முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 46
அக்டோபர் 2012

  காமேக் புகான் ஓராங் சிதோக்... 18
நோவா
 
 
       

பதிவு:

வல்லினம் வகுப்புகள் 2 - 'மஹாத்மன் சிறுகதைகள் உலகத்தரமானவை'
தமிழவன்



கட்டுரை:

காலாவதியான இரசனையும் சினிமாவும்
கே. பாலமுருகன்

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
கே. எஸ். சுதாகர்

மதமாற்றத்தின் அரசியல்
கே. பாலமுருகன்

ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்
லதா



நேர்காணல்:

எனக்கு அறிவியல் பள்ளியில் இடம் இல்லை
ஸ்ரீ அறிவேஷ்

சிறுவர் இலக்கியம் உருவாக்கப்பட வேண்டும்
கே. பாலமுருகன்



சிறுவர் சிறுகதை:

ஓரம் போ
கே. பாலமுருகன்


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 5
அ. மார்க்ஸ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை
அ. பாண்டியன்

அச்சில் ஏறாத உண்மைகள்
இரா. சரவணதீர்த்தா

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்



கவிதை:

இரா. சரவண தீர்த்தா

சின்னப்பயல்

செ. சுஜாதா

ந. பெரியசாமி

துரோணா

சீபு

பாதைகள் இருக்கும் வரை பயணங்கள் முடிவதில்லை. அது பழைய வரி. பயணங்கள் இருக்கும் வரை பாதைக்கு எல்லையில்லை. இது தான் புது வரி.

உலகத்தின் எல்லையை மனிதன் கண்டுப்பிடித்திருந்தாலும், அனுபவத்தின் எல்லையை மட்டும் இன்னும் கண்டுபிடிக்க முடியாமலேயே தள்ளாடுகிறான். சரவாக்கின் எல்லைகள் கடல் பரப்பில் விரிந்து படர்ந்து இருந்தும் ஒவ்வொரு இடமும் தனக்குள்ளே சொல்லொன்னா அனுபவத்தை சேர்த்து வைத்துகொண்டுதான் இருக்கிறது. நிலம் பழசானாலும் நித்தம் நித்தம் வரும் புத்தம் புதியவர்களுக்கு அனுபவத்தை அள்ளி அள்ளி தெளித்து கொண்டே இருக்கின்றது. அனுபவம் என்னும் சொல்லை தவிர அனுபவிப்பவை எல்லாமே புதியதாய் தான் தோன்றுகிறது. இந்த அனுபவத்தை பெருக்குவதற்கான ஆவல் எப்போதும் போலவே திடீரென்றுதான் எங்களுக்கு தோன்றியது.

இந்த வருடம் சீன வருட பிறப்புக்குப் பள்ளி விடுமுறை ஒரு வாரம் நீண்டிருந்தது. வெள்ளிக்கிழமை விடுமுறைக்கு முதல் நாள் வீட்டின் வரவேற்பறையில் எல்லாரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது தான் சீபூ போகும் திட்டமே உதித்தது. அந்த நேரமே அப்போதே போய் டிக்கேட் வாங்க சென்று விட்டோம் மூவரும். (எப்போதும் போல அதே மூவர்தான்). நல்ல வேளை சீபூவில் எங்களின் பல்கலைகழக தோழி ஒருவள் இருந்ததால் இன்னும் வேலை சுலபமாகி விட்டது. மறுநாள் மதியம் 3 மணிக்கு பஸ் எடுத்தால், சென்று சேர எப்படியும் இரவு 9 ஆகி விடும். ஆனாலும் செல்லும் வழியெங்கும் அந்த உணர்வையும் வழி நெடுக்கக் காட்சிகளை பார்க்க வேண்டுமாயின் மதிய பயணமே தோதானது என்பதால் பயண நேரத்தை மனக்கணக்கு செய்து சூட்டோடு சூடாக டிக்கேட் வாங்கிவிட்டோம். அதோடு வீட்டுக்கு சென்று அந்த மூன்று நாள் பயணதுக்கான உடைகளையும் மற்ற தேவையான பொருட்களையும் தயார் செய்து விட்டோம்.

அந்த ஒரு வார விடுமுறையில் தேர்வுத்தாட்களை திருத்த வேண்டி இருந்ததால் அந்த இரவே எப்படியாவது ஓரளவு பெரும்பகுதியை திருத்திவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். இல்லையென்றால் என்னால் கண்டிப்பாக திருத்தி முடிக்க முடியாது. உண்மையில் பெயருக்கு தான் ஆசிரியர்களுக்கு விடுமுறை. ஆனால் அலுவல்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன. சரியாக விடுமுறைக்கு முதல் நாள் தேர்வு முடியும். விடுமுறையில் திருத்தி முடித்து மீண்டும் பள்ளி திறக்கும் போது தேர்வு மார்க்குகளை அந்தந்த வகுப்பாசிரியர்களிடம் அனுப்ப வேண்டும். அப்படி இருந்தால் கண்டிப்பாக ஓய்வு என்பது எட்டாக்கனிதான். இருந்து நேரத்தை திருட வேண்டிய கட்டாயத்துக்கு ஒவ்வொரு ஆசிரியரும் தள்ளபடுகின்றார்கள். ஒற்றையாயிருக்கும் எங்களுக்கே இந்த கதி என்றால் இரட்டையாய் இன்னும் பன்மையாய் இருக்கும் ஆசிரியர்களின் கதி அவலம் தான்.

எது எப்படி இருந்தாலும் எனக்கு பயணம்தான் முக்கியம். விறுவிறுவென எனது பாடத்தேர்வின் பெரும்பகுதியை கஷ்டப்பட்டு திருத்தி முடிக்க அதிகாலை மணி 3 ஆகிவிட்டது. அதன் பின் தூங்கி மறுநாள் காலை 10-க்கு தான் எழுந்தேன். நல்ல வேளை பஸ் மதியம் 3 மணிக்கு தான். அந்த வகையில் எங்களுக்கு லாபம்தான். டெக்ஸிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து பின்னர் வீட்டை பூட்டி அக்கம்பக்கத்தாரிடம் தகவல் தெரிவித்து புறப்பட சரியாக இருந்தது. உண்மையில் எங்கள் பக்கத்து வீட்டுகாரர்களைப் பாராட்டியே தீர வேண்டும். மத்தியில் எங்கள் வாடகை வீடு. இரு குடும்பத்தாருமே சீனர்கள். பாகுபாடின்றி பழகுபவர்கள். எள் என்பதற்குள் எண்ணையாய் நிற்பவர்கள். அந்த வகையில் நாங்கள் மிகவும் அதிஷ்டசாலிகள். ஒரு முறை எங்கள் வீட்டில் மட்டுமே இரவு நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டு போனது. என்ன காரணம் என்றே தெரியாத போது கரண்ட் பழுது நீங்கும் வரை எங்களுக்கு பாதுகாப்பாக துணையாக இரண்டு வீட்டாருமே இருந்தனர். மனம் நெகிழ்ந்து விட்டது. அந்த அளவில் பாதுகாப்பான ஒரு சூழலில் தான் நாங்கள் இருக்கிறோம். எங்கிருந்தாலும் எவ்வளவு உறவினர்கள் இருந்தாலும் உற்ற நேரத்தில் உறுதுணையாய் இருப்பது உறவில்லாத பக்கத்து வீட்டுக்காரர்கள்தான். எனவே நாங்கள் இல்லாத சமயத்தில் வீட்டை பார்த்துகொள்ள சொல்லி விட்டு நாங்கள் புறப்பட்டு விட்டோம்.

பேருந்தும் குறித்த நேரத்தில் வந்து விட்டது. அன்று சீனப்பெருநாளாகையால் குறைந்த அளவிலேயே மனித நடமாட்டத்தை காண முடிந்தது. நாங்கள் பஸ்ஸில் அடைக்கலமாகி விட்டோம். என் இரு தோழிகளும் முன்புறத்தில் அமர்ந்து கொள்ள நான் அவர்களுக்கு பின் புறத்தில் அமர்ந்திருந்தேன். என் பக்கத்தில் அமரவிருக்கின்ற அந்த ஆள் யாரென்று எதிர்ப்பார்த்து காத்திருந்தேன். ஒரு சீன பையன் வந்து அமர்ந்தான். வயது இருந்தால் 22 அல்லது 23 தான் இருக்கும். பேசுவதற்கு ஆள் வேண்டுமல்லவா. சிறு புன்முறுவலோடு பேருந்து நகர துவங்கியதும் எங்கள் உரையாடல் தொடங்கியது. 7 மணி நேர பயணம் போரடிக்காமல் போக இது உதவியாக இருந்தது. நாங்கள் செல்லும் இடம் ஒரே இடம் என்பதை பேச பேச தெரிந்து கொண்டேன். அவன் பல்கலைகழக மாணவன் என்றும் படிக்க சென்றதிலிருந்து ஒவ்வொரு ‘மாக்கான் பெசார்’ இரவும் அவன் தவற விட்டு விடுவான் என்றும் சொன்ன போது எனக்கே பாவமாக இருந்தது. தூரமாக இருக்கும் போது உறவு மட்டும் இன்னும் இன்னும் நெருங்கி நெருங்கி வருகின்றது. எவ்வளவு தூரமாய் போனாலும் மீண்டும் மீண்டும் ஒன்று சேர எண்ணம் எத்தனிக்கும். என்ன செய்வது, எப்படி இருந்தாலும் எல்லாமே அனுபவம்தானே. பின்பு சிறிது நேரம் என்னையும் என் வேலையையும் விசாரித்தவன் பின்பு அப்படியே இன்றைய சூழலில் இளைய தலைமுறையினரின் போக்கை பற்றிய கருத்தை பேசினான். சொல்லப்போனால் எப்போதுமே சமுதாயத்தை பற்றிய கவலை ஒவ்வொருத்தருக்கும் இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு சமுதாயத்திலேயும் ஒவ்வொரு பிரச்னைகள். அவை ஒவ்வொரு விதமாய் வளர்ந்து எல்லா வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறன. ஆனால் அவை எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பதனை அறிய முற்படும்போது அவற்றுக்கான காரணங்கள் ஒன்றோடு ஒன்று முடிச்சு போட்டு விஸ்வரூபமாய் எழுந்து நிற்கின்றன. அதை நிவர்த்தி செய்வது என்பது எளிதான ஒன்று இல்லை என்பது மட்டும் புரிகின்றது.

மேலும் தொடர்ந்த எங்கள் உரையாடல் சீபுவின் எழில், அங்கு வாழும் மக்களும் அவர்களின் பொதுவான போக்கு, சாப்பாடு, சுற்றி பார்க்கும் தளங்கள் என பொதுவான அனுமானிப்பாக தொடர்ந்தது. அங்கு ஃபூச்சாவ் வழக்கு பேசும் சீன மக்கள் அதிகம் எனவும் சீன உணவுகள் தாராளமாக கிடைக்கும் எனவும் அவன் கூறினான். எனக்கு பரவாயில்லை. ஆனால் முஸ்லீம் ஆன என் தோழிகளுக்கு சாப்பாடு ஒரு பிரச்னையாக அமையும் அல்லவா. அதனால் ஹாலால் ஆன உணவு பகுதி உண்டா என கேட்டு தெரிந்து கொண்டேன். ஒரு வகையில் இது சீனருக்கு லேசான சர்ச்சைக்குறிய விஷயமாக அமைந்தாலும் ஒற்றுமை காக்கும் பாணி காரணமாக அவரவருக்குள்ளேயே போராட்டம் அடங்கி விடுகிறது. பேசி பேசி பசியே எடுத்து விட்டது. அங்கே பொந்தியானக் தாண்டி ஒரு ஓய்விடம் வந்தது. பஸ்ஸை அங்கே தான் நிறுத்தினர். அப்பகுதி கொஞ்சம் காடாக தெரிந்தது. ஆனாலும் அவ்வப்போது வெவ்வேறு பேருந்துகளும் அங்கு நிறுத்த படுவதால் இடம் பரபரப்பாகவே இருந்தது. அவ்விடத்தை ஹாலால் மற்றும் ஹாலால் அற்றது என இரு வேறாக பிரித்திருந்தனர். அங்குள்ளவர்கள் குறுக்கு மாராப்போடு தான் அமர்த்திருந்தனர். கழிவறை என முத்திரை குத்த பட்டிருந்த கொட்டகைக்கு முன் ஆண் பெண் பேதமின்றி புகைபிடிப்பதை பார்க்க முடிந்தது. ஆண் பெண்ணை போல நடந்து செல்வதையும் சாதாரணமாக பார்க்க முடிந்தது. இந்த ஹார்மோன் மாற்றத்தின் தாக்கம் இங்கு அதிகமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. எதனால் இப்படி என்பதை என்னால் சரியாக யூகிக்க முடியாவிட்டாலும் அதற்கு சுற்றுசூழலும் ஒரு காரணம் என்பது மட்டும் தெரிந்தது. இதைப்பற்றி வேறொறு முறை கூறுகிறேன். அவ்விடம் முற்றிலும் வசதியில்லாத ஓர் ஓய்வு இடம்.

சாப்பிட்டு விட்டு மீண்டும் பேருந்தில் அடைக்கலமானோம். இந்த முறை ரொம்ப பேச வில்லை. வயிறு நிரம்பியது தூக்கம் தானாக தழுவிக்கொண்டது. சீபு போய் சேரும் வரை நான் விழிக்கவில்லை. பக்கத்தில் இருந்தவன் பாய் கூட சொல்லாமல் போய் விட்டான். சீபு பேருந்து நிலையத்தை வந்தடைந்து ஒரு ப்ரேக் போட்டதும் தான் நான் விழித்து கொண்டேன்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வலவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768p>