முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 39
மார்ச் 2012

  மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்... 15
ஏ.தேவராஜன்
 
 
       
பதிவு:

கலை இலக்கிய விழா 4 : நிறைவுறாத நிகழ்வுகள்

ம. நவீன்



எழுத்தாளர் எம். குமாரன் மறைவையொட்டி அஞ்சலி பதிவுகள்:


அஞ்சலி - எம். குமாரன் : காணாமல் போகும் தொலைபேசி எண்கள்!
ம. நவீன்

சிறுகதை : சீனக் கிழவன்
எம். குமாரன்

எம். குமாரனின் 'செம்மண்ணும் நீல மலர்களும்'
ம. நவீன்



வல்லினம் கலை, இலக்கிய விழா 4 தொடர்பான பதிவுகள்:

நினைவுக் குறிப்பு : அ. மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, தேவாவின் மலேசிய வருகை
ம. நவீன்

புத்தகப்பார்வை : துடைக்கப்படாத இரத்தக் கறைகள்
பூங்குழலி வீரன்

புத்தகப்பார்வை : தீர்ந்து போகாத வெண்கட்டிகள்
சு. காளிதாஸ்

புத்தகப்பார்வை : கடக்க முடியாத காலம்
அகிலன்

புத்தகப்பார்வை : என்னை நாயென்று கூப்பிடுங்கள்!
மா. சண்முகசிவா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



கட்டுரை:

இழக்கப்பட்ட தேசிய சினிமா
கே. பாலமுருகன்



சிறுகதை:

மேம்பாலம்
கே. பாலமுருகன்



புத்தகப்பார்வை:

தானே மழையாகிப் பெய்யும் 'எதுவும் பேசாத மழை நாள்'
கிண்ணியா எஸ். பாயிஸா அலி



தொட‌ர்:

இனியவளின் குறிப்புகள்
பூங்குழலி வீரன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...29

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ஸ்ரீவிஜி

சின்னப்பயல்

குமரன்

கருணாகரன்

அழகாய் நடமாடும் சனியனும் சாத்தானும்!

இந்தக் கட்டுரைத் தொடரில் மலேசிய தமிழ்க் கல்விச் சூழலில் காணக்கிடக்கின்ற இரு பக்கங்களையுந்தான் பதிவு செய்துகொண்டு வருகிறேன். இடையில், நல்லதை மட்டுமே எழுதுங்கள், அதுவே எழுத்துக்கு மதிப்பை உண்டாக்கும் எனும் தொனியில் குறுஞ்செய்திகள் வந்தடைந்தன. நல்லனவற்றைத் தக்கச் சான்றுகளோடு இயம்பிவருவதையும் மறுக்க முடியாது. வெகு நாட்களாய்ப் புனித பிம்பத்தை மட்டுமே கட்டமைத்துக்கொண்டு என்ன மாறுதலைக் கண்டோம்? சலனமற்ற நீர்நிலையைப் போலல்லவா நமது தமிழ்க் கல்விச் சூழல் இயங்குகிறது! இது மேல் மட்டத்தில் மடுமல்ல; அனைத்து வெளிகளிலுந்தான் என்பதை மறுக்க முடியாது.

நம் சமூகத்தில் அதுவும் தமிழ்க் கல்வித்துறையின் தலைமைத்துவ நிர்வாகத்தை அலங்கரிப்பவர்கள் சம்பத்தப்பட்ட பதவி கிடைத்தவுடன் தலைகால் புரியாமல் ஆடுவது அன்றிலிருந்து இன்றுவரை நடந்துவருவது கண்கூடு. அதில் குறிப்பாகக் கல்வி இலாகா வழங்கிய மானியத்தை எப்படி எப்படியெல்லாம் கையாடுகிறார்கள், மனித உறவில் பிரிவினை பார்ப்பது என்று பட்டியலை நீட்டிக்கலாம். இவையெல்லாம் தலைமைத்துவ நாற்காலியில் அமர்ந்ததும் பசக்கென்று ஒட்டிக்கொள்கிறதோ என யோசிக்கத் தோன்றுகிறது. எல்லோருமே இப்படித்தானா? பெரும்பாலும் உளத்தூய்மை கொண்டவர்கள் இப்பதவிகளை விரும்புவதில்லை. விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலர் இருக்கலாம். நாற்காலிக்கென்று அத்தகையப் பண்பு ஒட்டப்பட்டிருக்கிறதோவென எண்ணவும் தோன்றுகிறது. அல்லது நாற்காலிக்கென்று பிரத்தியேகச் சக்தி இருக்கிறதோவெனத் தீர்மானிக்கத் தோன்றுகிறது. பிற சமூகத்தைவிட நமது சமூகத்தில்தான் இது பெருந்தூக்கலாகத் தெரிகிறது. அதற்கு இரு சம்பவங்களைச் சுட்டலாம் என எண்ணுகிறேன்.

1970 களில் மாணவியொருத்தி தமிழாசிரியை ஒருவரிடம் கல்வி கற்று அதன்பின் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கல்லூரியில் பயிற்சியை முடித்துக்கொண்டு ஒரு தமிழ்ப்பள்ளியிலி ஆசிரியையாக வருகிறார். அப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தவர் வேறு யாருமல்லர்; தனக்குத் தமிழறிவை ஊட்டிய அதே தமிழாசிரியைதான். முன்பு ஒரு காலம், இம்மாணவி சம்பத்தப்பட்ட ஆசிரியையைப் போலவே தானும் ஆசிரியையாக வரவேண்டுமென்று இளவயதிலேயே மனக்கோட்டையை விதைத்துக்கொண்டவர். இம்மாணவியின் எஸ்.பி.எம் தேர்வு முடிவுச் சான்றிதழைப் பார்த்தால் இவர் மருத்துவராகுவதற்குத் தகுதியுள்ளவரென உறுதியாகக் கூறும். இம்மாணவியின் இடைநிலைக்கல்வியில் அவருடன் பயின்றவர்கள் அனைவருமே சீனர்கள். இருவர் மட்டுமே தமிழர்கள். அவர்களுள் ஒருவர்தான் இந்த மாணவி. இவரோடு படித்தவர்கள் பெரும்பாலும் மருத்துவர்களாகவும், நீதித்துறையிலும், வெளிநாட்டு நிறுவனத்திலும் உயர் பதவிகளை அலங்கரித்தும் வருகின்றனர். இவரோடு பயின்ற ஒரே தமிழ் மாணவன், அவனும் மருத்துவராகிவிட்டான். இந்த மாணவி மட்டும் ஏனோ, தம் இளம்பிராயத்திலிருந்தே ஆசிரியராக வர வேண்டும் என்று கனவுகளை வளர்த்துக்கொண்டாள். இந்தக் கனவுகளுக்குப் பின் மேற்சுட்டிய ஆசிரியையின் பங்கு அதிகமாக உள்ளது. அவருடைய போதனாமுறை, அணுகுமுறை, மாணவர் நலனில் அக்கறை காட்டும் பாங்கு, அன்பு, பண்பு என அனைத்திலும் சீர்பெற்ற முன்னுதாரணமாய்த் திகழ்ந்த காரணத்தால், அதன் தாக்கங்களும் இவரிடம் அப்பொழுதே ஏற்பட்டுவிட்டது. இதுதான் உண்மை! அதோடு, பல சூழல்களில் தமது முன்னாள் ஆசிரியையைப் பற்றி பல களங்களில் இமயமளவு பெருமையாகப் பேசியிருக்கிறார் இந்த மாணவி. இத்தகையக் கனவுகளோடுதான் ஆசிரியர்ப் பயிற்சியை முடித்துக்கொண்டு தமிழ்ப் பள்ளிக்குப் பணியில் அமர வந்துள்ளார். வந்த இடத்தில் தமது முன்னாள் ஆசிரியையே தலைமையாசிரியராகப் பொறுப்பிலிருந்தார். இதைக் கண்டதும் பெருத்த மகிழ்ச்சியும் பெருமையும் அம்மாணவிக்கு ஊற்றெடுத்தது. இனித் தமது இலட்சியம் அவரின் முன்னிலையிலேயே நிறைவேறப்போகிறது என விசேடக் கனவுகளை வளர்த்துக்கொண்டாள். ஆனால், நடந்தது வேறு!

முதல் நாள் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட அம்மாணவி அத்தலைமையாசிரியையின் காலில் விழுந்து ஆசியெல்லாம் பெற்றுக்கொண்டார். மலேசியக் கல்விச் சூழலில் ஆயிரத்தில் ஒருவர்தான் இப்படியெல்லாம் செய்வார். அந்த ஒருவர் அந்த ஆண்டில் இவராகத்தான் இருக்க முடியும். நாள் செல்லச் செல்ல தலைமையாசிரியையின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. முகம் கொடுத்துப் பேசாமை, சாடை மாடையாகப் பேசுவது எனக் குத்தல் நீண்டது. இம்மாணவிக்கு இதை மனத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொஞ்சம் விலகி நின்று அவதானிக்கத் தொடங்கியபோது சில விசித்திர உண்மைகள் வெளிப்படத் தொடங்கின.

இந்த மாணவி சற்று வசதியான குடும்பப் பின்புலத்தைக் கொண்டவராதலால், இவரது நடை.உடை,பாவனை கூடுதல் நாகரிகமாக இருக்கும். முற்போக்காகச் சிந்திப்பதிலும், ஆடை அணிகலன்களிலும் மற்றவர்க் கண்களை பறிக்கும் அளவுக்கு இருக்கும். அந்தத் தமிழ்ப்பள்ளி தோட்டப்புறத்தில் அமைந்திருந்ததால் மற்ற ஆசிரியர்களும் அவரை மாற்றுக் கண்ணோட்டத்திலேயே பார்க்கலாயினர். சிலர் அவரின் பக்கமாய் நின்றனர். தலைமையாசிரியரின் மாற்றுப் போக்குக்கு இதுதான் காரணமென்று இம்மாணவியால் நம்ப முடியவில்லை. காலப்போக்கில் தமது உடை விடயத்தில் எளிமையைக் கையாண்டார். அப்பொழுதும் தலைமையாசிரியர் பழைய போக்கிலேயே இருந்தார். அதன் உச்சமாக ஒரு முறை ஆசிரியர்க் கூட்டத்திலும் மிகப் பட்டவர்த்தனமாகவே பேச முற்பட்டார். அந்தப் பேச்சில்தான் ஓருண்மை வெளிப்பட்டது. எந்தச் சனியனை ஒழிக்க பெரியார் போராடினாரோ, அந்தச் சனியனையே தம் இதயத்தில் வைத்திருந்தார் இந்தத் தலைமையாசிரியை. இத்தனைக்கும் அந்தச் சீழ்பிடித்த சனியனுக்கும் இம்மாணவிக்கும் சம்பந்தமில்லை. ஒருவரைக் கீழ்த்தரமாக விமர்சிக்க இந்தச் சனியன்தான் சரியான ஆளோ?!

அந்தச் சம்பவத்திற்குப் பின்னர், இம்மாணவியின் நடவடிக்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. இனி இப்பள்ளியில் பணி புரியக்கூடாதென முடிவெடுத்து மேற்கல்வியைத் தொடரும் பொருட்டுப் பல்கலைக்கழகம் சென்று ஆங்கிலப் போதனா முறையில் தேர்ச்சிப் பெற்று இடைநிலைப்பள்ளியில் பணிபுரிந்து, பின்னர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் விரிவுரையாளராகப் பணியில் அமரச் சென்றுவிட்டார். இப்பொழுது அந்தத் தமிழ்ப்பள்ளி நல்ல ஆசிரியை ஒருவரை இழந்துவிட்டதாக இன்னமும் பெற்றோர்கள் பலர் பேசிக்கொண்டுதான் உள்ளனர். குழு மனப்பான்மையில் இயங்குவதும் கோஷ்டியாகப் பிரிந்திருப்பதுவும், வர்ணாசிரமத்தைத் தூக்கி நிறுத்துவதுவும் பல தமிழ்ப்பள்ளிகளில் மிகக் கமுக்கமாய் நிகழ்ந்துவருகின்றன. இந்நாட்டில் ஒழுக்கச் சிதைவை முதலில் கற்றறிந்தவர்களிடமிருந்துதான் அகற்ற வேண்டும். அந்தத் தலைமையாசிரியை இன்னமும் இருக்கிறார். அவர் முகத்தில் விழிக்கக்கூடாதென உறுதிகொண்டுள்ளார் அந்த ஆசிரியை.

இன்னொரு சம்பவம் அடுத்து வருகிறது. இது மற்றொரு வகை நாற்காலி. தலைமையாசிரியருக்கு ஒரு நாற்காலி என்றால் அவருக்கு மேல் அமர்ந்திருக்கும் இன்னொரு நாற்காலியைப் பற்றியது. அந்தப் பள்ளிக்கு அந்த உயர் அதிகாரி வருவார் எனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவர். இருவருக்கும் இரண்டு மூன்று வயது வித்தியாசந்தானேயொழிய, மற்றப் பொது இடங்களில் சந்திக்கின்றபோது நட்புணர்வுடன் பழகுவது அவர்களது தோழமையின் அடையாளம்.அறுபதுகளில் ஒன்றாக ஆசிரியர்ப் பயிற்சியை மேற்கொண்டு பின்னர் காலச் சுழற்சியில் ஒருவர் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியராகவும் இன்னொருவர் மேல் மட்டத்திற்குச் சென்ற கதை இது. இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாயினும் ஒருவர் பதவியின் காரணமாகத் தலைநகருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். ஒரு நாள் தமது பழைய ஊரில் வாழ்ந்த நண்பரின் இறப்புக்கு வர வேண்டிய சூழல். வந்தார்; அரைக்கால் சிலுவார் அணிந்தபடி மிக எளிய தோற்றத்தில் நண்பரின் இறுதிக் காரியத்தை முடித்துவிட்டுப் புறப்பட்டுப் போகவேண்டியதுதானே? அவர் அவ்வாறு செய்யவில்லை. அருகிலுள்ள தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அதே கோலத்துடன் சென்று தலைமையாசிரியரின் அனுமதியின்றி கால் மேல் கால் போட்டுக்கொண்டு அந்தக் கோப்பைக் கொண்டு வா, இந்தக் கோப்பைக் கொண்டு வா என ஒருமையில் விளித்திருக்கிறார். தாம் ஒரு மேல் மட்ட கல்வி அதிகாரியெனும் அங்க அடையாளங்கள் சிறிதுமின்றி ஆதிக்கம் செலுத்த முனைந்தது அந்தத் தலைமையாசிரியருக்கு மட்டுமல்ல, அன்குப் பணியில் இருந்த மலாய்க்கிராணி அலுவலருக்கும் பிடிக்கவில்லை. கல்வி இலாகாவுக்குத் தகவலைத் தெரிவித்துவிடுங்கள் என அந்த மலாய்க்காரப் பெண்மணியின் கைகள் பரபரத்தன. நட்பைக் காரணங்காட்டி அந்தத் தலைமையாசிரியர் பின்வாங்கிவிட்டார். பின்வாங்கியென்ன? அவரது மனம் நிலைகொள்ளவில்லையே! இந்த நிமிடம் வரை புழுங்கிக்கொண்டும் நொந்துகொண்டுந்தான் இருக்கிறார்.சின்ன வயது நட்பும் உறவும் ஒரே நொடியில் சிதிலமாயின! சம்பத்தப்பட்ட மேலதிகாரி தமது சாதியக் கட்டமைப்பை நேரம் பார்த்துச் சொருகுபவன் என்பதை இப்போது நன்கு உணர்ந்துகொண்டார் அந்தத் தலைமையாசிரியர். தமிழால் மேல் மட்டத்திற்குச் சென்ற அந்த அதிகாரியின் பெயரில் தமிழ் வாடையோ, திராவிடப் பரம்பரையின் நெடியோ வீசாது. தமிழ்க் குமுகாயத்தைக் கூண்டோடு தொலைத்துக்கட்டிய கொடியவனின் சாயல் கொண்ட ஊரைச் சார்ந்தவனின் பேரைக் காட்டும். நாம் இன்னும் ஏதிலிதானா? இத்தகையவர்களைத் தமிழன்னை மன்னிக்கலாம். ஆனால், மானமுள்ளவனால் பொறுக்க முடியாது!

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768