|
|||||||||
இதழ் 43 |
எதிர்வினை | ||||||||
|
கடிதங்கள் அ.மார்க்ஸ் எழுதத் தொடங்கியிருப்பது வல்லினத்திற்குப்
புதிய பலம். அவரது தந்தை மலேசியாவில் வாழ்ந்தவர் என்பது எனக்குப் புதிய
தகவல். இன்னும் தகவல்களுக்குக் காத்திருக்கிறேன். கா.ஆறுமுகத்தின்
நேர்காணல் தெளிவான பதில்களைக் கொண்டுள்ளது. அ. மார்க்ஸ் மற்றும் ஆதவன் தீட்சண்யாவின் முகங்களை
ஒருங்கே வல்லினத்தில் பார்ப்பதில் மகிழ்ச்சி. ஆதவனின் பதில்கள் சூப்பர்.
மக்கள் எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். வாழ்த்துகள். அதேபோல கா.
ஆறுமுகத்தின் நேர்காணல் மிக முக்கியமானது. வல்லினத்தில் புதிதாக எழுதத்தொடங்கியுள்ள பச்சைபாலன்
சாரின் கட்டுரைகள் நன்றாக உள்ளன. பயனான தகவல்கள். நியாயமான கேள்விகள். அவர்
தொடர்ந்து பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கருத்துகளை முன்வைக்க வேண்டும்.
ஆதவனின் சில பதில்கள் சுருக்கமாக இருக்கிறது. சரியாக புரியமாட்டேன்
என்கிறது. பூங்குழலி வீரனின் கட்டுரைவிட அவரது கவிதைகள் மனதை
உருக்குகின்றன. குழந்தையின் மென்மையை அதில் ஸ்பரிசிக்க முடிகிறது. அவருக்கு
என் அன்பு. அ.மார்க்ஸின் கட்டுரைத் தொடர் அற்புதம். வல்லினம் வார இதழாக
வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நித்தியா எங்கே போனார்? அவர் படைப்புகள் தொடர்ந்து
பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த போது சட்டென அதை நிறுத்தியக்
காரணம் என்ன? தனிப்பட்ட பிரச்னையா? வல்லினத்துக்கும் நித்தியாவுக்கும்
கருத்து வேறுபாடா? இனி அவர் எழுதுவாரா? எழுத வேண்டும். கா. ஆறுமுகத்தின்
நேர்காணல் பல புதிய தகவல்களைக் கொடுத்தன. அவரும் வல்லினத்தில் எழுத
வேண்டும். அரசியல் கட்டுரை எழுதும் புவனேஸ்வரியின் எழுத்தில்
ஆழம் கூட வேண்டும். பத்திரிகை செய்திபோல இருக்கிறது அவர் கட்டுரைகள்.
பாலமுருகன் போன்றவர்கள் அந்த விடயங்களை எழுதலாம். கொஞ்சம் சுய கருத்துகளை
அவர் சேர்த்து எழுதலாம். ஆதவனின் பதில்கள் தொடரவேண்டும். வாசிக்கத்
தூண்டுகிறது. பச்சைபாலனின் கட்டுரைகள் தரம். ராஜம் ரஞ்சனியின் தேர்வுகள் நன்றாக உள்ளது. அவ்வப்போது
அக்கதைகளின் இணைப்பையும் கொடுத்தால் வாசிக்க சுலபமாக இருக்கும். நோவாவின்
கட்டுரையைப் படிக்கும் போது மலேசியாவுக்கு வர மனம் ஏங்குகிறது. அற்புதமான
பயணி அவர். |
||||||||
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |
|||||||||
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature |