வல்லினம் வகுப்புகள்... 2
அமைப்பியல்
மலேசியத் தமிழ் படைப்பாளிகளின் ஆளுமையை வளர்க்கவும்,
பலதரப்பட்ட அறிவுத்துறைகளிலும் தத்துவங்களிலும் ஈடுபாட்டை ஏற்படுத்தவும்
வல்லினம் தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வருகின்றது. அவ்வகையில் இரண்டாம்
வகுப்பாக 'அமைப்பியல்' செப்டம்பர் 29 மற்றும் 30-ல் (சனி & ஞாயிறு) நடைபெற
உள்ளது. இப்பட்டறையை தமிழவன் அவர்கள் வழி நடத்துவார்.
'கிராண்ட் பசிப்பிக்' (Grand Pacific Hotel, Jalan Ipoh, Kuala Lumpur)
தங்கும் விடுதியில் இந்தப் பட்டறை நடைபெறும்.
முதல் நாள் அமர்வுகள்
(29.9.2012 - சனிக்கிழமை)
(மதிய உணவு இல்லை. எனவே பங்கேற்பாளர்கள் மதிய உணவை முன்னமே முடித்துக்கொள்ள
கேட்டுக்கொள்ளப்படுகிறது)
நண்பகல் 12.00 : பதிவுகள் தொடங்கும்
நண்பகல் 12.30 : அறிமுக உரை
மதியம் 1.00 - 3.00: முதல் அமர்வு - தலைப்பு : அமைப்பியல் தமிழில் வந்த
சூழல்:(தமிழ் மொழியின்
தன்மைகள்-திராவிடம்-மார்க்சியம்-எக்சிஸ்டென்சியலிசம்)
மதியம் 3.00 - 4.00 : இடைவேளை (அறை சாவி கிடைக்கும், தேநீர் மற்றும்
பலகாரம் வழங்கப்படும்)
மதியம் 4.00 - 6.00 : இரண்டாவது அமர்வு - தலைப்பு: அமைப்பியலின்
அடிப்படைகள்: சசூர், லெவிஸ்ராஸ், ரஸ்யவடிவவாதம், அல்தூஸர், ரோலாண்பார்த்)
மாலை 6.00 - 7.00 : இடைவேளை
இரவு 7.00 - 8.00 : இரவு உணவு
இரவு 8.00 - 10.00 : மூன்றாவது அமர்வு - தலைப்பு : அமைப்பியலும்
இலக்கியமும்:(அன்றைய தமிழ் விமரிசனம்,டெரி
ஈகிள்டன்,தொல்காப்பியம்,அல்தூசரின் இலக்கியக் கோட்பாடுகள்)
இரவு 10.00 : உணவு
இரண்டாம் நாள் அமர்வுகள்
(30.9.2012 - ஞாயிறு)
காலை 7.00 - 8.00 : காலை உணவு
காலை 8.00 - 10.00 : நான்காவது அமர்வு- தலைப்பு : பின்னமைப்பியல்: (
டெரிடா, ப்யூக்கோ, தமிழ் விளைவுகள், தமிழ் உதாரணங்கள்)
காலை 10.00 - 10.30 : இடைவேளை (தேநீர்)
காலை 10.30 - 12.30 : ஐந்தாவது அமர்வு - தலைப்பு : அமைப்பியலும்
பின்னமைப்பியலும பின்னோக்கிப் பார்க்கும்போது: ( தமிழ்ப் படைப்பு
இலக்கியங்கள்)
நண்பகல் 12.30 - 1.00 : சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
மதியம் 1.00 : மதிய உணவு
மதியம் 2.00 முதல் 5.00
சிற்றேடு அறிமுகம்
பொது மக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
|