|
|
மலேசியத்
தமிழ் படைப்பாளிகளின் ஆளுமையை வளர்க்கவும், பலதரப்பட்ட அறிவுத்துறைகளிலும்
தத்துவங்களிலும் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் வல்லினம் தொடர்ந்து சில
வகுப்புகளை நடத்த முடிவெடுத்துள்ளது. அவ்வகையில் முதல் வகுப்பாக
'மொழியியல்' ஜுலை 7 மற்றும் 8-ல் (சனி & ஞாயிறு) நடைபெற உள்ளது.
இப்பட்டறையை எம்.ஏ.நுஃமான் அவர்கள் வழி நடத்துவார்.
'கிராண்ட் பசிப்பிக்' (Grand Pacific Hotel, Jalan Ipoh, Kuala Lumpur)
தங்கும் விடுதியில் இந்தப் பட்டறை நடைப்பெறும். 50 பேருக்கு மட்டுமே
வழங்கப்பட்ட வாய்ப்பு 2 நாட்களில் நிறைவடைந்துவிட்ட நிலையில் அடுத்த
வகுப்பான 'அமைப்பியல்' ஆகஸ்ட்டு மாதம் நடத்தப் படவுள்ளது. இப்பட்டறையைத்
தமிழவன் அவர்கள் நடத்தவுள்ளார். இதற்கு கட்டணம் 100 ரிங்கிட் ஆகும்.
முதலில் பதிவு செய்பவர்களுக்கே வாய்ப்பு. விருப்பம் உள்ளவர்கள் 016-3194522
என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம்.
|
|