முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 46
அக்டோபர் 2012

  மதமாற்றத்தின் அரசியல்
கே. பாலமுருகன்
 
 
       

பதிவு:

வல்லினம் வகுப்புகள் 2 - 'மஹாத்மன் சிறுகதைகள் உலகத்தரமானவை'
தமிழவன்



கட்டுரை:

காலாவதியான இரசனையும் சினிமாவும்
கே. பாலமுருகன்

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
கே. எஸ். சுதாகர்

மதமாற்றத்தின் அரசியல்
கே. பாலமுருகன்

ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்
லதா



நேர்காணல்:

எனக்கு அறிவியல் பள்ளியில் இடம் இல்லை
ஸ்ரீ அறிவேஷ்

சிறுவர் இலக்கியம் உருவாக்கப்பட வேண்டும்
கே. பாலமுருகன்



சிறுவர் சிறுகதை:

ஓரம் போ
கே. பாலமுருகன்


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 5
அ. மார்க்ஸ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை
அ. பாண்டியன்

அச்சில் ஏறாத உண்மைகள்
இரா. சரவணதீர்த்தா

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்



கவிதை:

இரா. சரவண தீர்த்தா

சின்னப்பயல்

செ. சுஜாதா

ந. பெரியசாமி

துரோணா

வல்லினத்தில் ஏற்கனவே கிருஸ்த்துவ வழிபாட்டையும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா வழிப்பாட்டையும் பின்பற்றிய சமயங்களில் நான் எதிர்நோக்கிய மனநெருக்கடிகளையும் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் எழுதியிருந்தேன். அது மதத்திற்கு எதிரான ஒரு குரலாக என்னால் உணர முடிந்தது. ஆனால், அது சார்ந்த எந்தத் தரப்பினரிடமிருந்தும் எதிர்வினை வரவில்லை. எப்பொழுது தாங்கள் நம்பியிருக்கும் நம்பிக்கைகள் கேள்விக்குட்படுத்தப்படுகிறதோ அந்தச் சமயங்களில் இருவகையான மனிதர்களை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். ஒன்று, இத்தனை நாள் தான் கெட்டியாகப் பிடித்திருந்த நம்பிக்கைகளை மேலும் புனிதப்படுத்திக் காட்ட விவாதத்தில் சர்ச்சையில் ஈடுபடுபவர்கள். மற்றொருவர், அப்படித் தர்க்கம் செய்ய முடியாமல் அமைதியாக இருந்துவிடுபவர்கள்.

மதம் என்பதன் அரசியலைப் பற்றி சென்ற கட்டுரைகளில் பேசிவிட்டேன். இப்பொழுது மலேசியாவில் கவனிக்கத்தக்க சவாலாகவும் சிக்கலாகவும் இருக்கும் மதமாற்றம் பற்றி விவாதிக்க வேண்டியிருக்கிறது. உலகமயமாக்கல் என்ற சர்வதேச கிராமத்திற்குள் வசிக்கும் மனித வாழ்வை நோக்கி மதமாற்றம் என்பது பேசக்கூடிய விசயமா எனக் கேள்வி எழக்கூடும். தனிமனித சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி தீர்மானிக்கக்கூடிய சக்தியாக எதை நுழைத்தாலும் அதை நோக்கி நாம் விவாதிக்கலாம் என்பதே மிக முக்கியமான விழிப்புணர்வு.

மதத்தின் மூலதனமே நம்பிக்கைகளும் வழிபாடுகளும்தான். மதம் நம்பிக்கைகளை விற்பனை செய்யும் நிறுவனம் என்பதால் சுலபமாக அது உற்பத்தி செய்யும் அல்லது வழக்கத்திலுள்ள நம்பிக்கைகளைச் சமூகத்திற்குள் விற்பனை செய்துவிடுகிறது. சமூகத்தில் இயங்கக்கூடிய அனைவருமே நுகர்வோர்தானே. ஆகையால், அவர்களை வசியப்படுத்துவது என்பது பெரிய காரியம் அல்ல. இறைநம்பிக்கையை ஒரு பண்டமாற்று வியாபார உத்தியாகப் பாவித்து ஆட்களைக் குவிப்பதைத்தான் மத நிறுவனங்கள் ஆங்காங்கே செய்து வருகின்றன. வெறுமனே ஒரு நம்பிக்கையை விற்பது என்பது சாதாரண விசயமல்ல. முதலில், அந்த நம்பிக்கைகளுக்கு ஒரு முத்திரை வேண்டும் அல்லது அந்த நம்பிக்கைகளுக்கு மாயசக்தி இருக்க வேண்டும்.

ஆரம்பகாலங்கங்களில், தோட்டப்புறங்களில் அதிகமாகச் செய்யப்பட்ட மதமாற்றங்கள்கூட ஏழ்மையை நீக்கும் பாணியிலேயே அமைந்திருந்தன. அரிசி, பருப்பைக் கொடுத்து தோட்டத்து மக்களை மதம் மாற்றிய ஒரு குழு அப்பொழுது தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது. என்னுடைய கேள்வி, மதமாற்றம் என்பதை ஒரு கட்டாயமாகக் கருதும் அளவிற்கும் அதை ஒரு வியாபார உத்தியாகச் சமூகத்திற்குள் நுழைக்கும் அளவிற்கு என்ன வந்துவிட்டது?

தான் நம்பும் அல்லது பற்று கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கையை எல்லோருக்குமானதாக மாற்ற வேண்டும் என்ற அகத்தூண்டலா அல்லது மத நிறுவனம் வலுப்பட தன்னை ஒரு இடைத்தரகர்களாக மாற்றிக்கொண்டதன் விளைவா என்பதே கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும். நம்பிக்கையைப் பின்பற்றுபவர்கள் ஒரு பக்கம் இருக்க அந்த நம்பிக்கைகளைப் பரப்புவோர் எப்பொழுதும் இருக்கவே செய்வார்கள். வரலாற்றில் வணிகம் செய்ய வந்தவர்கள் தான் ஆக்கிரமிப்பு செய்த நாட்டில் முதலில் தீவிரமாகப் பரப்பியது மதத்தைதானே. நாம் வாழும் சூழலில் மதம் சார்ந்து பெற்ற அனுபவத்தையே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

மனமாற்றமோ மதமாற்றமோ அதைத் தீர்மானிக்கக்கூடிய விசயத்தில் எந்த வற்புறுத்தலும் ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது. சந்தைக்கு வரும் பொருள்களில் எது தரமானது எது நமக்கு தேவையானது எனத் தீர்மானிக்கும் ஒரு நுகர்வோனை பல வெளிசக்திகள் தன்னுடைய தந்திரத்தாலும் விளம்பரத்தாலும் பணம் சம்பாரிக்கும் நோக்கில் வசியப்படுத்த முயலும் செயலோடு மதமாற்றம் என்கிற அரசியலைப் புரிந்துகொள்வது மேலும் வசதியாக இருக்கின்றது. இது நம்பிக்கைகளைத் திணிக்க முற்படுவது ஆகும். என்னுடைய நம்பிக்கைகளின் ஆற்றலை அதைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதன் மூலமே பெருக்க முடியும் என நம்பக்கூடியவர்களே மதமாற்றத்தை ஒரு ஆண்டு நடவடிக்கையாகச் செய்து வருகிறார்கள்.

MLM வியாபாரத்தைப் போலவே தனக்குக் கீழ் எத்தனை பக்தர்களை எத்தனை கடைப்பிடிப்போர்களை உருவாக்கியிருக்கிறேன் எனக் கணக்குப் பார்த்து தன் பௌதீக வாழ்வின் புனித சமாச்சாரங்களைச் சரிக்கட்டிக் கொள்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். வாழ்க்கை சூழலில் எத்துனைப் பரப்பரப்பாகப் பொருளாதாரக் கொள்கைகளுடன் இருப்பினும் மத நம்பிக்கைகளைப் பரப்புவதை ஒரு கடைமை எனக் கருதி செய்பவர்களும் இருக்கிறார்கள். தனக்குக் கிடைக்கும் நேரங்களில் அதைச் செய்வதையே ஓர் ஆன்மீக செயல் என நம்பி செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.

சமீப காலத்தில் கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மதமாற்றம் என்ற பெயரில் மூலை சலவை செய்யப்படுகிறார்கள் என்ற செய்தியும் பரப்பப்பட்டு வருகின்றது. இது உண்மையாக இருக்கக்கூடுமா என ஆராய்வதைவிட மதம் ஒரு மதமாற்றம் நிறுவனமாகத் தொடர்ந்து செயல்படத்துவங்கினால் அது கொடுக்கக்கூடிய எதிர்க்கால பின்விளைவாக அந்தச் செய்தியைப் புரிந்துகொள்ளலாம் அல்லவா? பற்பல நம்பிக்கைகளால் உடைப்பட்டு கிடக்கும் ஒரு சமூகம் அதன் நம்பிக்கைகளை முதன்மை சக்தியாக மாற்றுவதற்காக மேலும் மேலும் சிறு புள்ளியாக உடைந்து ஒன்றுகொன்று முரணாகி ஆள் சேர்க்கும் ஏஜாண்டுகளாக மாறிவிடுகின்றன.

மதம் என்பது ஆள் சேர்க்கும் ஏஜேண்டுகள் என்றால் எதிர்க்கால தலைமுறையின் மூளைகளில் அது ஒரு அதிகார சக்தியாக நிலைக்கொள்ளும். மதமாற்றம் என்கிற நடவடிக்கை தரக்கூடிய மிகப்பெரிய பாதிப்பு ஒரு சமூகத்தைக் கூறுபோடுவதே ஆகும்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768