கடந்த ஜூலை 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெற்ற
வல்லினம் வகுப்புகள் 1 (இலக்கியமும் மொழியியலும்) நிகழ்வில் ஆர்வமுடன்
கலந்து கொண்ட 'ஐ.பி.ஏ' ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் பதிவுகள்.
இலக்கியமும்
மொழியியலும்
கடந்த 7-ஆம் மற்றும் 8-ஆம் திகதி அன்று கோலாலம்பூரில் உள்ள கிராண்ட்
பசிப்பிக் தங்கும் விடுதியில் செம்பருத்தி மற்றும் வல்லினம் ஏற்பாட்டில்
'இலக்கியமும் மொழியியலும் ஓர் அறிமுகம்' எனும்பட்டறை நடைப்பெற்றது.
இப்பட்டறையை குறித்த தகவல்களை வல்லினத்தின் ஆசிரியரான நவீன் அறிமுகம்
செய்து வைத்தார். அமைப்பியல் மற்றும் பின்னமைப்பியல் பற்றிய தனக்குண்டான
அறிமுகத்தைக் கூறிய அவர் அதை முழுமையாக அறிய மொழியியலின் பங்கை
உணர்த்தினார். 50 பேரைத் தேர்தெடுத்து அவர்களுக்கு ஒரு பட்டறை கொடுக்க
வேண்டும் என்ற எண்ணம் இலக்கை அடைந்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி இலக்கியத்தின் அறிவுதுறையின் முக்கியத்துவத்தைக் கூறினார்.
தொடர்ந்து பட்டறை நடத்த வந்த பேராசிரியர் எம்.ஏ. நுக்மான் அவர்கள்
அழைக்கப்பட்டார். அவர் தமது உரையில் 'மொழி-இலக்கியம்- மற்றும் மொழியியல்
அறிமுகம்' (language, literature, linguistic) பற்றிய உரையை ஆற்றினார்.
அவர் மொழிகளுக்கிடையிலான ஒற்றுமையை குறித்துப் பேசினார். பிறகு கவிதைகளை
அறிமுகப்படுத்தி அதனுடைய மையப்பொருள்கள் குறித்து கருத்துரைத்தார்.
அதுமட்டுமின்றி அவர்மொழியின் அமைப்புகளையும் அறிமுகப்படுத்தினார்.
அவைமொழியமைப்பு, சொல்அமைப்பு, வாக்கிய அமைப்பு மற்றும் பொருளமைப்பு ஆகும்.
அதோடு மொழியியலில் ஒலியியலின் முக்கியதுவத்தை வழியுறுத்தினார். அதோடு அவர்
சொல்லியலினுடைய 2 முறைகளைஅறிமுகப்படுத்தியது முக்கியமானது.
அவை Lexican Process மற்றும் Gramattical Process ஆகும். அதோடு மொழியலில்
உள்ள உட்பிரிவுகளை இரண்டு வகையாகப் பிரித்து விளக்கப்படுத்தினார்.
இந்நிகழ்வின் முதல் அங்கம் இனிதே முடிவுற்றது. இந்நிகழ்வை தொடர்ந்து மேலும்
பல அங்கங்கள் நடைப்பெற்றன. இப்பட்டறையின் வழி பல அறிய விஷயங்களை அறிந்து
கொண்டோம். இது போன்ற நிகழ்வுகள் மேன்மேலும் நடப்பது சமுதாயத்திற்குப் பல
நன்மைகள் அளிக்கும் என்பதில் சிறிதளவும் அய்யமில்லை.
லோகேஸ்வரிராஜா மற்றும் திபாஹர் இராஜேந்திரன்
மொழி அறிஞர்கள்
முதல் அங்கமாக பேராசிரியர் மொழி, இலக்கியம் மற்றும் மொழியியல் ஆகியவற்றின்
அறிமுக கருத்தரங்கை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது அங்கமாகப் பேரசிரியர் நூஃமான் அவர்கள்
மொழியியல் கோட்பாடுகளும் இலக்கியமும் எனும் அமர்வை வழி நடத்தினார். இந்த
அமர்வில் சஸ்சூர் மற்றும் கோம்ஸ்கியின் கோட்பாடுகளை அறிமுகம் செய்து
வைத்தார்.
இந்த அமர்வில் முதலில் நவீன மொழியியல் கோட்பாடுகளின் அமைப்பாளரான சஸ்சூரைப்
பற்றிய அறிய தகவல்களை வழங்கினார். அவரின் கோட்பாடுகளில் முக்கியமான நான்கு
அம்சங்களைப் பற்றிய கருத்தாக்கங்களை வழிநடத்தினார்.
தமது உரையை முதல் அம்சமான மொழிப்பற்றிய இயங்காநிலை இயங்குநிலை பார்வையுடன்
துவங்கினார். இதில் அவர் வரலாற்று மொழியியலின் ஆதிக்கம், மொழி ஆய்வில்
வரலாற்றுப் பார்வை எவ்வாறு அமைந்திருக்கிறது மற்றும் மொழியியலில்
குறிப்பிட்ட காலச் சூழலில் மொழி அமைப்பு பற்றிய விபரண ஆய்வுக்கு கொடுத்த
முக்கியதுவத்தை பற்றி விளக்கினார். தொடர்ந்து அகமொழி புறமொழி பற்றிய
கருத்தாக்கத்தை எடுத்துரைத்தார்.
மூன்றாவது அங்கமாக மொழிக்குறி பற்றிய கருத்தாக்கத்தை விளக்கினார். அவரின்
கருத்துப்படி ஒவ்வொரு சொல்லும் ஒரு குறி. ஒவ்வொரு குறியும் குறிப்பான்
(sound image, signifier).
தொடர்ந்து நான்காவது அம்சமான கிடைநிலை உறவு அடுக்கு நிலை உறவு பற்றிய
கருத்தாக்கம் நடைபெற்றது. குறிகள் தத்தம் ஒழுங்கில் அமைய வேண்டும்
என்பதையும் வேறு ஒழுங்கில் அமைந்தால் வேறு சொல்லாகவோ அல்லது பொருளாகவோ
அமைந்து விடும் என்ற விவரத்தை வழங்கினார்.
சஸ்சூரைத் தொடர்ந்து பேராசிரியர் அவர்கள் மற்றோர் புகழ் பெற்ற மொழியியல்
கோட்பாடு அமைப்பாளரான நோம் சோம்ஸ்கியின் கோட்பாடுகளைப் பற்றிய
கருத்தாக்கத்தை நடத்தினார்.
தமது உரையில் அவர் சோம்ஸ்கி இன்றுவரை தமது கோட்பாடுகளை புதுப்பித்துக்
கொண்டிருக்கிறார் என்பதை தெரிவித்தார். இவரின் கோட்பாடுகள் மொழியியல்
அடிப்படையில் எவ்வாறு தமது பங்கினை வகிக்கிறது என்பதை பற்றி விளக்கங்களை
வழங்கினார்.
இப்பாகம் இனிதே பல பறிமாற்றங்களுடன் முடிவுற்றது. இந்த அமர்வில்
மொழியியலில் அமைந்துள்ள கோட்பாடுகள் வருகை புரிந்திருந்த அனைவருக்கும்
தெள்ளத்தெளிவாக விளங்கும் வண்ணம் பேராசிரியர் தமது அமர்வை வழிநடத்தினார்.
திரித்தா முத்தையா மற்றும் விலாசினி துரைராஜ்
நடையியலும்
புனைகதையும்
கடந்த 7 ஜுலை 2012 துவங்கி 8 ஜுலை 2012 வரை கிராண்ட் பசிபிக் தங்கும்
விடுதியில் மொழியியல் வகுப்பு வல்லினம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை இலங்கை நாட்டைச் சார்ந்த பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களால்
வழிநடத்தப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் என்னை ‘நடையியலும் புனைகதையும்’என்ற
தலைப்பில் அவர் ஆற்றிய உரை பெரிதும் கவர்ந்தது.
தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்த நமது செம்மொழியான தமிழ்மொழியை மென்மேலும்
ஆழமாக அறிந்து தெளிவு பெற; இலக்கியமும் மொழியியலும் எனும் தலைப்பில்
வல்லினம் குழு ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கம் மாணவர்களுக்கு மேலும்
பயனுள்ளதாக அமைந்தது.
பேராசிரியர் உயர்திரு நுஃமான் அவர்கள் நடையியலும் புனைகதையும் என்ற
தலைப்பில் வழங்கிய தகவல்கள் மிக தெளிவாகவும் பயனுள்ளதாவும் மாணவர்களுக்கு
அமைந்தது. இது போன்ற தமிழ் மொழியின் அரிதான தகவல்களை, தமிழ் மொழியைப்பற்றி
அறியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மீனா பெருமாள் மற்றும் தனலட்சுமி அவுளி
பிரதிக்கோட்பாடும்
இலக்கியமும்
தமிழ் மொழியின் தனித்தன்மையையும் தொன்மையையும் மேலும் தமிழ் சமுத்தினர்
அறிந்திட செய்திட, தமிழ்மொழியின் ‘இலக்கியமும் மொழியியலும்’ எனும்
கருப்பொருளைக் கொண்டு, பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் சிறப்பாக
நடத்தினார். இதில் நான்காம் அமர்வு குறித்து கொஞ்சம் மீட்டுணரலாம் என
நினைக்கிறேன்.
நான்காம் அமர்வில் பிரதிக்கோட்பாடும் இலக்கியமும் (Text Theory and
Literature) எனும் தலைப்பில் பேராசியர் நிகழ்வை வழிநடத்தினார். பிரதி
ஆக்கம் பற்றி பல்வேறு மொழியியலாளர்கள் ஆராய்வு பற்றி விளக்கமளித்தார்.
அவர்களுல் முக்கியமானவரான Michael Alexander Kirkwood Halliday (M.A.K.
Halliday) பற்றி அறிமுகப்படுத்தினார். மேலும் மொழியின் 3 பிரதான
செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்ட்து. நம்மை பற்றிய உலக சூழலை
புரிந்துக்கொள்ளுதல் (Ideational), மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு
கொள்ளுதல் (Interpersonal), மற்றும் இவ்விரண்டோடும் தொடர்புடைய பிரதியக்கம்
(Textual) ஆகியவை மொழியின் பிரதான செயற்பாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஒரு வாக்கியத்தலான பிரதிக்கும் பல்லாயிரக்கணக்கான
வாக்கியங்களாலான பிரதிக்கும் இடையே உள்ள வேறுப்பாடுகளை பற்றியும்
விளக்கமளிக்கப்பட்டது. இந்த அமர்வில் எடுத்துரைக்கப்பட்ட தகவல்கள் யாவும்
அவையோர்களுக்கு பெரும் பங்கையாற்றியது. அடுத்த தலைமுறையினர் மொழியின்
தெளிவினை அறிந்துக் கொள்ள இந்த அமர்வு பயனளித்தது.
கஸ்தூரி ஜெயகோபால் மற்றும் பூரணிமா தியாகராஜு
|