முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 43
ஜூலை 2012

  சுவடுகள் பதியுமொரு பாதை... 19
பூங்குழலி வீரன்
 
 
       
பத்தி:

வாலைப் பிடிப்பவர்களும் வாலாட்டிகளும்
கே. பாலமுருகன்




நேர்காணல்:


தற்கொலைகளும் கொலைகளும் நடந்தேறும் வெளி!
சரவணன்



சிறுகதை:

சூனியக்காரனின் பூனை
அ. பாண்டியன்

அபராஜிதா என்கிற அர்பு
கணேஷ்



பதிவு:

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு
வாணி. பாலசுந்தரம்



தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 2
அ. மார்க்ஸ்



கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி



கவிதை:

லீனா மணிமேகலை

வ.ஐ.ச. ஜெயபாலன்

சின்னப்பயல்

ஆறுமுகம் முருகேசன்

லிவிங் ஸ்மைல் வித்யா

ந. பெரியசாமி

எம். ராஜா

பூங்குழலி வீரன்



எதிர்வினை


வல்லினம் வகுப்புகள்


நேர்காணல் இதழ் 5

ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது – பிரமிள்

பிரமிள் என்ற பெயரில் எழுதி வந்த தருமு சிவராம், கிழக்கு இலங்கை திருகோணமலையைச் சேர்ந்தவர். 20 ஏப்ரல் 1939 ஆம் ஆண்டு பிறந்த அவர் எழுபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா சென்று விட்டார். பிறகு தம் வாழ்நாளின் பெரும்பகுதியை சென்னையிலேயே கழித்தார். சி.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில், தமது இருபதாவது வயதில் எழுதத் தொடங்கிய பிரமிள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர். ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமிள், தமிழ் உரைநடை குறித்து கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர்.

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.

ஒரு கவிதை எனக் கருதி எழுதப்பட்ட ஒன்று கவிதையாவதற்குத் தக்க சூழல் ஒன்று அமைய வேண்டும். அல்லது ஒரு குறிப்பிட்ட சூழல் உடைத்துப் போடப்பட்ட சில சொற்களை கவிதையாக்கிவிடலாம். நுண்ணிய பார்வையிலான ஒரு சூழலை உருவாக்கி, அதற்கு மிக மிக குறைந்தளவிலான கனமான சொற்களைக் கொண்டு கோர்த்து மொத்த வடிவத்தையும் ஒரு கவிதையாக்கும் தனித்திறம் பிரிமிளுக்கு வாய்த்திருக்கிறது.

பிரிமிள் தன் கவிதைகள் ஒவ்வொன்றிலும் மிகப் பெரும் வார்த்தை ஜாலத்தை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார். வார்த்தைகளின் கூட்டுக்குள் தன் சுயம் மறைத்தபடி மிகப் பெரும் பிரளயமாய் வெடித்துக் கிளம்புகின்றன அவரது கவிதைகள். மேல் உள்ளது கவிஞர் பிரமிளின் காவியம் என்ற தலைப்பிலான கவிதை. சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று என்ற வரிகளில் வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் மிக மிக கூர்ந்து நோக்கும் கவிஞரின் பார்வை நமக்குத் தெரிகின்றது. தீராத பக்கங்களின் நம் மூதாதையர் வாழ்வு எழுதப்பட்டதைத்தான் நாம் காவியம் என்கிறோமா? அவற்றின் முரண்பாடுகளை ஒழித்துக் காட்டாமலேயே, தோன்றியிருக்கின்ற யதார்த்தங்களை ஒருங்கிணைப்பதே ஒரு நல்ல காவியத்தின் தர்மமாகிறது. ஆகையால்தான் காவியத்தின் பிம்பங்களையும் யதார்த்தங்களையும் விளக்கிக் கூறுதல் என்பது அவ்வளவு எளிதான ஒன்றாக இருப்பதில்லை இந்த கவிதையைப் போலவே.

நிசப்தத்தின் இமைதிறந்து
கவனித்துக் கொண்டது
இசையின் வெளியினுள்
குடிகொண்ட பெரு மெளனம்

மெளனத்தில் திளைத்தல் - நிசப்தத்தில் வாழ்ந்திருத்தல் என்பது மிக சிலருக்கு மட்டுமே வாழக் கிடைத்த ஒரு வாழ்வாகிறது. இந்த கவிஞன் இசையின் வெளியினூடே குடிகொண்டிருக்கும் ஒரு பெரு மெளனத்தைக் கண்டடைந்திருக்கின்றார். இசைவழி கிடைக்கும் அமைதி, ஆழ்நிலை நம்மை பெரும்பாலும் ஒரு சிறு குழந்தையாய் மாற்றி வைத்து விடுகிறது. அந்த ஆழ்நிலை அமைதிக்குப் பின் குதூகலமாகிவிடுகிறோம் நாம்.

தெற்கு கோபுரவாசலில்
நிற்கிறது காலம்
நிர்வாணமாய்...
காலிடறும் கல்லும்
ஒரு நாளில்லை ஒருநாள்
காலனுருக் கொள்ளும்-

காலம் எப்போதும் தன்மீது எதனையும் வரித்துக் கொண்டதில்லை. அதன்மீது நாம்தான் எல்லாவற்றையும் வரைந்து கொண்டிருக்கும். காலம் நிர்வாணமாய் எந்தவொரு மேல் பூச்சும் மறைப்பும் இல்லாமல் மிக மிக வெளிப்படையாக இதுதான் தான்என யாரும் புரியா வண்ணம் தன்னை அடையாளப்படுத்திய படியே இருக்கிறது. மிக மிக எளிய உருவகத்தின் மூலம் வாழ்வின் யதாத்தத்தை நம் முகத்தில் அறைந்து இக்கவிதை சொல்கிறது. எப்போதும் மரணத்தோடுதான் நாம் அலைந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் யதார்த்தம். இன்று காலில் இடறும் ஒரு கல்லினால் கூட நாளை நமது மரணம் நிச்சயிக்கப்படலாம்.

வயிற்றுப் பசி தீர்க்க
வராதா என்றேங்கி
மழைக்கு அண்ணாந்த
கண்கள்
கண்டு கொண்டன-
வானம்
எல்லையில்லாதது.

ஒரு மலையாளக் கவிஞன் இப்படி சொல்கிறான்:- “கவி சென்று மறையும் போதும் கவிதை பாடிக் கொண்டே இருக்கிறது. நீரின் குரலில் ஒளி பாடுவதுபோல், இலைகளின் குரலில் நீர் பாடுவது போல”. பிரமிளின் கவிதைகளும் இதைத் தான் செய்கின்றன. வழி என்ற தலைப்பிலான அவரது மேற்காணும் கவிதை எதை உணர்த்துகின்றது? வானமே எல்லை என்பார்கள். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்பார்கள். வறுமையும் வயிற்றுப் பசியும் தொட்டு தொடர்கின்ற போதும் பசி தீர மழைநீர் அருந்த மழை வேண்டி நிற்கும் துயர் நிலையிலும் ஏதோ ஒரு கருத்தியலோடு உனக்கும் எனக்கும் தனித்தனி புரிதலோடு படைக்கப்பட்டிருக்கிறது இவ்வரிகள்.

ஓ, ஓ மானுட!
ஓடாதே நில்!
நீ ஓட ஓட
தொடர்கிறது கல்.
நாயாக உன்
நாலுகால் நிழலாக.
நீ ஓட ஒட

தொடர்கிறது அக்னி.
ஓயாத உன்
உயிரின் பசியாக.

பிரிமிளின் ஒவ்வொரு வார்த்தையும் எதையோ சொல்ல விரும்புகின்றது. அதையும் தாண்டி எதையோ மிக ஆழமாக எதையோ உணர்த்தி நிற்கின்றது. உண்மை நிலையிலிருந்து விலகி ஓர் இலட்சிய கோபுரத்தின் ஆணியடித்தது மாதிரி உட்கார்ந்திராமல் இயல்பு வாழ்வை தன் கவிதைகளில் மையப்படுத்தி இருக்கிறார் பிரமிள். எப்போதும் முடிவற்ற வெளியை நோக்கியபடி இருக்கும் இவரது பார்வை அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சிறு அசைவையும் மிக உன்னிப்பாக பார்க்க வல்லது.

நான் எல்லாருக்குமாகத்தான் எழுதியிருக்கிறேன் என்று சொல்லாவிட்டாலும் அவரது கவிதைகள் நம் அனைவருக்குமானது.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768