முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 42
ஜூன் 2012

  Bersih - Halau (எதைச் சுத்தப்படுத்துவது எதை விரட்டுவது?)
கே. பாலமுருகன்
 
 
       
நேர்காணல்:

விழிப்புணர்வினால் மட்டுமே எதிர்ப்புணர்வு சாத்தியம்!
கா. ஆறுமுகம்




கட்டுரை:


Bersih - Halau (எதைச் சுத்தப்படுத்துவது எதை விரட்டுவது?)
கே. பாலமுருகன்

கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் எறிதல்
ஷம்மிக்கா



சிறுகதை:

மோப்பம்
கே. பாலமுருகன்

மொழிப்பெயர்ப்புச் சிறுகதை : ஆனந்தம்
மூலம் : ஆண்டன் செகாவ் | தமிழில்: க. ராஜம் ரஞ்சனி



கவிதைத்தொட‌ர்:

இனியவளின் குறிப்புகள்... 3
பூங்குழலி வீரன்



தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 1
அ. மார்க்ஸ்



கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி



கவிதை:

வ.ஐ.ச. ஜெயபாலன்

சின்னப்பயல்

ஏ. தேவராஜன்

ஷம்மி முத்துவேல்

ந. பெரியசாமி

எம். ராஜா

ஆறுமுகம் முருகேசன்



எதிர்வினை:

நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்
அ. பாண்டியன்



அறிவிப்பு:

வல்லினம் வகுப்புகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கலை இலக்கிய விருதுகள் 2011

மலேசியாவின் தேர்தல் நடைமுறையில் உள்ள குழறுபடிகளை மாற்றியமைக்கும் பொறுட்டு, முன்னெடுக்கப்பட்ட பெர்சே பேரணியைத் தலைமை வகித்து நடத்திய டத்தோ அம்பிகாவின் வீட்டின் முன் மாட்டிறைச்சி பர்க்கர் கடைகள் திறக்கப்பட்டு விற்கப்பட்டிருக்கின்றன. 'Sekinchan Ikan Bakar' கடை முதலாளியும் கார் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்பவருமான டத்தோ ஜமால் தலைமையில் பெர்சே பேரணியின் மூலம் பாதிக்கப்பட்ட பல வியாபாரிகளுக்கு நியாயம் கேட்டு இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. ஒரு புகழ்மிக்க வியாபாரியான ஜமால் எப்படி டத்தாரான் மெர்டெக்கா பகுதியில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுள் ஒருவராக இருக்க முடியும் என எழுந்த கேள்விக்கு, 'ஜாலான் அப்துல் ரஹ்மான் சாலையில் இரவு சந்தை கடை ஒன்று என் பெயரில் இயங்கி வருகிறது, நான் வருடா வருடம் அதற்குரிய லைசன்ஸ் பணத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறேன். ஆகையால் நானும் அங்குள்ள ஒரு வியாபாரிதான்' எனக் கூறியிருக்கிறார்.

டத்தோ ஜமால் 'anti bersih' எனும் முகநூல் அமைப்பின் மூலம் பெர்சே பேரணி நடந்தபோது வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட கடை வியாபாரிகளை ஒன்று திரட்டி டத்தோ அம்பிகா வீட்டின் முன் வியாபாரம் செய்யும் திட்டத்தைப் பரவலாக எல்லார் மத்தியிலும் பிரசாரம் செய்யத் துவங்கினார். அதன் விளைவாகவே டத்தோ அம்பிகா வீட்டின் முன் மாட்டிறைச்சி பர்க்கர் போட்டப்பட்டிருக்கிறது. மேலும், ஓய்வுப் பெற்ற இராணுவ வீரர்கள் அவர் வீட்டின் முன் இடுப்பாட்டம் ஆடி அம்பிகாவைக் கேவலப்படுத்தியுள்ளனர். அதோடு, அம்னோ இளைஞர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஒரு போத்தலில் சிறுநீர் கழித்து அவர் வீட்டை நோக்கித் தூக்கி எறிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படியொரு எதிர்ப்புணர்வுக்கு என்ன காரணம்?

டத்தோ அம்பிகா சர்வதேச அளவில் சாதனை பெண்மணியாக அறியப்பட்டவர். மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். மலேசியாவில் பெர்சே எனும் பேரணியின் மூலம் தேர்தல் முறைமையைச் சீரமைக்க 8 கோரிக்கைகளை முன்வைத்தவர். ஆனால், தொடர்ந்து அவர் முன்னின்று நடத்தும் பெர்சே பேரணி ஆர்பாட்டப் பேரணியாகவே ஆக்கப்பட்டு முடக்கப்படுகிறது. சமீபத்தில் மலேசியாவின் 13 ஆவது தேர்தல் நடத்தப்படவிருப்பதாக எழுந்த அனுமானங்களை முன்னிட்டு அம்பிகா தலைமையில் மீண்டும் பெர்சே 3.0 பேரணி கோலாலம்பூரில் நடந்தது. 1000க்கும் மேற்பட்டோர் அனுமதியற்ற பேரணியில் கலந்துகொண்டு நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததற்காகக் கைது செய்யப்பட்டுப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால், அந்தப் பேரணியில் மொத்தம் 3 லட்சம் பேர் கலந்துகொண்டதாகக் கூறப்படுவதோடு உலகக் கவனத்தை ஈர்த்த ஒரு பேரணியாகவும் அது கருதப்படுகிறது. உலகம் முழுக்க வாழும் மலேசியர்கள் பெர்சே பேரணியை ஆதரித்து பொது இடத்தில் திரண்டு ஆதரவு தெரிவித்தார்கள். ஆஸ்ட்ரோலியா, நியூ யோர்க், சிங்கப்பூர் என பல நாடுகளில் வாழும் மலேசியர்கள் பெர்சே போன்ற பேரணியையும் கூட்டங்களையும் தத்தம் நாடுகளில் நடத்தியுள்ளனர். (பார்க்கவும்: www.semparuthi.com).

அம்பிகா முன்வைக்கும் தேர்தல் சார்ந்த கோரிக்கைகள் என்னவென்று பார்க்கலாம்:

அ. ஓட்டாளர்களின் பெயர் பட்டியலைப் புதுப்பிக்க வேண்டும்
(இன்னமும் இறந்தவர்களின் பெயர் ஓட்டுரிமை பட்டியலில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.)

ஆ. தபால் வழி ஓட்டுப்போடும் முறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்
(தபால் வழி அனுப்பப்படும் இராணுவ வீரர்களின் ஓட்டுகள் சுயநலத்துக்காகப் பாவிக்கப்படுகிறது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.)

இ. நிரந்திர மை உபயோகத்தை அமலுக்குக் கொண்டு வர வேண்டும்

ஈ. சுதந்திரமான நேர்மையான ஊடக பங்கேற்பை அனுமதிக்க வேண்டும்
(யார் பக்கமும் சாராத செய்தி ஊடகத்தின் வழி நியாயமான தகவல்கள் மக்களைப் போய் சேர வேண்டும்.)

உ. தேர்தல் பிரசாரம் 21 நாட்கள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்

ஊ. பொது அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்

எ. தேர்தலில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்

ஏ. அசுத்தமான நியாயமற்ற அரசியல் முறையை நிறுத்த வேண்டும்

மேற்கண்ட அனைத்துக் கோரிக்கைகளும் நாட்டில் தேர்தல் முறையைச் சுத்தப்படுத்த பெர்சே அமைப்பின் மூலம் டத்தோ அம்பிகாவால் முன்வைக்கப்பட்டவையாகும். இந்தப் பெர்சே பேரணிக்குப் பிறகு எதிர்க்கட்சியிடமிருந்து முழுக்க ஆதரவு கிடைத்ததோடு அவர்களும் கூட்டாக இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள். எதிர்க்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் இரண்டாவது பெர்சே பேரணியின் போது கடுமையாகத் தாக்கப்பட்டதோடு, மூன்றாவது பெர்சே பேரணியில் கலந்துகொண்டதற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஜனநாயக் முறையைக் கையாளும் நாட்டின் பொது தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என நாட்டின் ஒரு குடிமகன் எதிர்ப்பார்ப்பது நியாயமானதுதானே? தேர்தல் அமைப்பு முறையை நோக்கிய இந்தக் கோரிக்கைகளை முன்வைக்க அம்பிகா எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்றல்ல. அதற்கு அவர் இந்நாட்டில் ஓட்டுரிமை உள்ள ஒரு தனிநபராகவும் இருக்கலாம்.

மே மாதம் 25ஆம் திகதி ஷாருல் அவர்களின் தலைமையில் “காகாசான் சத்து மலேசியா' இளைஞர் அமைப்பு டத்தோ அம்பிகா வீட்டின் முன் 'halau' என்ற சுலோகத்துடன் ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். 'halau' என்றால் விரட்டியடித்தல். அதாவது, பெர்சே என்ற இந்த அமைப்பு அசுத்தமானது என்றும் டத்தோ அம்பிகாவை உடனே நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்று அம்பிகாவின் மீது பாய்ந்துள்ளார்கள். 28ஆம் திகதி நடந்த பெர்சே பேரணியின் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள சேதத்திற்கும் இழப்புக்கும் டத்தோ அம்பிகா பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என அவர்கள் கோரிக்கையை விடுத்துள்ளதோடு, அம்பிகா எல்லார் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் அவர்கள் வழியுறுத்தியுள்ளனர்.

இந்த 'ஹாலாவ்' எதிரணி அம்பிகாவின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை:

-அம்பிகா ஒரு தேசத்துரோகி
-சட்டத்தையும் நீதி மன்றத்தையும் எதிர்க்கும்படி நாட்டு குடிமக்களைத் தூண்டி விடுபவர்
-ஆர்பாட்டப் பேரணியின் மூலம் நாட்டு மக்களின் பொதுநன்மையைச் சிதைத்தோடு பொது சொத்தையும் சேதப்படுத்தக் காரணமாக இருந்திருக்கிறார்
-டத்தாரான் மைதானத்திற்குள் நீதிமன்றத்தின் உத்தரவையும் எதிர்த்து உள்நுழைந்து பேரணியை நடத்திய குற்றவாளி
-தேர்தல் ஆணையத்தின் உண்மையான தகவல்களை மாற்றி திரித்துக் கூறி ஏமாற்று வேலைகள் செய்தவர்
-அந்நிய சக்தியுடன் கூட்டுச் சேர்ந்து நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் அதிகாரச் சக்தி
-இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுப்படக்கூடியவர்
-அந்நிய சக்திகளுடன் சேர்ந்து கொண்டு நாட்டிற்குத் துரோகம் செய்பவர்
-நாட்டின் இளைஞர்களைத் தவறான பாதையில் வழிநடத்தக்கூடியவர்.
-நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தான பெர்சே பேரணியை நடத்தக்கூடியவர்

உலக அளவில் சாதனை பெண்மனி என விருதெல்லாம் வழங்கப்பட்ட டத்தோ அம்பிகாவின் மீது இத்தனை குற்றசாட்டுகளை முன்வைக்க என்ன காரணமாக இருக்கும்? அவருடைய நியாயமான தேர்தல் எதிர்ப்புக்குரலுக்கு அஞ்சியே பலர் பெர்சேவை ஒடுக்க முற்படுகிறார்கள் என்ற கருத்துகளும் கூறப்படுகின்றன. உள்நாட்டில் இத்தனை ஆபத்திற்குரியவர் எனக் குற்றம்சாட்டபட்ட டத்தோ அம்பிகாவிற்கு எப்படி உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு விருதெல்லாம் கிடைத்திருக்கிறது? நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். இந்தக் காலக்கட்டத்தில் யார் எந்தவித கருத்தை முன்வைத்தாலும், அவற்றை ஒரு தேர்தல் பிரச்சாரமாகவோ அல்லது ஏதாவது ஓர் அணிக்கு ஆதரவான பேச்சாகவோ மட்டுமே மதிப்பீடப்படுகிறது.

உலக அளவில் 30 வருடம் 40 வருடம் என ஒரே நாட்டில் ஆட்சி நடத்தி வரும் நடப்புக் கட்சிகளுக்கு எதிராக மக்கள் திரண்டு ஆட்சியையே மாற்றியமைத்த வரலாறுமிக்கத் தருணங்கள் நிகழ்ந்த ஒரு நூற்றாண்டில் மலேசியாவிலும் இதுபோன்ற மக்கள் புரட்சி தொடங்கியிருக்கிறது. ஒருவேளை நாட்டைக் கைப்பற்றினால் ஒற்றுமையாக வலுமிக்க ஓர் அரசாங்கத்தை அமைக்க எதிர்க்கட்சியிடம் ஆளுமை இருக்கிறதா? அல்லது தொடர்ந்து தேசிய முன்னணியே நாட்டைத் தக்க வைத்துக்கொள்ளுமா? அரசியல் புரட்சி என்பதே இங்குக் கிடையாது? ஆங்காங்கே பொதுமக்களிடமிருந்து எழும் ஒருமிக்கக் கருத்துகள் வெறும் ஆர்பாட்டங்களாக மட்டும்தான் பார்க்கப்படுமா?

பெர்சே 3.0 பேரணியில் இராசாயன நீரை அடித்து மக்களைக் களைத்ததோடு மட்டுமல்லாமல், கண்ணீர் புகையை அதிக அளவில் வீசி மக்களைத் துன்புறுத்தியுள்ளனர் என மலேசியா இன்று செய்தி தெரிவிக்கிறது. அம்பிகா வீட்டின் முன் திரண்ட ஆர்பாட்டக்காரர்களுக்கு எப்படி ஒரு தனிநபரின் வீட்டின் முன் திரண்டு அவருக்கு இடையூறு வழங்க அனுமதி வழங்கப்பட்டது? அது அமைதி பேரணியா? அப்படியென்றால் கோலாலம்பூரில் நடந்த பெர்சே பேரணி அமைதி பேரணி இல்லையா?

பொதுமக்களுக்கு இதன் தொடர்பாக நியாயமான நேர்மையான செய்திகள் போய் சேர வேண்டும். எது உண்மை என அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். அரசியல் சார்ந்து ஒரு விழிப்புணர்ச்ச/ விழிப்புணர்வு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்தும் வாய்ப்பைப் பொது மக்களே வழங்கும் ஒரு ஜனநாயக முறையைப் பின்பற்றும் நாட்டில்தானே நாமெல்லாம் இருக்கிறோம்? நம் நாட்டில் தேர்தல் எந்தத் தலையீடும் ஏமாற்றும் இல்லாமல் நடைப்பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு குடிமகனின் எதிர்ப்பார்ப்பும்கூட. உண்மையில் எதைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் எதை விரட்ட வேண்டும் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768