முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 40
ஏப்ரல் 2012

  கதவைத் தட்டும் கதைகள்... 16
ராஜம் ரஞ்சனி
 
 
கட்டுரை:

கூடங்குளமும் அமெரிக்கத் தீர்மானமும்
அ. மார்க்ஸ்

தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை
ம. நவீன்

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
ஷம்மிக்கா



சிறுகதை:


வசனம்
யோ. கர்ணன்

மொழிபெயர்ப்பு சிறுகதை : என் அப்பா ஓர் இலக்கியவாதி
தினேசுவரி



விமர்சனம்

ஒளி என்பது வெளுப்பான இருட்டு - பித்தனின் உடையாத இரவுகள் (கே. பாலமுருகன் சிறுகதைகள் - ஒரு பார்வை)
ஆதவன் தீட்சண்யா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு
ம. நவீன்

சமகால அரசியல்
கி. புவனேஸ்வரி

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...30

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ந. பெரியசாமி

கிருஷ்ணன் நம்பியின் ‘தங்க ஒரு........’

தற்சமயம் வசித்துக் கொண்டிருக்கும் வீடு, இதுவரையிலும் வசித்த வீடுகள் என எல்லோர் வாழ்விலும் பலவித அர்த்தங்களைத் தன்னுள் புதைத்துக் கொண்டுள்ளது வீடு. மனித வாழ்வின் சுகதுக்கங்கள், கனவுகள், லட்சியங்கள், ரகசியங்கள், அசம்பாவிதங்கள் என யாவையும் பதுக்கிக் கொண்டு வாய் பேசா வீடுகள் வாழ்க்கையில் மறக்க இயலா அபூர்வங்கள். அதனால்தான் வீடு எனும் அரும்பொருளைப் பற்றிய சினிமா, கதை, படம் போன்றவற்றிற்கு என்றுமே தனியிடம் உண்டு. வீடுகள் பேசாவிட்டாலும் நம் நினைவுகளின் மூலம் நம்முள் ஓயாது வீடும் அது சார்ந்த நினைவுகளும் பேசிக் கொண்டே இருக்கின்றன. அத்தகைய நினைவுகளுடன் நம்முடன் பேசும் கதை கிருஷ்ணன் நம்பியின் ‘தங்க ஒரு......’

வாடகை வீடொன்றைத் தேடி அலைபவன் கண்ணுக்கு இரு பூட்ஸ்கள் தென்படுகின்றன. அதனுள் வசிக்கும் குறுமனிதனின் சந்திப்பைக் கடிதத்தில் தன் மனைவியிடம் பரிமாறிக் கொள்ளும் சராசரி மனிதனின் உள்ளமாய் ‘தங்க ஒரு......’ கதைத்தளம் அமைகின்றது.

தான் சந்திக்கும் பூட்ஸினுள் தங்கியிருக்கும் குறுமனிதனின் வாழ்க்கை விந்தையாக இருப்பினும் அவன் தன் வாழ்நாளைக் கடந்த விதம் அவனின் இருப்பை உண்மையாக்கி காட்டுகின்றது. அவனும் ஒரு தருணத்தில் இவனைப் போன்றே வாடகைக்காக வீடு தேடி அலைந்தவன். வாடகைக்குக் கிடைத்த வீடுகள் வாடகையை விட சிறியதாகவும் குறுகியதாகவும் இருந்ததால் அதனுள் வளைந்து குறுகி வாழ வேண்டிய நிர்ப்பந்தம். நிர்ப்பந்தமாகிவிட்ட வாழ்க்கையைப் பழக்கமாக்கிக் கொள்ள உடலும் வளைந்து கொடுக்க பழகிக் கொண்டது. அதனால் அம்மனிதன் மற்றும் அவனுடைய மனைவியின் உடல்கள் வளைந்து கூன் விழுந்து மீண்டும் நிமிர்ந்து என தங்களின் உருவங்களைத் தங்கள் உடல் பாகங்களுடன் சுருக்கிக் கொள்கின்றன. இத்தகைய சூழலில் பிள்ளைகளின் மரணங்களையும் எதிர்கொள்கின்றான். இறுதியில் தன் பூட்ஸில் வசிக்கும் அளவுக்கு அவனது உடலும் அவனது மனைவியின் உடலும் சிறிதாகிவிட்டிருந்தன. அவனது கதையைத் தன் கடிதத்தில் சொல்லி முடிக்கும் தருவாயில் குறுமனிதனின் வாழ்க்கையும் அதிர்ஷ்டம் வாய்ந்ததென எண்ணி பெருமூச்சுவிடுகின்றான் கதைசொல்லி.

இக்கதையில் வரும் குறுமனிதனை முதலில் பூட்ஸினுள் சந்திக்கும் கதைச்சொல்லிக்கு ஏற்படும் ஆச்சரியம் நமக்குள்ளும் எழுகின்றது. ஆனாலும் குறுமனிதன் தன்னை அறியாமலேயே அத்தகைய உடல் உருவத்தை அடைய தான் கடந்து வந்த வாழ்க்கையைச் சொல்லி முடிக்கையில் நமக்குள் எழுந்த ஆச்சரியம் நம்மை விட்டு தானாகவே விலகி விடுகின்றது. மிகப் பெரிய வாழ்க்கைப் போராட்டத்தை நம்முன்னே கொண்டு நிறுத்தும் இக்கதை பின்வரும் முக்கியமான விஷயங்களை எழுப்பிவிடுகின்றது.

குறுகி செல்லும் மனித வாழ்க்கை

(1) குறுமனிதனின் வாழ்க்கையை ஒவ்வொரு சராசரி மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அனுபவித்தே வருகின்றான். வாழ்க்கைப் போராட்டங்கள் மனிதனின் வாழ்க்கையைக் குறுக வைக்கின்றன. குறுகிய கட்டத்துக்குள்ளேயே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கற்றுக் கொள்கின்றான். அவனது வாழ்க்கை இன்னும் அவனைக் குறுக வைக்கின்றது. அவன் அதற்கேற்ப வளைந்து கொடுக்கின்றான். இது மரணம் என்ற எல்லையைத் தொடும் வரையிலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

(2) இது இயற்கையின் உதவியினால் தானாகவே நிகழ்கின்றது. ஆதலால் உடலும் உள்ளமும் ஒத்துழைக்கின்றன. சூழ்நிலைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்க மறுப்பவன் கூட வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் சுருண்டு விழுகின்றான்.

(3) குறுமனிதன் தன் உருவம் சுருங்கி குறுவடிவத்தை அடைந்து திருப்தி அடைவதைப் போன்றே வாழ்க்கையில் குறுகி செல்லும் மனிதன் எளிமையை நெருங்கி அமைதியை மனதில் அடைகின்றான். எளிமை வாழ்வு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது.

விரிவுப்படுத்தப்படுகின்ற மனித வாழ்க்கை

(1) சகலமும் படைத்த மனிதர்களின் வாழ்க்கையில் இத்தகைய நிகழ்வு நடைபெறுவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. அவர்களின் வாழ்க்கை இதற்கெல்லாம் எதிர்மறையானது. தங்களின் பொன், பொருள், மண் என்பதையே சகலம் என எண்ணிக் கொள்பவர்கள் அவற்றினால் தங்கள் வாழ்க்கையை விரிவுப்படுத்தி கொள்கின்றனர். இவ்விரிவாக்கம் மேலும் ஆசைகளால் தொடர்ந்து கொண்டிருகின்றது. இதுவும் மரணம் வரையில் சில சமயங்களில் நீள்வதாகவும் உள்ளது. மரணம் வரை தொடர முடியாத விரிவாக்கங்களையே பல சமயங்களில் இருப்பதைக் காண முடிகின்றது.

(2) இது செயற்கையாக மனிதனால் உருவாக்கப்படுகின்றது. அமைந்த முறையிலேயே பல தருணங்களில் அழிந்தும் போய்விடுகின்றது. உடலும் உள்ளமும் வளைந்து கொடுக்க பழக்கப்படுத்திக் கொள்ளாமையால் பெரும் பாதிப்பினை ஏற்க நேரிடுகின்றது.

(3) விரிவுப்படுத்திக் கொள்ளப்படும் வாழ்க்கை முறைகள் மனிதனின் நிம்மதியைச் சீர்குலைத்து எரிகின்றன. சகலம் என அர்த்தப்படுத்திக் கொள்பவை நிலையற்றதென அறிந்து கொள்ளும் தருணம் இது.

குறுமனிதன் கதைசொல்லியிடம் பேசிக் கொண்டிருக்கையில் பின்வரும் வரிகள் வருகின்றன.

‘இது ஒரு பட்டணம் என்றா நினைக்கிறீர்கள்? ஒ! இது ஒரு சந்தை; பெரிய சந்தை. சந்தை நெருக்கடியாகத்தான் இருக்கும். ஆனால் இந்தச் சந்தை கலைவதில்லை. கூடிய சந்தை கூடியபடியே இருக்கிறது. சந்தையிலேயே எல்லாரும் தங்கிவிட்டார்கள்’

பட்டணத்தைச் சந்தை என மேற்கோள் காட்டியிருப்பது மறுப்பதற்குரியதல்ல. பட்டணம் பணத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட சந்தையாகி போன நிலையைக் குறுமனிதன் நிதானமாக சொல்லி செல்கின்றான்.

கதையைப் படித்து முடிக்கையில் வீடுகளின் குரல் காதில் கேட்பது போன்ற ஓர் உணர்வு. மனிதர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளும் வீடுகளின் நிலை சில சமயங்களில் பரிதாபத்துக்குரியவை. ஒவ்வொரு வீட்டிலும் எழுதப்படாத சரித்திரங்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768