முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 42
ஜூன் 2012

  எதிர்வினை: நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்
அ. பாண்டியன்
 
 
       
நேர்காணல்:

விழிப்புணர்வினால் மட்டுமே எதிர்ப்புணர்வு சாத்தியம்!
கா. ஆறுமுகம்




கட்டுரை:


Bersih - Halau (எதைச் சுத்தப்படுத்துவது எதை விரட்டுவது?)
கே. பாலமுருகன்

கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் எறிதல்
ஷம்மிக்கா



சிறுகதை:

மோப்பம்
கே. பாலமுருகன்

மொழிப்பெயர்ப்புச் சிறுகதை : ஆனந்தம்
மூலம் : ஆண்டன் செகாவ் | தமிழில்: க. ராஜம் ரஞ்சனி



கவிதைத்தொட‌ர்:

இனியவளின் குறிப்புகள்... 3
பூங்குழலி வீரன்



தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 1
அ. மார்க்ஸ்



கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி



கவிதை:

வ.ஐ.ச. ஜெயபாலன்

சின்னப்பயல்

ஏ. தேவராஜன்

ஷம்மி முத்துவேல்

ந. பெரியசாமி

எம். ராஜா

ஆறுமுகம் முருகேசன்



எதிர்வினை:

நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்
அ. பாண்டியன்



அறிவிப்பு:

வல்லினம் வகுப்புகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கலை இலக்கிய விருதுகள் 2011

திரு பாலமுருகன் அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் புதினத்தை நேற்று முன் தினம் வாசித்து முடித்தேன். மனதில் வந்து அமர்ந்து கொண்ட சுமையை இறக்கி வைக்க வழியில்லாமலேயே கடைசி பக்கத்தை மூடி வைத்தேன். நம் நாட்டில் விளிம்பு நிலை மனிதர்களின் தேடல்களையும் வாழ்க்கை போராட்டங்களையும் மிகச்சிறப்பாக படைத்துக் காட்டியமைக்கு வாழ்த்துகள். கதைக்கு ஊடே புதைந்து கிடக்கும் இந்நாட்டு தமிழர்களின் எழுதப்படாத சரித்திரம் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. இந்நாவலை வாசித்து முடித்ததும் சிந்தனையில் முட்டி மோதிக்கொண்டு நின்ற கருத்துகளைத் தொகுத்துப் பார்த்ததில் மூன்று விஷயங்களைத் தங்களோடு பாகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

முதலாவதாக, எனக்குத் தோட்டபுற வாழ்க்கை அனுபவம் இல்லை, ஆனால் ஒரு சீன கம்பத்தில் வாடகை வீட்டில் இளமை காலத்தில் நீண்ட நாட்கள் குடியிருந்த மறக்க முடியாத அனுபவம் உண்டு. நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் நாவவில் காட்டப்படும் சீன கம்பம் நொடிப்பொழுதில் என்னை பழைய நினைவுகளுக்கு இட்டுச் சென்று விட்டது. காட்சிகளில் கூடுதலாகவோ குறைவாகவோ ஏதும் இல்லை. அச்சு பிசகாமல் ஒரு 90-ஆம் ஆண்டு சீன கம்பத்தைக் காட்டியுள்ளீர்கள். அடிக்கடி கேட்கும் “மாஜோங்” கட்டைகளின் சத்தம் மட்டுமே விடுபட்டுள்ளது. அங்குக் காணப்படும் பொருளாதார நடவடிக்கைகளும் கூட மிக எதார்தமாக அமைந்துள்ளன.

அடுத்து, என்னதான் கழிவிரக்கத்தோடு சீதாம்பரம் சித்தரிக்கப்பட்டாலும் அவர் ஒரு தேர்ந்த சுயநலவாதியாகவே எனக்கு தெரிகிறார். முதலாளிகளுக்குக் கும்பிடு போட்டு வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திவிடலாம் என்று கணக்கு போட்டு செயல்பட்ட அவரது திட்டம் நடக்காமல் போனது துரதிஷ்டமானது. அவர் தன் காரியம் நிறைவேற எதையும் செய்யத் தயாராக இருக்கிறார். நடுநிலையாளர்கள் என்று கூறிக்கொண்டு இன்றும் சமுதாயத்தில் சிலர் இருதரப்பு ஆதரவையும் பெற்று குளிர்காய்வதையே சீதாம்பரமும் செய்கிறார். தன் வேலைகளை முடிக்க, கணேசனை பழிகடாவாக்குகிறார். வாங்கிய கடனை கட்டாமல் ஏமாற்றுகிறார். பெற்ற குழந்தைகளை மாற்றார் பொறுப்பில் விட்டுவிட்டு மிகச்சாமர்தியமாக தன் பொறுப்புகளிலிருந்து தப்பித்து ஓடுகிறார். இவ்வளவு சமாளிப்புகளைச் செய்தும் அவர் வாழ்க்கை ஈடேர வில்லை. அதற்காக சீதாம்பரம் சோர்ந்து போய் மூலையில் முடங்கிவிடவுமில்லை. தொடர்ந்து வாழ ஆசைப்பட்டு நகர்கிறார்.

வாழ்க்கை போராட்டத்தில் மிருகங்களுக்கும் மனிதனுக்கும் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு இதுவாகவே இருக்க முடியும். மிருகங்கள் நீடு வாழ முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் வாயிலாக அவற்றின் உடலும் வாழ்க்கை முறையும் மாற்றம் காணுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் வலியது வெல்லும் என்னும் விதிக்கேற்ப அவை வெற்றி பெற்று வாழ்கின்றன அல்லது தோற்றுபோய் மடிகின்றன.

ஆனால் ஆறறிவு பெற்ற மனிதனின் நீடு வாழ்தல் போராட்டம் வேறானது. வென்றவனை மட்டும் அல்ல தோற்றவனையும் வாழும் ஆசை தொடர்ந்து விரட்டுகிறது. சீதாம்பரம் மேற்கொள்ளும் அனைத்து சுயநல நடவடிக்கைகளும் நீடுவாழும் உத்திகளே. தோற்றுப்போனவனின் நீடுவாழும் உத்திகள். தோட்டத்தில் செட்டியிடம் கடன் வாங்கி பெரும் அவமானத்திற்குள்ளாகியும், பட்டணத்தில் முத்துசாமியிடம் துணிந்து கடன்வாங்குவது சீதாம்பரத்தின் ஏமாளித்தனமல்ல. அதுவே அவரது சாதுர்யம். செட்டியை ஏமாற்றியது போலவே முத்துசாமியையும் ஏமாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கை அவர் அடிமனதில் ஒளிந்துள்ளது. அதையே இறுதியில் அவர் செய்தும் விடுகிறார். இது சீதம்பரத்தின் நீடு வாழும் முயற்சியின் ஒரு உத்தியாகவே தோன்றுகிறது.

இந்த கோணத்தில் சிந்திக்கும் போது மனிதர்களின் தில்லு முள்ளுகளுக்கும் ஏமாற்று வேலைகளுக்கும் புது அடையாளம் பெறுகின்றன. உயிரினம் நீடுவாழ்தல் என்னும் அடிப்டையில் இச்செயல்கள் நியாயமாகவே தோற்றம் கொள்கின்றன. தர்மம், நீதி எல்லாம் மேம்பட்ட நிலையில்தான் (உயிர் வாழ்க்கை உறுதி பெற்ற பின்பே) சமுதாயத்தில் சிம்மாசனமிட்டு அமர்கின்றன. புதுமைபித்தனின் ‘பொன்னகரம்’ காட்டும் வாழ்க்கை போராட்டமும் இதுதான்.

இதன் காரணமாகவே உலகில் எத்தனை சமயங்களும் நீதி நெறிகளும் தோன்றினாலும் ஏமாற்றுகாரர்களும் குற்றவாளிகளும் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். நீடு வாழும் போராட்டம்தான் முதன்மை பெருகிறது. தன் வாலைத் தானே துரத்தும் நாய் போல நீதியும் அநீதியும் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டே இருக்கின்றன. ஆனால் இது மனித வாழ்க்கையில் ஒரு இருண்ட பகுதிதான். இதை உணர்ந்துதான் தாங்கள் கதை நெடுகிலும் இருட்டை ஒரு கதைப்பாத்திரமாகவே அமைத்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இருட்டு, மனித அவலங்களின் குறியீடு. ஆனால் தவிற்க முடியாத பகுதி.

அடுத்ததாக, பாத்திரபடைப்பில் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது நாதனும் அவனது குடும்பத்தாரும்தான். காரணம் அவன் ஒரு மனநோயாளி என்று நம்பிக்கொண்டு நான் கதையைத் தொடர்ந்தேன். ஆனால் என் நம்பிக்கை பொய்யாகிவிட்டது. தமிழ் இலக்கியத்தில் அபூர்வமாக காணப்படும் வளர்ப்பு முறையால் மனநிலை பிறழ்ந்தவனாக நாதன் இருப்பான் என்று ஆவலாக எதிர்பார்த்தேன். அவன் பெற்றோர் நடவடிக்கைகளும் அதற்கு ஏற்றாற் போல் இருந்தன. உண்மையில் இதேபோன்ற பழக்க வழக்கம் கொண்ட இரண்டொரு குடும்பங்களை நான் அறிவேன். அண்டை அயலாருடனும் அளவாகவே பழகும் இவர்கள் குடும்பத்தாரிடையே கலகலப்பாக பழகுவது ஏதோ குற்றம் போலவும் மரியாதை குறைவு போலவும் நடந்து கொள்வது எனக்கு வியப்பாக இருந்தது. இது ஒரு வகை மனக் கோளாறு. இவர்கள் அபரீமிதமான தனிமை வட்டத்தை உருவாக்கிக் கொண்டு வாழும் மனிதர்கள். பெரும்பாலும் பெற்றோரின் நடவடிக்கைகளின் காரணமாக பிள்ளைகளுக்கும் தொற்றிக்கொள்ளும் மேல் மட்ட மக்களின் மன வியாதி. அன்பு, அக்கறை, பாசம் என எந்த வகை மென்மையான அணுகுமுறையும் அவர்களுக்குத் தங்கள் தனிமை வளையம் உடைபடுவதாகவே அச்சத்தையும் எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தி விடுகிறது. அன்பை காட்டுவோரிடம் வெறுப்பை காட்டுவதன் வழி இவர்கள் தங்கள் நிலையை சமன் படுத்த முயல்கிறார்கள், இவ்விவரங்களை மனோவியல்ரீதியில் இன்னும் ஆழமாகவும் அணுகலாம். தாங்கள் இந்த மனநிலையை மிகநுட்பமாக அறிந்து நாதனை படைதிருக்கிறீர்கள் என்று நம்பினேன், ஆனால் அவ்வாரில்லாமல் நாதன் ஒரு குற்றவாளி என்ற திருப்பம் அக்கதாபாத்திரத்தை சிதைத்துவிட்டதாக உணர்கிறேன். நாதன் இரண்டு முறை சிறைக்கு சென்றவன் என்பதை விட இரண்டு முறை மனநல மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவன் என்பது கதைக்கு மேலும் வலு சேர்க்கும் என்பது என் நம்பிக்கை.

இறுதியாக, எழுதுவது என்பது மிகக்கடுமையான உழைப்பு என்பதை நான் அறிவேன், அவ்வகையில் தங்களின் கடுமையான உழைப்பு இந்நாவலின் எல்லா பக்கங்களிலும் நன்றே தெரிகிறது. அவ்வுழைப்புக்கு தக்க அங்கீகாரமும் கிடைக்கும் என்று நம்புகின்றேன். முதல் நாவலான நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் நாவவில் தாங்கள் அடைந்த உயரம் இனிவரும் நாவல்களில் மேலும் கூட வேண்டும் என்பதே என் ஆவல். உங்கள் எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள். நன்றி.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768