முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 44
ஆகஸ்ட் 2012

  பயணிப்பவனின் பக்கம்... 20
தயாஜி
 
 
       

கட்டுரை:

தமிழ்நேசன், மக்கள் ஓசை மற்றும் ஹஜி தஸ்லிம் கவனத்திற்கு...
கே. பாலமுருகன் - ம. நவீன்

துணைக்கல்வி அமைச்சர் பதவி
ந. பச்சைபாலன்

இந்தோனேசியக் கவிஞர் சைறில் அன்வர் ஓர் அறிமுகம்
மூலம் : ஜேம்ஸ் எஸ் ஹோம்ஸ் | தமிழில் : எம்.ஏ.நுஃமான்

தமிழில் சைறில் அன்வர் கவிதைகள்
எம்.ஏ.நுஃமான்



சிறுகதை:

சூன்யப்பெருவெளிக்கதைகள்
எம்.ஐ. ஷாஜஹான்

அவலம்
அண்டனூர் சுரா



பதிவு:

வல்லினம் வகுப்புகள் 1 - இலக்கியமும் மொழியியலும்

'ஐ.பி.ஏ' ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் பதிவுகள்


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 3
அ. மார்க்ஸ்


கேள்வி பதில்:

'லிவிங் ஸ்மைல்' வித்யா பதில்கள்
'லிவிங் ஸ்மைல்' வித்யா


புத்தகப்பார்வை:

ம. நவீனின் 'சர்வம் ப்ரம்மாஸ்மி' கவிதைகள் இன்றைய உலகயலின் அக புறத் தாக்கத்தின் ஆதாரங்கள்
மேமன்கவி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி

வழித்துணை
ப. மணிஜெகதீசன்



கவிதை:

எம். ராஜா

செ. சுஜாதா

ஆறுமுகம் முருகேசன்

ந. பெரியசாமி

பூங்குழலி வீரன்



எதிர்வினை



அறிவிப்பு:

லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியங்கள் விற்பனைக்கு...

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்: மலேசிய பெண் எழுத்தாளர்களின் விபரங்கள் தேவை

நான் சாமியாராகத்தான் ஆசைப்பட்டேன். ஆனால்....

“படிச்சி என்ன ஆகப்போற?”

“பெரிய சாமியாராகிடுவேன். சொன்னதெல்லாம் பலிக்கும். என்கிட்ட வரவங்க எல்லோர்க்கும் சீக்கு இல்லாம ஆக்கிடுவேன்”

அம்மாவிடம் அப்போது வாங்கிய திட்டும் இன்னமும் மறக்கவில்லை. படிக்கும் வயதில் இந்த கேள்விக்கு பல பதில்கள் வந்து சேரும். தத்தம் சிந்தனையில் இருந்துதான் அந்த பதில் வந்திருக்குமென சொல்லிவிட முடியாது. கேட்பவர்களை கௌரவிக்க சிலர் பதில்களைச் சொல்வதுண்டு. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிலை சொல்கின்றவர்களும் உண்டு. தனக்குத் தெரிந்தது ஒன்றே என்பதால் அதுவே பதிலாகச் சொல்கின்றவரும் உண்டு. சினிமா மோகத்தாலும் பதிலைச் சொல்கின்றவர்கள் உண்டு; ஆனால் தைரியமாகச் சொல்லமாட்டார்கள்.

ஆனால், நான் ஏன் சாமியாராக ஆசைப்பட்டேன் என்று யோசிக்கையில், ஏதோ மர்ம முடிச்சால் நாம் ஒவ்வொருவரும் இழுக்கப்பட்டிருக்கிறோம் எனவே தோன்றுகிறது. படித்தவரும் சரி படிக்காதவரும் சரி எப்படியும் சாமியார்களின் உதவியைத் தேடிவிடுகிறார்கள். ஒன்றை கவனித்துப் பார்த்தால்; நாடியது கடவுளையோ ஆன்மீகத்தையோ அல்ல; சாமியார்களை. தலைவலிக்கு தேவைப்படும் உடனடி நிவாரண மாத்திரை போல. அப்படித்தான் இருக்கிறார்கள் சாமியார்கள்.

மாத சம்பளம் அதிகரிக்க, மகன் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க, கணவன் தன்னையே சுற்றி வர, மனைவி தன்னையே சுற்றி வர, கடன் தொல்லை தீர, நோய்க்கு தீர்வு கிடைக்க. இந்த வட்டங்களை மீறிய சாமியார்களின் தேவை குறைவுதான். ஐந்து நிமிடம் அமர்ந்து யோசிந்திருந்தால் உடனடி தீர்வை விட, உருப்படியான யோசனை வந்திருக்கும்.

தன்முனைப்பு பயிற்சியும், சாமியார்களின் வளர்ச்சியும் லேசாக நாம் ஒப்பிடலாம். கோவித்துக் கொள்வார்கள்; பயிற்சிக்கும் வளர்ச்சிக்கும் காரணமானவர்கள்.

நான் வளர்ந்து கொண்டிருந்த சமயம், எங்கள் பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடியேறியது ஒரு குடும்பம். போமோவாக அந்த குடும்பத்தலைவர் சம்பாதிப்பது சில நாள்களில் தெரிந்துவிட்டது. வீட்டின் வாசலிலும், பூஜை அறையிலும் இந்து கடவுள்களின் படத்தினை வைத்து வழிபட்டாலும். தான் போமோவாகும் போது, டத்தோ என சொல்லும் மலாய்க்கார சாமிதான் வந்து பேசும்.

இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் ஒற்றுமையை அப்போதிருந்து அந்த டத்தோ சாமி செய்து வருவது ஆச்சர்யமான ஒன்றுதான். நான் பார்த்த வரையில் அதிக தமிழர்களுக்கும், ஒரு சில சீனர்களுக்கும் இந்த டத்தோ சாமிதான் சாப்பாட்டுக்கு வழி வகுக்கிறார். டத்தோ சாமிக்கென சில கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் இருக்கின்றன. இதனை நீங்கள் கூட முயற்சித்துப் பார்க்கலாம். டத்தோ சாமி வராவிட்டால், மத்த சாமியேதும் வரலாம்.

ஒரு ஊதுபத்தி, வரக்கோப்பி (கறுப்பு காப்பின்னா சிரிக்கிறவங்க இருக்காங்க), சுருட்டு, ஒரு கண்ணாடி கிளாஸ், நாம உட்கார ஒரு பாய், நமக்கு உதவியா ஒருத்தரு இருந்தா நல்லா இருக்கும். உதவிக்கு ஆள் இருந்தால்தான் டத்தோ நம்மீது இறங்கி பேசுவதைக் கேட்க முடியும்.

வழக்கம்போல குளித்து சுத்தமா இருக்கற இடத்துல, நாமலும் நமது உதவியாளரும் அமரனும். முக்கிய விசயம், தமிழ் சாமியை கூம்பிட விரும்பலாம் விரும்பாமலும் இருக்கலாம், அது ஒரு பிரச்சனையாக வராது, நம் விருப்பம். ஊதுபத்தியைக் கொளுத்தி, கண்ணாடி கிளாஸ்ல கறுப்பு கோப்பியை ஊத்தி வச்சி, கண்களை மூடி ஒரே வார்த்தைதான் திரும்ப திரும்ப சொல்லனும். டத்தோ.... டத்தோ..... டத்தோ.....

அதி முக்கிய செய்தி ஒன்று உள்ளது. உங்களுக்கும் உதவியாளருக்கும் மலாய் மொழி தெரிந்திருக்க வேண்டும். இன்னமும் எந்த டத்தோ சாமியும் மலாய் மொழி தவிர வேறெதையும் கற்றிருக்கவில்லை. நம்பிக்கையுடன் திரும்ப திரும்ப சொல்லுங்கள். டத்தோ வருவார், பேசுவார், சுருட்டை ஊதித்தள்ளுவார், காப்பியைக் குடிப்பார், உங்களுள் வந்திருந்தால் உதவியாளரையும், உதவியாளர் மீது வந்திருந்தால் உங்களையும் ஊடுரிவிப்பார்ப்பதுபோல் ஆழமாகப் பார்த்து, விசாரிக்க ஆரம்பிப்பார்.

அப்படியும் டத்தோ வராவிட்டால் உங்கள் நம்பிக்கை ஆழமற்றது என்பார்கள். உண்மையில் நம்பிக்கையை ஒன்றை வைத்துதான் போமோக்கள் சாமியார்கள், பயிற்சியாளர்கள் பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நமது ஆழமற்ற நம்பிக்கை ஏற்படுத்தும் விளைவால், சுலபமாய் சாய்ந்து கொள்ளும் ஒன்றாய் தெரிகிறவர்கள் இவர்கள்தான்.

அதிலும் கால மாற்றத்திற்கு ஏற்றார் போல சாமியார்களும் மாறிவிட்டார்கள். டத்தோக்கள்தான் பாவம் கம்போங்கில் ஏதோ ஒரு மரத்தடியிலும், இந்திய - சீன நம்பிக்கையாளர்களின் பழைய வீட்டு பின்புறத்திலேயே தங்கிவிட்டார்கள். மீண்டும் டத்தோவைப் பார்க்க வேண்டுமானால் பழைய இடத்திற்கு செல்லவேண்டும் அவர்கள்.

மாற்றம் கண்ட சாமியார்களின் முதல் வசீகரம் அவர்களின் கட்டணம்.

நினைத்ததை போடுங்க போதும்.......

எவ்வளோ வேணும்னாலும் போடுங்க உங்க விருப்பம்......

இப்படியிப்படியாக ஆரம்பித்த கட்டணங்கள் இப்போது ஆயிரக்கணக்கில் வந்துவிட்டது. எனக்கு தெரிந்த ஒருவர் வட்டிக்கு கடன் வாங்கி அவதிப்பட்டார். சாமியாரை பார்த்து தீர்வு பெற போனபோது, நம்பிக்கை ஏற்பட்டு தன்னால் சீக்கிரம் கடனை அடைக்க முடியும் என சொல்ல ஆரம்பித்துவிட்டார். சாமியாருக்கு கொடுத்த கட்டணத்தைக் கூட வேறொருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கித்தான் வந்திருந்தார். இன்னமும் கட்டிக் கொண்டிருக்கிறாரா, இல்லை “என்னால் முடியும், என்னால் முடியும், என்னால் முடியும்” என சாலையோரங்களில் தலையை சொறிந்து கொண்டிருக்கின்றாரா தெரியவில்லை.

சீட்டுக்கட்டை பிரித்து ஒவ்வொன்றாக இடைவெளிவிட்டு அடுக்கிவிட்டு, முதல் கார்ட்டை தள்ளிவிடவும் அடுத்தடுத்த கார்டுகள் வரிசையா விழுந்து கொண்டே போகுமே. அந்தச் சூட்சுமம்தான் சாமியார்களின் பலம். அதிலும் அந்த முதல் கார்ட்டாக விழுபவர் முக்கிய நபராக இருந்தால், அதுவே போதும். வேறெந்த விளம்பரமும் சாமியார்களுக்கு; போமோக்களுக்கு ; பயிற்சியாளர்களுக்கு ; தேவையில்லாமல் போய்விடுகிறது.

நானும் சாமியாராகிட நினைத்து என் இயலாமையை மறைக்கத்தானோ என இப்போது யோசிக்கிறேன். நான் பயப்படும் என் மாமாவே சாமியார்களிடன் கை கட்டி அத்தனை அடக்கமாக உட்கார்ந்து தலையாட்டிக் கொண்டிருந்தால் வேறெப்படி தோன்று எனக்கு. போலிஸ்காரரிடம்கூட இந்த பணிவாய் இருந்ததில்லை என் மாமா. ஆக, சாமியார் என்பது அதிகாரம். பலம். சுலபத்தில் பணம்.

சாமியார்கள் சொல்வது பலிக்கவில்லையென்றால், அவர்களுக்குத்தான் லாபம். முதலில் கொடுத்த தொகையை விட அதிகமாகக் கொடுத்து பலமான பூஜையை செய்திடச் சொல்வார்கள்.

சாமியார்களில் இன்னொரு மிக முக்கிய பலம். பெண்ணின் எந்த இடத்திலும் கை வைக்கலாம். உடன் தாய் தந்தை இருந்தாலும் சரி, கணவன் அமர்ந்திருந்தாலும் சரி, சாமியார்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருப்பதில்லை.

முகநூலில் பேசும் போது ஒரு தோழி சொன்ன செய்தி இது;

“அவரு சொன்னாரு எனக்குள்ள அம்மன் சக்தி இருக்காம். அவருக்கு சிவன் சக்தி இருக்காம். ஆன என்னோட சக்தி முழுமையா விழிப்படையாம இருக்காம். ஒரு முறை நாங்க கட்டியணைச்சி கூடினாகூட போதுமாம். அந்த சிவன் என் சக்தியோடும். இந்த சக்தி அந்த சிவனோடும் கலந்திடுமாம். அதுக்கு அப்பறம் எனக்கு எந்தப் பிரச்சனையும் வராதாம்.”

இது ஏதோ ஒரு சீடியில் பல கோடி பேரைப் பார்க்க வைத்த நித்தி சொன்னதல்ல. நித்தியைவிட பல குட்டி கிளை சாமியார்களில் செயல்.

உங்கள் அப்பாவும் அம்மாவும் அவர்களை நம்புகிறார்கள். ஏனெனில் அவர்கள் தாத்தா பாட்டி நம்பினார்கள். இன்று சாமியார்களை நீங்கள் கேள்வி கேட்காவிட்டால் நாளை உங்கள் பிள்ளைகளுக்கும் சில குட்டி சாமியார்களோ ஜட்டி சாமியார்களோ தேவைப்படுவார்கள்.

இதனை எழுதுவதால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றாகிவிடாது. அதுவும் உண்மைதான். எனக்கு ‘கடவுள்கள்’ மீது நம்பிக்கையில்லை.

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ஒரு முறை மேடையில் இப்படி குறிப்பிட்டார்;

“ஆசிரம் ஆசிரமாம போறாங்க, கேட்டா ஆனந்த பெருவெள்ளத்தை அடையறேன், ஜோதியோட கலக்கறேன்னு சொல்றாங்க......... அதான் வெள்ளத்தையும் அடைஞ்சிட்டிங்க; ஜோதிலயும் கலந்துட்டிங்க அப்புறம் ஏன்யா இப்படியே இருக்கறீங்க..... வாராவாரமும் போய் உட்கார்ந்துகிட்டு இருக்கிங்களேன்னு கேட்ட கோவிச்சிக்கறாங்க...”

எனக்கும் அந்த சந்தேகம் உண்டு. அதனை எந்த சாமியாரிடம் கேட்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768