முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 44
ஆகஸ்ட் 2012

  சமகால அரசியல் : ஒரு பார்வை... 5
கி. புவனேஸ்வரி
 
 
       

கட்டுரை:

தமிழ்நேசன், மக்கள் ஓசை மற்றும் ஹஜி தஸ்லிம் கவனத்திற்கு...
கே. பாலமுருகன் - ம. நவீன்

துணைக்கல்வி அமைச்சர் பதவி
ந. பச்சைபாலன்

இந்தோனேசியக் கவிஞர் சைறில் அன்வர் ஓர் அறிமுகம்
மூலம் : ஜேம்ஸ் எஸ் ஹோம்ஸ் | தமிழில் : எம்.ஏ.நுஃமான்

தமிழில் சைறில் அன்வர் கவிதைகள்
எம்.ஏ.நுஃமான்



சிறுகதை:

சூன்யப்பெருவெளிக்கதைகள்
எம்.ஐ. ஷாஜஹான்

அவலம்
அண்டனூர் சுரா



பதிவு:

வல்லினம் வகுப்புகள் 1 - இலக்கியமும் மொழியியலும்

'ஐ.பி.ஏ' ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் பதிவுகள்


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 3
அ. மார்க்ஸ்


கேள்வி பதில்:

'லிவிங் ஸ்மைல்' வித்யா பதில்கள்
'லிவிங் ஸ்மைல்' வித்யா


புத்தகப்பார்வை:

ம. நவீனின் 'சர்வம் ப்ரம்மாஸ்மி' கவிதைகள் இன்றைய உலகயலின் அக புறத் தாக்கத்தின் ஆதாரங்கள்
மேமன்கவி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி

வழித்துணை
ப. மணிஜெகதீசன்



கவிதை:

எம். ராஜா

செ. சுஜாதா

ஆறுமுகம் முருகேசன்

ந. பெரியசாமி

பூங்குழலி வீரன்



எதிர்வினை



அறிவிப்பு:

லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியங்கள் விற்பனைக்கு...

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்: மலேசிய பெண் எழுத்தாளர்களின் விபரங்கள் தேவை

நம்ம பத்திரிகைகள்

ஜனநாயகத்தின் நான்காம் தூண் என பத்திரிகை கருதப்படுகிறது. "வாள் முனையை விட பேனா முனைக் கூர்மையானது' என்று பத்திரிகையின் பலத்தை குறிக்கும் வண்ணம் ஆங்கில ஆசிரியர் எட்வர் புல்வர் - லைட்டன் என்பவர் கூறியுள்ளார்.

மலேசிய நாட்டில் ஊடகவியல், உள்துறை அமைச்சின் கண்காணிப்புக்கு உட்பட்டிருக்கும் வரையில் பத்திரிச் சுதந்திரம் என்பது கேள்விக்குறியே. இணைய ஊடகங்கள் மட்டுமே சுயேட்சையாக இயங்கும் வேளையில் அச்சு ஊடகங்களோ கடுமையாக கண்காணிக்கப் படுகின்றது. அதிலும் வானொலியும் தொலைக்காட்சியும் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.

பத்திரிகை சுதந்திரம் என்பது எந்தவித தணிக்கையும் இல்லாமல், இந்த கருத்தை வெளியிட்டால் என்ன ஆகுமோ என்ற பயமில்லாமல் நாட்டில் நடக்கும் செய்திகளை நடுநிலையுடன் மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். ஆனால் இப்பொழுதோ பலர் பத்திரிகை சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அரசியல்வாதிகளின் கைப்பொருளாகவும், தனிமனித துதிபாடுபவைகளாகவும், வருமானம் ஒன்றையே கருத்தில் கொண்டும் பத்திரிகைகள் நடத்தப்படுகிறது.

மலேசிய நாட்டில் இந்தியர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரம் வெறும் 7% ஆக மட்டுமே இருக்கும் வேளையில் இந்தியர்களை பிரதிநிதித்து வெளிவரும் தமிழ்நாளிதழ்களின் எண்ணிக்கையோ ஐந்தாகிவிட்டது. (தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தினக்குரல் மற்றும் நம் நாடு)

மலேசியாவில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் அரசியல் கட்சிகள் மலிந்து கிடப்பது போல் அந்தக் கட்சிகளுக்கு மறைமுக அல்லது நேரடி ஆதரவு வழங்குவதற்காகவே சில நாளிதழ்கள் 'பிறப்பெடுத்துள்ளன'. இந்தப் பத்திரிகைகளில் சில ஆளுங்கட்சியின் அல்லக்கைகளாகவும்,எதிர்கட்சியின் பிரச்சாரபீரங்கிகளாகவும், அரசியல்தலைவர்களின் தனிமனித புகழ்பாடுபவைகளாகவும் விளங்குகின்றன. தான் சார்ந்த பத்திரிகைகளில் அறிக்கை மன்னர்கள் மாறி மாறி அறிக்கை விடுவதன் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே பத்திரிகையின் கொள்கை என்பதை மறந்து ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சிகளின் விளையாட்டு மைதானமாக பத்திரிகைகளை மாற்றி வருகிறார்கள்.

தினமும் நாளிதழ்களில் செய்திகள் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தால் போதும் என்ற எண்ணத்தில் முதல் பக்கத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற செய்திகளைப் போட்டு வெறுப்பேற்றுகிறார்கள். இதுப்போன்ற செய்திகள்தான் நம் இனத்தின் அடையாளமா? தினமும் நாடு முழுக்க எத்தனையோ நல்ல நிகழ்வுகள் நடப்பது இவர்கள் கண்களுக்கு தெரிவதே இல்லையா? பெரும்பாலான மக்கள் இது போன்ற செய்திகள் முதல் பக்கத்தை அலங்கரிப்பதை விரும்புவதில்லை. இருந்தும் தமிழ் நாளிதழ்களோ இது போன்ற செய்திகளை சளைக்காமல் போட்டு அசத்துகிறார்கள். கழுத்து அறுத்து கொலை, தலை துண்டானது, குடல் சரிந்து மரணம், கை துண்டிக்கப்பட்டது, குண்டர் கும்பல் சண்டைகள், இரத்த வெள்ளத்தில் கிடந்தார், நெற்றிப் பொட்டில் துப்பாக்கிச் சூடு, இளம்பெண் கதற கதற கற்பழிப்பு என்று கொட்டை எழுத்தில் வகை வகையாகத் தலைப்பிட்டு முதல் பக்கச் செய்தியாகப் போடுகிறார்கள். செய்திகள் மட்டுமல்லாது அருவருக்கத்தக்க, பார்க்கவே சகிக்காத கொடூரமான படங்களை வண்ணத்தில் போட்டு வாசகர்களின் அன்றையப் பொழுதை வண்ணமயமாக்குகிறார்கள்.

மலேசிய நாளிதழ்களில் பாதிக்கும் மேலாக தமிழ்நாட்டு செய்திகள் வெளிவருகின்றது. இந்தச் செய்திகளானவை அப்படியே தமிழ் நாட்டு நாளிதழ்களிலிருந்து வெட்டி ஒட்டப்படுபவை. தமிழகச் செய்திகளையும் தமிழக அரசியல் செய்திகளையும் மலேசிய நாளிதழ்கள் அளவுக்கு அதிகமாக வெளியிடுவதைக் குறைத்துக் கொள்வது மலேசியச் சூழலுக்கு நன்மையாக இருக்குமென தோன்றுகிறது.

மலேசிய தமிழ் நாளிதழ்கள் அரசியல், தமிழக செய்திகள், வன்முறை செய்திகளுக்குப் பிறகு சோதிட செய்திகளுக்கு மிக முக்கிய முன்னுரிமை கொடுக்கிறார்கள். அடுத்த வாரம் குருபெயர்ச்சி பலன்கள் தங்கள் நாளிதழில் வெளியாகும் என்பதை இந்த வாரமே தெரிவித்து விடுகிறார்கள். இந்த சோதிடச் செய்திகளுக்குத்தான் நமது நாளேடுகள் அதிகமான முகமைதரம் கொடுத்து வெளியிடுகின்றன. ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள், சித்திரைப் புத்தாண்டுப் பலன்கள், சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, இராசி பலன்கள், எண்கணிதம், சோதிடக் கேள்வி என பலதரப்பட்ட சோதிடங்கள். மக்கள் எதைத்தான் நம்புவார்கள், எந்த சோதிட ஜாம்பவானின் சோதிடம்தான் பலிக்கும்? மந்திரவாதிகளின் விளம்பரங்கள், பில்லி, ஏவல், சூனிய விளம்பரங்கள், அதிர்ஷ்ட எண் விளம்பரங்கள் ஒரு வரைமுறையின்றி வருமான நோக்குக்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இவ்வாறான விளம்பரங்கள் மூட நம்பிக்கையை மக்களிடையே பரப்பும் என்பது வேதனைக்குறிய விஷயமாகும்.

வாரத்திற்கு ஒருமுறை மலேசிய தமிழ் நாளேடுகள், தன் பக்கங்களை நடிகைகளின் ஆபாச மற்றும் கவர்ச்சிப் படங்களுக்காகவும் சினிமா துணுக்குகளுக்காகவும் அர்ப்பணிக்க மறப்பதில்லை.

இவையே பெரும்பான்மையான வாசகர்களின் விருப்பமாக இருக்கின்றது என அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் பத்திரிகையை படிப்பதற்கு முன் பிள்ளைகள் பார்த்துவிடாமல் இருக்க கடைசி பக்கத்தை மடித்து மறைத்துப் படிக்கும் நிலைமை மாறவேண்டும்.

நாளிதழ்களின் செய்தி தரம் உயர்வதன் மூலமாக வாசகர்களின் சிந்தனை தரமும் உயரும் என்பது திண்ணமாகும். அறிவார்ந்த சமுதாயமாக நாம் விளங்க வேண்டுமெனில் ஊடகவியல் துறை அறிவார்ந்த துறையாக மாறவேண்டும். நாட்டு நடப்புகள், சமுதாய சிக்கல்கள், அரசியல் பிரச்சனைகள் போன்றவைகளைப் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களால் வழங்கப்படவேண்டும். மலாய், ஆங்கில சீன நாளேடுகள் போன்றவற்றை பின்பற்றி தமிழ் நாளேடுகளும் சமுதாய பிரச்சனைகளை நிபுணத்துவத்தோடும், நடுநிலையோடும் அலசி ஆராய்வது மிக அவசியமாகும். நாளிதழ்களில் பல தரப்பட்ட வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்படவேண்டும். அறிவு சார்ந்த விஷயங்களுக்கான பக்கங்கள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்.

முக்கியமாக தமிழ்ப் பத்திரிக்கையின் மொத்தப் பக்கங்கள் இன்னும் கூட்டப்பட வேண்டும். வழங்கும் பணத்திற்குறிய தகுதிகளோடு நம் பத்திரிக்கைகள் இருத்தல் நலம்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768