|
|||||||||
இதழ் 42 |
மூடி மறைத்தலின் கொந்தளிப்புகள்... 18 ஏ. தேவராஜன் |
||||||||
விளக்குப் பேய்களும் இருளின் பிள்ளைகளும்
சில நாட்களுக்கு முன்பு ஆசிரியை ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு மாற்றலாகி தமிழ்ப்பள்ளியொன்றில் தமிழும்
விஞ்ஞானமும் போதிக்கும் பணியில் இருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு வேறோர்
ஊரில் அன்றைய உற்சாகமான காலத்தில் சந்தித்தது. காலம் அவற்றையெல்லாம் உதறித்
தள்ளிவிட்டு அவரை வேறொரு தோற்றத்தில் காட்டிக்கொண்டிருந்தது.
சனிக்கிழமையன்று ஏதேச்சையாகச் சந்தித்தபோது “அப்படியேதான் இருக்கிறீர்கள்!”
என்ற குசலத்தோடு பேசத் தொடங்கினார். ஆர்வமும் துடிப்பும் அதே இலயத்தோடு
இருப்பினும், புறத் தோற்றத்தில் கொஞ்சம் உப்பலாக ஆளே மாறியிருந்தார்.
ஆசிரியர் அறையில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அவரது மகள் விளையாட்டு
உடையில் உள்ளே நுழைந்தார். அதன்பின் எங்களது பேச்சு அந்தச் சிறுமியைப்
பற்றியே சுற்றிச் சுற்றி வந்தது. வழக்கம்போல பிள்ளையின் பெயரைக் கேட்டுத்
தெரிந்துகொண்டபோது மனம் இலேசாகச் சுருக்கென்றது. பெயரில் அடையாளத்தை
முற்றாகத் தொலைத்திருந்ததால் என் முகம் வாடிப் போனதை அவர் எப்படியோ
அடையாளங் கண்டுகொண்டார். அதனைத் திருப்புவதற்காகப் பிள்ளையின் கல்வியைக்
குறித்தும் அவளது இணைப்பாட நடவடிக்கைகள் பற்றியும் மிகவும் சிலாகித்துப்
பேசத் தொடங்கினார். பள்ளியில் மட்டுமல்லாது மாவட்டம், மாநிலமென விளையாட்டு,
மொழிக்கழகப் போட்டிகளுக்கெல்லாம் பிரதிநிதித்துச் செல்வதாகக் கூறியபோது
எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது. அதோடு தேவாரம், சங்கீதம், பரதம் என
அனைத்துக் கலை சார்ந்த நடவடிக்கைகளுக்கும் அனுப்பிவருவதாகக் கூறிப்
பெருமூச்செறிந்தார். இரு குழந்தைகளுக்குத் தாயான பிறகு அதன் பொறுப்புகளை
அவர் நிறைவேற்றிவருகின்ற காலக்கடப்பாட்டைக் கேட்டறிந்தபோது வியப்பு
மேலிடத்தான் செய்தது. அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை
முடித்துவிட்டு, அப்படியே நான்கரை மணிவாக்கில் பிள்ளைகளைக் கிளப்பிப்
பள்ளிக்குச் செல்கின்ற வேளையில் சில நேரம் உந்து வண்டிக்குள்ளேயே
விளையாட்டு உடைகளை மாற்றிச் செல்வதுவும், காலை உணவை வண்டிக்குள்ளேயே
உண்பதுவும் நடக்கத்தான் செய்கின்றன என்று தமது நேர நெருக்கடிகளை உணர்ந்து
சொல்லலானார். ஆனாலும், பிள்ளைகள் இதுவரை தனக்கோ,குடும்பத்துக்கோ எவ்வித
பாதகத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் இறைவனுக்கு நன்றி கூற வேண்டுமெனக்
கைகளைத் தலைக்கு மேல் கூப்பினார். பொறுப்புள்ள தாயின் கடமைக்கு இதுகாறும்
யாராவது கூலி கொடுத்துள்ளார்களா? அப்படியே கொடுத்தாலும் தாயின் அன்புக்கு
ஈடாகுமா? இப்படிப்பட்ட எண்ண ஓட்டத்திலிருந்தபோது தமிழ் மொழியில் எப்படி
விளங்குகிறாள் எனக் கேட்டேன். |
|||||||||
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |
|||||||||
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature |