முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 44
ஆகஸ்ட் 2012

  எதிர்வினை  
 
       

கட்டுரை:

தமிழ்நேசன், மக்கள் ஓசை மற்றும் ஹஜி தஸ்லிம் கவனத்திற்கு...
கே. பாலமுருகன் - ம. நவீன்

துணைக்கல்வி அமைச்சர் பதவி
ந. பச்சைபாலன்

இந்தோனேசியக் கவிஞர் சைறில் அன்வர் ஓர் அறிமுகம்
மூலம் : ஜேம்ஸ் எஸ் ஹோம்ஸ் | தமிழில் : எம்.ஏ.நுஃமான்

தமிழில் சைறில் அன்வர் கவிதைகள்
எம்.ஏ.நுஃமான்



சிறுகதை:

சூன்யப்பெருவெளிக்கதைகள்
எம்.ஐ. ஷாஜஹான்

அவலம்
அண்டனூர் சுரா



பதிவு:

வல்லினம் வகுப்புகள் 1 - இலக்கியமும் மொழியியலும்

'ஐ.பி.ஏ' ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் பதிவுகள்


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 3
அ. மார்க்ஸ்


கேள்வி பதில்:

'லிவிங் ஸ்மைல்' வித்யா பதில்கள்
'லிவிங் ஸ்மைல்' வித்யா


புத்தகப்பார்வை:

ம. நவீனின் 'சர்வம் ப்ரம்மாஸ்மி' கவிதைகள் இன்றைய உலகயலின் அக புறத் தாக்கத்தின் ஆதாரங்கள்
மேமன்கவி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி

வழித்துணை
ப. மணிஜெகதீசன்



கவிதை:

எம். ராஜா

செ. சுஜாதா

ஆறுமுகம் முருகேசன்

ந. பெரியசாமி

பூங்குழலி வீரன்



எதிர்வினை



அறிவிப்பு:

லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியங்கள் விற்பனைக்கு...

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்: மலேசிய பெண் எழுத்தாளர்களின் விபரங்கள் தேவை

வேரைத் தேடுதல்

தமிழகத்துக்குச் செல்லும்போது ஒரு மலேசியன் அடையும் ஏகந்தம் சொல்லில் அடங்காதது. அதுவும் தன் மூதாதையர்கள் வாழ்ந்த சுவடுகளை அவன் தேடி தேடி அலைவதிலும்; கண்டுக்கொண்டப்பின் கண்ணீர் மல்குவதிலும் இனம் புரியாத உணர்வுகள் குவிந்துகிடக்கும். அவ்வகையில்தான் அ.மார்க்ஸின் மலேசியத்தொடரை என்னால் வாசிக்க முடிகிறது. அவர் உணர்வுகள் எளிய சொற்கள் மூலம் பிரதிபளிக்கிறது. தமிழகத்திலிருந்து ஒருவர் மலேசியாவில் ஒரு வேரின் சுவடைக் காண்பதை இப்போதுதான் வாசிக்கிறேன்.

வசந்தன், மலேசியா


வாலை பிடித்தல்

பாலமுருகன் சொல்வது சரிதான். இங்கே எழுத்தாளர்கள் தங்களை மையப்படுத்திக்கொள்ள செய்யும் அரசியல்தான் எத்தனை. எனக்கென்னவோ பாலமுருகன் ஜெயமோகனைச் சொல்வதுபோலதான் இருக்கிறது. ஜெயமோகன் என்றே சொல்லியிருக்கலாம். அவர்தான் தனது விஷ்ணுபுரத்தை உயர்த்திப்பிடிக்க எத்தனை நுட்பமாக வசியம் வைக்கிறார் சொற்களில். அதன் மூலம் ஒரு கூட்டம். அந்தக் கூட்டம் 'ஓம் ஜெயமோகனாய நமஹ' என சொல்லாதது மட்டும்தான் மீதமுள்ளது. இதோடு ஆதவனின் பதிலையும் இணைத்துப்பார்க்கிறேன். நன்று.

முருகையன், தமிழகம்


காத்தையாவும் அ.மார்க்ஸும்

காத்தையா மூலம் அ.மார்க்ஸ் புரிந்துகொண்ட விவரங்கள் முக்கியமானது. மலேசியா குறித்த தகவல்களை அறிய மேலும் ஆர்வம் கூடுகிறது. வல்லினம் மூலம் தற்காலத்தை அறிய முடிகிற நினையில் அதன் அரசியல் பின்னணியை அறிய மார்க்ஸின் கட்டுரை உதவலாம். ஆனால், அவர் குறிப்பிட்டுள்ள நூல்களைப் பெருவதுதான் சிக்கல் என நினைக்கிறேன். மலேசிய நூல்கள் இங்கு பரவலாக விற்கப்பட்டால்தான் இந்தச் சிக்கல் தீரும். லீனா மணிமேகலையின் கவிதைகள் அருமை.

விவேகன் நாதன்


லீனா மணிமேகலை

லீனா மணிமேகலை எனக்குப் பழக்கம் இல்லை. அவர் குறித்த அவதூறுகளை மட்டுமே வாசித்துள்ளேன். ஆனால், அவரின் லெஸ்பியன் கவிதைகளைப் படித்தபோதுதான் அவர் தமிழ் இலக்கியச் சூழலில் எத்தனை முக்கியமானவர் என்பது புரிந்தது. வெற்று வசைகளை மட்டுமே பொழிபவர்கள் இதுபோன்ற படைப்பின் முன் இனி பேச என்ன இருக்கிறது. அவர் தொடர்ந்து எழுத வேண்டும். அவரின் கவிதைகளை மேலும் படிக்க ஆவல்.

வத்சலா சிவா
--------------------------
http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/ என்ற தளத்தில் வாசிக்கலாம் - ஆர்


வருத்தம்

ஆதவன் தீட்சண்யாவின் பதில்கள் முடிவுற்றதில் மிகுந்த வருத்தம். ஒவ்வொரு மாதமும் நான் முதலில் வாசிப்பது அதுவாகவே இருந்தது. தொடர்ந்து அவர் பங்களிப்பு வேறுவகையில் இருக்க வேண்டும். அவரது படைப்புகள் இடம்பெற வேண்டும். அவர் எழுத்தில் உண்மை உள்ளது. அதேபோல லீனா மணிமேகலையின் படைப்புகளும்.

நித்தி பாலா, கோலாலம்பூர்
----------------------------
http://aadhavanvisai.blogspot.com/ ஆதவனின் படைப்புகள் இத்தளத்தில் வாசிக்கலாம். - ஆர்


சரவணனின் நேர்காணல்

சரவணின் நேர்காணல் அருமை. அவரின் தொலைபேசி எண்கள் வேண்டும்.

கமலக்கண்ணன், சிங்கை
----------------------------
0162945890 - ஆர்


தொடர்கள்

இம்மாத வல்லினத்தில் தொடர்கள் குறைவாகவே இருந்தது. தயாஜி மற்றும் நோவாவின் தொடர்கள் கவர்கின்றன. இன்னும் கொஞ்சம் நீளமாக எழுதலாம். வல்லினத்தில்தான் பக்கப் பிரச்சனை இல்லையே. அ.மார்ஸின் தொடர் தொடங்கியதிலிருந்து ஆர்வம் கூடியுள்ளது. இன்னும் அவர் வழக்கமான இடம் வரவில்லை. காத்திருக்கிறேன்.

ரேணுகா சிவா


பச்சைபாலன் தொடர்

பச்சைபாலனின் கட்டுரைகள் முக்கியமானவை. ஆனால், சுவாரசியம் குறைகிறது. வெளிநாட்டில் வாழ்பவரையும் மனதில் வைத்துக்கொண்டு எழுதலாம். ஆனால், ராஜம் ரஞ்சனி சுவாரசியமாகக் கொண்டுச் செல்கிறார். நித்தியாவைக் காணோம். வல்லினத்துடன் தகறாரா? எதுவாக இருந்தாலும் கலைந்துவிட்டு மீண்டும் எழுதலாமே.

அருணன், துபாய்


இன்னொரு மலேசியா

அ. மார்க்ஸின் மூலமே இன்னொரு மலேசியாவை நான் பார்க்கிறேன். அவர் பேச்சு விமர்சனத்துக்குட்பட்டதில் ஆச்சரியம் இல்லை. தமிழன் எங்குச் சென்றாலும் ஜாதியைக் கொண்டுச்செல்வானோ? மலேசிய சூழல் குறித்து அறிந்தது போல மலேசிய இலக்கியம் குறித்தும் அறிய மார்க்ஸ் வகை செய்வார் என நம்புவோம். லீனாவின் கவிதை வழக்கம் போலவே அருமை.

தத்ரூபன் - டில்லி

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768