முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 39
மார்ச் 2012

  காமேக் புகான் ஒராங் சிதோக்... 11
நோவா
 
 
       
பதிவு:

கலை இலக்கிய விழா 4 : நிறைவுறாத நிகழ்வுகள்

ம. நவீன்



எழுத்தாளர் எம். குமாரன் மறைவையொட்டி அஞ்சலி பதிவுகள்:


அஞ்சலி - எம். குமாரன் : காணாமல் போகும் தொலைபேசி எண்கள்!
ம. நவீன்

சிறுகதை : சீனக் கிழவன்
எம். குமாரன்

எம். குமாரனின் 'செம்மண்ணும் நீல மலர்களும்'
ம. நவீன்



வல்லினம் கலை, இலக்கிய விழா 4 தொடர்பான பதிவுகள்:

நினைவுக் குறிப்பு : அ. மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, தேவாவின் மலேசிய வருகை
ம. நவீன்

புத்தகப்பார்வை : துடைக்கப்படாத இரத்தக் கறைகள்
பூங்குழலி வீரன்

புத்தகப்பார்வை : தீர்ந்து போகாத வெண்கட்டிகள்
சு. காளிதாஸ்

புத்தகப்பார்வை : கடக்க முடியாத காலம்
அகிலன்

புத்தகப்பார்வை : என்னை நாயென்று கூப்பிடுங்கள்!
மா. சண்முகசிவா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



கட்டுரை:

இழக்கப்பட்ட தேசிய சினிமா
கே. பாலமுருகன்



சிறுகதை:

மேம்பாலம்
கே. பாலமுருகன்



புத்தகப்பார்வை:

தானே மழையாகிப் பெய்யும் 'எதுவும் பேசாத மழை நாள்'
கிண்ணியா எஸ். பாயிஸா அலி



தொட‌ர்:

இனியவளின் குறிப்புகள்
பூங்குழலி வீரன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...29

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ஸ்ரீவிஜி

சின்னப்பயல்

குமரன்

கருணாகரன்

ஒரு காட்டுப் பயணம்

என் வாழ்நாளில் காட்டுப்பன்றியை அன்றுதான் முதன்முறையாக நேருக்கு நேராக பார்த்தேன். பள்ளி நாட்களில் இதுதான் காட்டு பன்றி என்று ஆசிரியர் படங்களின் வாயிலாக அறிமுகப்படுத்திய போது பார்த்ததுண்டு. அதோடு தைப்பிங் மிருகக்காட்சி சாலையில் பார்த்திருக்கிறேன். அதுவும் வேலிக்கு அப்பால். ஆனால் அன்று வேலியில்லாமல் திறந்த வெளியில் பார்த்த போது கால்கள் வெடவெடத்து பலமிழந்து போய்விட்டன. ஓடி விடலாமா என திரும்பி பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் கடல்தான். ஒரு நொடி தப்பான முடிவு எடுத்து விட்டோமா என்று கூட எண்ணிவிட்டேன். அப்படியே அங்கேயே நின்று அந்த காட்டுப்பன்றி என்னத்தான் செய்கிறது என்பதை கவனித்தோம். நல்ல வேளை அது தன் பாட்டுக்கு என்னத்தையோ மேய்ந்து கொண்டிருந்தது.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் மனித நடமாட்டத்தை காணோம். எங்களின் நடமாட்டம் அந்தப் பன்றிக்கு எந்த இடையூறும் தரவில்லை என்பதை ஊர்ஜீதப்படுத்திய பின்னரே அடுத்த நடையை அடியடியாய் எடுத்து வைத்து அந்த இடத்திலிருந்து ஓடி விட்டோம். அப்போதுதான் ஓரிரு மனித தலைகள் தென்பட்டன. பன்றி மேய்ந்த இடம் கொஞ்சம் மணல் தரையாக இருந்தது. மற்றபடி எல்லாம் பச்சைப்பசேலென்றுதான் இருந்தது. அப்படியே கொஞ்ச தூரம் கால்கள் போன படி மரங்களிடையே நடந்து சென்றோம். அங்கே சின்னதாய் ஒரு உணவு விடுதியும், அதை ஒட்டினாற்போல தங்கும் விடுதி கட்டிடங்களும் இருந்தன. அப்படியென்றால் அங்கே வருபவர்கள் அங்கே தங்க கூடிய வாய்ப்பு இருக்க வேண்டும். ஆனாலும் எனோ தானோ என்று கவனிக்கப்பட்ட நிலையிலிருந்தது அந்த கட்டிடம்.

அந்த உணவு விடுதியை அணுகிய போது அங்காங்கே நாற்காலிகளும் மேசைகளும் போடப்பட்டிருந்தன. அங்கு சில வெளிநாட்டு ஜோடிகளும் உள்ளூர் ஆட்களும் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தனர். அருகாமையில் வால் நீண்ட குரங்குகள் சுற்றி கொண்டிருந்தன. சாப்பாடு பக்கத்தில் குரங்கு இருந்தால் என்ன நடக்குமோ அது தான் அங்கேயும் நடந்தது. நாங்கள் பார்த்து கொண்டிருந்த போதே ஒரு வெள்ளைக்காரர் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை சில குரங்குகள் பிடுங்கி கொண்டு ஓட்டம் பிடித்தன. பார்க்கவே பாவமாயிருந்தது. நிலை இப்படி இருக்கும் போது எப்படி நாங்கள் வாங்கி வைத்திருந்த உணவைத் தைரியமாக காட்டுக்குள் எடுத்து போவது? எனவே அங்கே இருந்த பணியாளரிடம் உணவை வைக்க பை கிடைக்குமா என்று கேட்டோம். அதற்கு அவர் ப்ளாஸ்டிக் பை காட்டுக்குள் எடுத்து சென்றாலே குரங்குகள் தொல்லை அதிகமாகும். எனவே தோளில் மாட்டிக்கொள்ளும் துணிப்பை இருந்தால் தோதாக இருக்கும் என சொன்னார். எங்களிடம் எதுவுமே இல்லையே. திருட்டு முழி மட்டுமே எங்கள் முகத்தில் மிச்சமிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டோம். எங்கள் முகத்தை பார்த்தே நிலை புரிந்து கொண்டார் போலும். காத்திருங்கள் என சொல்லி விட்டு உள்ளே சென்று ஒரு துணிப்பையை எடுத்து கொண்டு வந்து கொடுத்தார்.

நல்ல வேளை எங்களின் பால் வடியும் முகம் நேரத்துக்கு உதவியது. அது மட்டுமல்ல எங்கள் மேல் பாவப்பட்டு பை கொடுத்த அந்த பணியாளருக்கும் நல்ல மனசு. இல்லையென்றால் முன்னப்பின்ன தெரியாத எங்களுக்கு உதவியிருக்க முடியுமா என்ன? அவருக்கு நன்றி சொல்லி விட்டு உணவு பொட்டலங்களை துணிப்பைக்குள் வைத்து தோளில் மாட்டி கொண்டு மெதுவாக நடையைக் கட்டினோம். கொஞ்ச தூரம் நடந்து சென்றதும் தங்கும் விடுதிகளும் பின்னர் வன காப்பக அலுவலகம் என அடையாளமிட பட்டிருந்த கட்டிடமும் தென்பட்டது. அதன் மத்தியில் சுராவ் (surau) எனப்படும் தொழுகை கூடாரமும் இருந்தது. இன்னொரு விசயம். அங்கே முழுவதுமாக கைதொலைப்பேசி தொடர்புக்கான சிக்னல் சுத்தமாக இல்லை. அவ்வப்போது செல்கோம் லைன் மட்டுமே ஒன்றிரண்டு சிக்னல் எட்டிப்பார்த்தன. லைன் கிடைக்கவில்லையே என்று நொந்து கொண்டே அந்த அலுவலகத்துக்குள் சென்றோம். சும்மா சொல்ல கூடாது. வெளித்தோற்றம் என்னவோ அப்படி இப்படி இருந்தாலும் அலுவலகத்தைச் சுத்தமாக வைத்திருந்தார்கள்

அங்கே கடமையில் இருந்த பணியாளர் அதே ஊர்க்காரர்தான். ஆனால் எந்த வம்சத்தினர் என்பதை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. இருந்தால் ஒரு 50 வயதைத் தாண்டியவராகதான் இருக்க வேண்டும். என்னவோ தெரியவில்லை முகத்தில் கலையே காணோம். எங்களைப் போல பலரை பார்த்திருப்பார் போலும். கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளித்து அளித்து அலுத்து போயிருக்கும். நாங்கள் அங்கே சென்றதும் முதலில் புன்னகைக்க கூட இல்லை. Straight to the point. என்பது போல Overnight or day trip என்று தான் கேட்டார். நாங்களும் day trip என்று சொல்லியதால் ஒரு வரைப்படமும் மேலும் ஒரு பாரமும் கொடுத்து அதில் எங்களின் விபரங்களையும் எழுத சொல்லி பின்னர் ஒரு சின்ன விளக்கம் அளித்தார். நாங்களும் அதிகம் கேட்கவில்லை. அதோடு அப்படி ஏதும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள ஓர் எண்ணை கொடுத்தார். அதான் அங்கே லைனே இல்லையே... அப்புறம் எங்கே தொடர்பு கொள்வது என நினைத்து ஒரு நமட்டு சிரிப்பு எங்கள் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். உடனே 'கவலைபடாதீர்கள்... இங்கே தான் லைன் இல்லை, காட்டுக்குள் இருக்கும்' என்றார். ரொம்ப நன்றி என சொல்லிவிட்டு நடையைக் கட்டிவிட்டோம் நாங்கள் மூவரும். எங்களோடு இன்னும் பல வெளிநாட்டவர்களையே பார்க்க முடிந்தது. அலுவலகத்திலிருந்து ஒரு மீட்டர் தாண்டியதும், கற்சுவர் ஒன்றில் பாக்கோ வன காப்பகத்தின் முழுவதுமான நடை பாதைகளும் அவற்றின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வரைப்படத்தின் பின்பக்கத்தில் ஒவ்வொரு பாதையின் பெயரும், அவற்றுக்கான அடையாள வண்ணங்களும். நேர வரையறையும் தெள்ளத்தெளிவாக குறிப்பிட பட்டிருந்ததன. அவை பின் வருமாறு:

 

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768