. கர்ணன் குறித்து வேறெந்த அறிமுகமும் எனக்கு இல்லை.

மிக சொற்பமான அவரின் கவிதைகள் மட்டுமே எனது பார்வைக்குக் கிடைத்திருந்தாலும் அது குறித்த பகிர்வு இங்கு அவசியம் என நான் கருதுகிறேன்.

போதையை மறைக்கலாம்
காலி மதுக் குப்பிகளை எங்கு வைப்பது
யாருக்கும் தெரியாமல்?

உணர்வுகளைப் பிறர் அறியா வண்ணம் மறைத்து வாழப் பழகிவிட்ட நமக்கு அந்த உணர்வுகளை ஏற்படுத்திய நினைவுச் சின்னங்களை எப்படி மறைப்பது என்பது எப்போதும் தெரிவதில்லை. போர் ஏற்படுத்திய வடுக்களும் வலிகளும் அழிவுகளும் கண்முன்னே மறையாமல் இருக்க அது தந்து போன உணர்வுகளை மட்டும் இல்லாமல் செய்து வாழச் சொன்னால் எப்படி முடியும். போதையைக் கொடுத்தப் பிறகு காலி மதுக்குப்பிகளை மறந்து விடுகின்றனர்; போதையில் இருப்பவர்கள் தாங்கள் போதையில் இல்லை என்று கூட சத்தியம் செய்யலாம். ஆனால் போதையை ஏற்றிக் கொண்ட இடங்களில் சிதறிக் கிடக்கும் அந்த மீந்திருக்கும் எச்சங்களை எங்கு போய் மறைப்பது. நமது வாழ்நாளும் நம்மைச் சுற்றி இரைந்துக்கிடக்கும் எச்சங்களோடுதான் சுழன்ற படி இருக்கிறது. சில வேலைகளில் மறந்திருந்த, மறந்துபோன சில உணர்வுகள் மீந்திருக்கும் இந்த எச்சங்களால் மீண்டும் உருப்பெற்று விடுகின்றது.

காற்றைப் போல
வண்ணத்துப் பூச்சியைப் போல
தடங்களைப் பதிக்காத உனது
பயண வழி ஏது?

செல்லும் வழி எங்கும் தனது தடங்களைப் பதித்தபடி செல்வதையே மனிதன் விரும்புகின்றான். எதில் உள்நுழைந்தாலும் தடம் பதிப்பதாகவே பறைசாற்றிக் கொள்கின்றான். காற்றைப் போல வண்ணத்துப்பூச்சியைப் போல தடங்களைப் பதிக்காதொரு வாழ்வை மனிதன் யாசிப்பதில்லை. ஆனாலும் தடம் பதிக்காத யாரோ ஒருவரது வருகை கவிஞரைப் பாதிக்கிறது. தனது தடத்தினைப் பதிக்காத அந்த பயணக்காரரின் பயண வழி குறித்து அறியும் ஆவல் அவருக்கு இருக்கிறது. தானும் அந்த வழியில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையாகவும் கூட இருக்கலாம் அது.

பறந்து போன வண்ணத்துப் பூச்சியை நினைத்து
பூவொன்று தற்கொலை செய்யுமா எனத் தெரியவில்லை.

தன்னை விட்டுப் பிரிந்து போன ஓர் உறவைப் பற்றிய வரிகளாகவே இதனை நான் காண்கிறேன். ஒரு பூவின் மேல் பல வண்ணத்துப்பூச்சிகள் பல வண்ணங்களில் வந்தமரும். அந்த அமர்வு பெரும்பாலும் சிலநொடிகளாகவும் ஏதாவதொரு நேரத்தில் மட்டும் சில நிமிடங்களாகவும் இருக்கலாம். அந்த அமர்வு என்பது அந்த பூவை எவ்வகையிலும் பாதிப்பதில்லை. மிக மெல்லிய உருவத்தில் வந்தமரும் வண்ணத்துப்பூச்சி பறந்துபோனதற்குப் பூக்கள் வருத்தப்படலாம். தற்கொலை செய்கிற அளவிற்கு அதன் பாதிப்பு இருக்காது என்பதாகவே நான் கருதுகிறேன். ஆனால் மனித மனம் அப்படியன்று. எதிர்ப்பார்ப்புகளாலும் உணர்வுகளாலும் கட்டியெழுப்பட்டது அது. அதில் பிரிவுகள் வலியியை ஏற்படுத்துகின்றன. சிலருக்கு அந்த பிரிவு வலிக்கு உடனடி நிவாரணம் தேவைப்படுகிறது. தற்கொலை பிரிவிற்கான தீர்வாக பலருக்கு அமைந்து விடுகின்றது.

முற்றுப் பெறாத உன் கனவுகளும்
தீர்க்கப்படாத ஆசைகளும்
எழுதப்படாத உன் காதலின் கணங்களும்
இன்னும் உயிரோடிருக்கும்
ஒரு மாலை
ஒரு படம்
குனிந்த தலைகளின் கணமொன்று
எவை ஈடாகும் இவைக்கு.

வீரச்சாவடைந்த தனது சகப் போராளி ஒருவரின் வித்துடலை விதைக்கும் நிகழ்வின் விமர்சனமாகவே இந்த வரிகளை நான் காண்கிறேன். வீரச்சாவடைந்த எண்ணற்ற போராளிகள் துயிலும் இல்லங்கள்தோரும் விதைந்து கிடக்கின்றனர். எல்லா மனிதருக்குள்ளும் எண்ணற்ற கனவுகள் இருக்கும்; போராளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இரத்தமும் சதையும் உணர்வும் உயிரும் அவர்களும் கொண்டிருக்கிறார்கள். காலமும் அது தந்த காயமும் வலியுமே அவர்களைப் போராளியாக்கியிருக்கிறது. தீர்க்கப்படாத எண்ணற்ற ஆசைகள் அவர்களுக்குள்ளும் இருக்கின்றன. யாரிடமும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் யார்மீதாவது அவர்களுக்குக் காதல் பூத்திருக்கலாம். இவை எல்லாம் அந்த போராளியின் மரணத்தோடு சேர்ந்து புதைக்கப்படுகின்றது. இந்த நிலை கவிஞருக்கு வருத்தத்தை அளித்திருக்கிறது. கனவுகளும் ஆசைகளும் காதலும் புதைந்து போன பிறகு வாடாத ஒரு புது மாலையும் படமும் தலைகுனிந்து மெளன அஞ்சலி மட்டும் எதற்கு என்கிறார். ஆனால் மண் விடுதலைக்காய் உயிர் நீத்த போராளியின் உயிர் வரலாறாய் உயிர்த்திருக்கும் என்பது மட்டும் மறுக்க முடியாத நிதர்சனம்.

அவர்கள் இங்குதானிருக்கிறார்கள்
எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாது
உன் காலியான வெற்றிடத்தில்
இன்னொருவனை நிறுத்தி.

வீரச்சாவடைந்த கவிஞரின் சகபோராளி ஒருவர் குறித்து மிகுந்த கோபத்துடன் கவிஞர் இங்கு குறிப்பிட்டுள்ளார். இறந்தப்பின் அந்த சக போராளியின் இடம் வேறொருவரால் மிக இயல்பாய் நிரப்பப்பட்டுள்ளது குறித்து கவிஞரின் கோபம் இயல்பானது. அதுவரை அங்கிருந்த அந்த சக போராளியின் இருப்பு எல்லாராலும் இயல்பாய் மறக்கப்பட்டது வேதனைக்குறியதாக தெரிகிறது. போராட்டக்களத்தில் இறப்புகள் சாதாரணமானது. அந்த இறப்புக்கு இன்னொருவரை உடனடியாக மாற்ற கட்டாயமும் கள சூழ்நிலையில் இயல்பாய் நடக்கின்ற ஒன்றாகிறது. மறுக்கப்படுவதும் மறக்கப்படுவதும் மிக இயல்பாய் அரங்கேறியபடியே இருக்கின்றது.

இங்கே
உறைந்திருக்கும் என் குருதியினடியில்
மறைந்திருக்கலாம்
நீங்கள் எய்த பானங்களும்.

இயல்பில் ஒரு போராளியாய் இருந்து பின் போராட்டக்களத்திலிருந்து வெளியேறியவர் என்கிற தோற்றப்பாடு யோ.கர்ணனின் கவிதைகளில் இயல்பாய் வெளிப்படுகின்றன. ஒரு போராட்டத்தை ஆதரிப்பதும் நடு நிலையில் நிற்பதும் ஆதரிக்காமல் போவதும் தனி மனித உரிமையைச் சார்ந்தது. கவிஞரின் அந்த உணர்வு குறித்து விமர்சித்தல் என்பது என வேலையல்ல. ஒவ்வொரு உணர்வையும் அதற்குறிய வார்த்தைகளுடன் பதிவு செய்திருக்கும் யோ. கர்ணனின் கவிதைகள் கவனிக்கப்பட வேண்டியவை என்பதை மட்டும் இங்கு நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768