முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 42
ஜூன் 2012

  விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்... 8
ந. பச்சைபாலன்
 
 
       
நேர்காணல்:

விழிப்புணர்வினால் மட்டுமே எதிர்ப்புணர்வு சாத்தியம்!
கா. ஆறுமுகம்




கட்டுரை:


Bersih - Halau (எதைச் சுத்தப்படுத்துவது எதை விரட்டுவது?)
கே. பாலமுருகன்

கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் எறிதல்
ஷம்மிக்கா



சிறுகதை:

மோப்பம்
கே. பாலமுருகன்

மொழிப்பெயர்ப்புச் சிறுகதை : ஆனந்தம்
மூலம் : ஆண்டன் செகாவ் | தமிழில்: க. ராஜம் ரஞ்சனி



கவிதைத்தொட‌ர்:

இனியவளின் குறிப்புகள்... 3
பூங்குழலி வீரன்



தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 1
அ. மார்க்ஸ்



கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி



கவிதை:

வ.ஐ.ச. ஜெயபாலன்

சின்னப்பயல்

ஏ. தேவராஜன்

ஷம்மி முத்துவேல்

ந. பெரியசாமி

எம். ராஜா

ஆறுமுகம் முருகேசன்



எதிர்வினை:

நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்
அ. பாண்டியன்



அறிவிப்பு:

வல்லினம் வகுப்புகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கலை இலக்கிய விருதுகள் 2011

அரசியல் களத்தில் தமிழ்

திருவிளையாடல் படத்தில் ஒரு வசனம் வரும். “பிரிக்க முடியாதது?” என்று தருமி கேட்க, சிவபெருமான் “தமிழும் சுவையும்” என்பார். அதுபோல தமிழகத்திலும் இங்கும் பிரிக்க முடியாததாக ஒன்று இருந்தது. அது அரசியலும் தமிழும். ஆனால், அண்மைய காலமாக அரசியலுக்கும் தமிழுக்கும் இடைவெளி கூடிக்கொண்டே போவதை உங்களால் உணர முடிகிறதா? தமிழர்களிடையே அரசியல்வாதிகளாக இருப்பவர்கள் தமிழ்ப் பின்னணி இல்லாதவர்களாக அல்லது தமிழ்க்கல்வி பெறாதவர்களாக, தமிழை ஓரளவுக்குப் பேசிச் சமாளிப்பவர்களாக இருந்தால் போதும். தமிழர்களுக்குத் தலைவர்களாக வந்து விடலாம் என்ற நிலை வந்துவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு,நம் நாட்டில் ஓர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டம் நடந்தது. மேடையேறிய நம் அரசியல் கட்சியின் தலைவர்களில் ஒருவர், “இன்று முதல் தேர்தல் இயந்திரத்தை முடக்கி விடுங்கள்” என்றார். “என்னையா இது, தலைவரு எதிர்க்கட்சிக்கு ஆதரவா பேசுறாரு போலிருக்கு” என்று கூட்டத்தில் சலசலப்பு. அடுத்துப் பேச வந்தவர் “முடுக்கி விடுங்கள்” என்று சொல்லிச் சமாளித்தார்.

தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல், கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பது தொடர்பான ஒரு கருத்தரங்கு. மேடையில் வீற்றிருந்த அரசியல் கட்சியின் தலைவர்களில் ஒருவர், “அந்தக் கோப்பைஎங்க?” என்று ஒலிபெருக்கியில் அனவரும் கேட்கும்படி பக்கத்திலிருந்தவரிடம் கேட்டார். “அது கோப்பை இல்லீங்க, கோப்பு” என்று இன்னொருவர் திருத்திச் சொன்னார். “ரெண்டும் ஒன்னுதான்” என்று அதற்குத் திருத்தம் சொன்னார் தலைவர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வானொலிப் பேட்டியில் அரசியல் தலைவர் ஒருவர், தம் மனைவி ஒவ்வொரு நாளும் தமிழ் நாளிதழ்களைப் படித்துத் தமக்குச் சமுதாயச் செய்திகளைச் சொல்லி உதவுவதாகச் சொன்னார். அதன் மூலம் சமுதாய நிலையைத் தெரிந்துகொண்டு தாம் சேவையாற்ற முடிகிறது என்று உற்சாகமாகப் பேசினார்.

மேற்கூறிய மூன்று உண்மை நிகழ்வுகளும் ஒன்றைத் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன. நம் அரசியல் சூழலில் தமிழ்மொழி தன் தகுதியை இழந்துகொண்டிருக்கிறது என்பதுதான் அது. இந்த நிலைமை இன்னும் மோசமாகும் சூழல் உருவாகும்போல்தான் தெரிகிறது. தமிழ் தெரியாத, தமிழைத் தெளிவாகப் பேசத்தெரியாத நம்மில் சில தலைவர்களை நம்பி இனி காலத்தைக் கடத்த முடியுமா? இவர்கள் சமுதாய உணர்வுகளை நன்றாகப் புரிந்துகொண்டு அரசுக்கு முறையாக, தெளிவாகச் சொல்லி உரிமைக்குப் போராடி வெற்றிப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

தமிழக அரசியல் பரப்பிலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. திராவிட கட்சியிலிருந்து பிரிந்து வந்த அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து தமிழக ஆட்சியைக் கைப்பற்ற அவருக்குக் கைகொடுத்தது தமிழ். தம் அடுக்கு மொழியால், அழகழகான சொற்றொடர்களால் கேட்பவர்கள் மனங்களில் உணர்வலைகளை எழுப்பித் தம் வசப்படுத்தினார். அவர் காட்டிய வழியில் தமிழால் அரசியல் நடத்தும் ஒரு திராவிடப் பாரம்பரியம் அங்குத் தோன்றியது. கலைஞர் மு. கருணாநிதி வரை அந்தப் பாரம்பரியத்தைக் காண முடிகிறது. இனி, தமிழால் தமிழக மக்களைக் கட்டிப்போடும் சூழல் தொடருமா என்பது கேள்விக்குறியாகி வருகிறது. கலைஞர் மு.கருணாநிதிக்குப் பிறகு, ஒரு வேளை ஸ்டாலினோ மற்றவர்களோ கட்சிக்குத் தலைமையேற்று வழிநடத்தும் நிலை உருவாகும்போது அடுக்குமொழி அரசியல் விலகிக்கொள்ளும். மொழியால் மக்களை மயக்கிக் கட்டிப்போடும் நிலை மாறிப்போகும். ஆரோக்கியமான சூழலாக அரசியல் நோக்கர்கள் இதனைக் கூறுகிறார்கள். சினிமாவிலும் நீண்ட வசனங்கள் காலப்போக்கில் குறைந்து இப்பொழுது சுருக்கமான வசனங்களே மனத்தைக் கவருகின்றன.

மலேசியாவிலும் இத்தகைய மாற்றங்களைக் காண முடிகிறது. மலேசியர் இந்தியக் காங்கிரஸ் (ம.இ.கா) கட்சியின் தலைவராக இருந்த துன் வீ.தி.சம்பந்தன் தமிழ்க்கல்வி பெற்றவர். தமிழில் அழகாகப் பேசும் ஆற்றல் மிக்கவர். ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு, ரப்பர் தோட்டங்கள் துண்டாடலுக்கு ஆளானபோது நாடு முழுவதும் தோட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்டு “குருவிக்கும் கூண்டு, நமக்கு ஒரு வீடில்லையே” என்ற வாசகத்தையே தாரக மந்திரமாக்கி, தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தை நிறுவி, தோட்ட மக்களுக்குச் சூழவிருந்த இன்னலைத் துடைத்தவர். சுதந்திர தின நாளில் வானொலியில் ஒலிபரப்பப்படும் அவரின் எழுச்சிமிக்க உரையைக் கேட்டிருக்கிறேன். துடிப்பான, தெளிவான உரை. கேட்பாரை ஈர்க்கும் உரை. தோட்ட மக்களிடம் தம் திட்டங்களை விளக்கி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி, மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த அவருக்குக் கைக்கொடுத்தது தமிழ்.

அவரை அடுத்து வந்த ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகமும் துணைத்தலைவர் டத்தோ ஆதி நாகப்பனும் தமிழில் தெளிவாகப் பேசும் திறம்படைத்தவர்களே! பின்னர், டத்தோஸ்ரீ சாமிவேலு தலைவரானார். சொல்லித் தெரியவேண்டியதில்லை. “ம.இ.காவைப் பொறுத்தவரை ஓர் உத்வேகமான உன்னதமான எதிர்காலத்தை நாம் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். நான் நினைக்கிறேன் தோழர்களே, நம்மால் இதனைச் சாதிக்க முடியும்” என்கிற பாணியில் அவரின் பேச்சு அமைந்திருக்கும். 22ஆண்டு காலம் ம.இ.கா.வின் தலைவராக தம் உணர்ச்சிமிக்க உரையால் கட்சி உறுப்பினர்களைத் தம் வசப்படுத்தினார். உதவித் தலைவராக இருந்த எம்.ஜி.பண்டிதனும் தமிழில் நன்றாகப் பேசும் திறம் படைத்தவர்தான்.

இன்றைய நிலையில் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, சமாளிக்கலாம் என்ற புதிய விதி எல்லாராலும் ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. தேசிய நிலையில் மனிதவள அமைச்சர் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம், உதவித்தலைவர் டத்தோ சரவணன் ஆகிய இருவரும் தமிழில் நன்றாகப் பேசும் ஆற்றல் படைத்தவர்கள். “தமிழ்க்கல்வி பின்னணியோடு தமிழில் பேசினால்தான் அரசியல் பண்ண முடியுமா? மற்றவர்களால் முடியாதா?” என நீங்கள் கேட்கலாம். இங்கே, தமிழ் தெரிந்தால்தான் நம் சமுதாயத்திற்குச் சிறந்த முறையில் சேவையாற்ற முடியும் என்பது என் கருத்தாகும்.

மலேசியாவில் தமிழர்கள் அல்லது இந்தியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் பெரும்பாலும் தமிழ் ஊடகங்களில்தான் விரிவாக அலசப்படுகின்றன. குறிப்பாக, நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், இணையப் பக்கங்கள் போன்றவற்றில் இடம்பெறும் படைப்புகள் வழி நம் சமுதாயத்தின் மனப்போக்கையும் உடனடித்தேவைகளையும் தெரிந்துகொள்ள முடியும். மலாய்மொழி, ஆங்கிலமொழி ஊடகங்களில் ஊறுகாயாகத்தான் தொட்டுக்கொள்ளுவார்களே தவிர, நம்மைப் பற்றிய ஆழமான பார்வையும் பதிவும் இல்லை என்றுதான் கூறவேண்டும். தலைவர்கள் தமிழறிந்தவர்களாக இருந்தால்தானே தமிழ் ஊடகங்களில் வெளிவரும் முக்கியமான செய்திகளைப் படித்து உடனுக்குடன் எதிர்வினையாற்ற முடியும்? சமுதாயம் தந்த பதவியிலே இருந்துகொண்டு அந்தச் சமுதாயத்தின் பேசுமொழியை ஓரளவுக்கு மட்டும் படித்தறியக்கூடியவர்களாக இருப்பது என்ன நியாயம்?

இப்படி ஓரளவுக்கு அல்லது அரைகுறையாகத் தமிழ் அறிந்தவர்களால் மக்கள் அரங்குகளில், ஆண்டுக் கூட்டங்களில், கருத்தரங்குகளில், மாநாடுகளில், பேசப்படும் கருத்துகளையும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் புரிந்துகொள்ள முடியுமா? தம்மிடம் அனுப்பப்படும் அறிக்கைகளைப் படித்து உள்வாங்கிச் செயல்படமுடியுமா? அவற்றைச் சம்பந்தப்பட்ட தரப்பிடமோ அரசிடமோ அதுகுறித்து தெளிவான விளக்கத்தை அளிக்க முடியுமா?

மக்கள் மனங்களை ஈர்க்க, தம் கருத்துகளைத் தெளிவாகப் பேச, மக்களின் பேசுமொழியோடு ஒன்றிணைந்து அவர்களின் மனப்போக்கினை அறிய, வழவழ என்று சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாகத் தாம் கூற வந்ததை முன்வைக்க தமிழ்மொழியை அறிந்தவர்களாக நம் தலைவர்கள் மாற வேண்டும். தமிழர்கள் மத்தியில் அரசியல் அரிதாரம் ஏற்க வருபவர்கள் தங்களின் தமிழ்மொழியைச் செம்மை செய்து கொண்டு அரசியலுக்கு வரவேண்டும்.

ஒரு படத்தில், குஸ்தி நடக்கும் இடத்தில் வடிவேலு வேடிக்கை பார்க்க வருவார். சுற்றியிருப்பவர்கள் அவரைப் பிடித்து கோதாவுக்குள் தள்ளிவிடுவார்கள். பிறகென்ன? வேறுவழியில்லாமல் உள்ளே உறுமிக்கொண்டிருக்கும் குஸ்தி வீரரோடு மோதுவார். அதுபோல விபத்தினாலோ அரசியல் சுனாமியாலோ அரசியலுக்கு வருபவர்களாக இருந்தாலும் பாதகமில்லை. அரசியலுக்கு வந்த பிறகாவது தம் தமிழ்மொழியைச் செம்மை செய்துகொள்ள வேண்டாமா? அரசியல்தான் வாழ்வு என்றான பிறகு, தக்காரை வைத்துத் தமிழ் படித்துக்கொண்டு தத்தம் தமிழ்த் தகுதியை உயர்த்திக்கொள்ள வேண்டாமா? அதை விடுத்து, யார் நம்மைக் கேட்பார்கள்? முடிந்தவரை சமாளிப்போம் எனப் பழைய பாதையிலேயே பயணப்பட்டால் எப்படி?

சமுதாயமும் இதுகுறித்துக்கண்டும் காணாமல் மௌனம் காப்பது ஆச்சரியம் தருகிறது. உலக அரசியல் மேடைகளில் தம் உணர்வுப்பூர்வமான பேச்சுகளால் மக்கள் மனங்களைக் கட்டிப்போட்ட எத்தனையோ தலைவர்கள் வலம் வந்துள்ளார்கள். பல அரசியல் மாற்றங்கள் தலைவர்களின் எழுச்சிமிக்க உரைகளால் நிகழ்ந்துள்ளன. தலைவர்களின் வாயிலிருந்து உதிரும் வாய்ச்சொற்களுக்காக மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த நிகழ்வெல்லாம் வரலாற்றில் மட்டும்தான் படிக்க முடிகிறது.

இன்று நம் உரிமைகளுக்காகப் போராடும் காலச் சூழல். இந்தச் சூழலில் தம் கருத்துகளைச், சிந்தனைகளை அழுத்தம் திருத்தமாக மக்களுக்குப் புரியும் வகையில் முன் வைக்கும் தலைவர்கள்தாமே நமக்குத் தேவை! இதைத் தலைவர்கள் எப்பொழுது உணரப்போகிறார்கள்?

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768