முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 46
அக்டோபர் 2012

  அச்சில் ஏறாத உண்மைகள்... 2
இரா. சரவணதீர்த்தா
 
 
       

பதிவு:

வல்லினம் வகுப்புகள் 2 - 'மஹாத்மன் சிறுகதைகள் உலகத்தரமானவை'
தமிழவன்



கட்டுரை:

காலாவதியான இரசனையும் சினிமாவும்
கே. பாலமுருகன்

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
கே. எஸ். சுதாகர்

மதமாற்றத்தின் அரசியல்
கே. பாலமுருகன்

ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்
லதா



நேர்காணல்:

எனக்கு அறிவியல் பள்ளியில் இடம் இல்லை
ஸ்ரீ அறிவேஷ்

சிறுவர் இலக்கியம் உருவாக்கப்பட வேண்டும்
கே. பாலமுருகன்



சிறுவர் சிறுகதை:

ஓரம் போ
கே. பாலமுருகன்


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 5
அ. மார்க்ஸ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை
அ. பாண்டியன்

அச்சில் ஏறாத உண்மைகள்
இரா. சரவணதீர்த்தா

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்



கவிதை:

இரா. சரவண தீர்த்தா

சின்னப்பயல்

செ. சுஜாதா

ந. பெரியசாமி

துரோணா

நிருபர்களின் சுய சரிதம்

விடிந்தால் என்ன செய்தியோ என்று எதிர்பார்க்கும் தமிழ்ப் பத்திரிகைகளின் வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அனுப்பிய செய்தி வருமோ? வராதோ? அல்லது அமுக்கப்பட்டிருக்குமோ? என்று சுய வாழ்க்கையில் விடியலைக் கொண்டுவராத பத்திரிகையின் வளர்ச்சிக்காக உண்மையில் உழைக்கும் நிருபர்களின் சுய சரிதம் ஊமைக் கண்ட கனவாகவே இருந்து வருகிறது.

செல்லும் இடங்களில் (இந்தியர்கள் ஏற்பாடு செய்யும் பெரும்பாலான நிகழ்வுகளில் இந்த மரியாதையை எதிர்பார்க்க முடியாது) தனி வரவேற்பு, மந்திரிகளிடம் நேருக்கு நேர் பேசும் வாய்ப்ப்பு,போலிஸ் உயர் அதிகாரிகளோடு நெருங்கிய உறவு, ஐந்து நட்சத்திர ஓட்டலில் வயிறு நிறைய விருந்து என்று எத்தனைக் காலத்துக்குத்தான் நிருபர்களை இந்த மாயை ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறது? ஏமாற்றும் இந்த மாயையிலிருந்து நிருபர்களும் எப்பொழுதுதான் மீண்டு வரப் போகிறார்கள்?

காருக்கு ரோடேக்ஸ் எடுக்கணும், பெட்ரோல் ஊற்ற பணம் இல்லே,வீட்டுலே கரண்டு வெட்டிட்டான், தண்ணீ காசு கட்டல, காடி தாரேக்காரன் வருவது போல பிரம்மை, சுற்றி கடனை அடைக்க வட்டிக்காரனிடம் புதிய கடன், கிழிந்த காலுரை, மாற்றப்படாத அதே சிலுவார், கிழிந்த உள் சட்டை, உள் சிலுவார் என வறுமை நிறத்தை தனக்கு மட்டும் பூசிக்கொள்வது மட்டுமல்ல, இந்த வறுமையில் குடும்பத்தையும் வறுத்து எடுக்கும் நிருபர்களின் நிலைமைக்காகப் பேசுவதற்கு இதயம் உண்டா? ஊர் பிரச்சினைகளை வரிந்து கட்டி எழுதிக் கொண்டு வரும் நிருபர்களுக்காக எழுதுவதற்கு பத்திரிகையில் இடம் உண்டா? சாவு விளம்பரத்தில் மட்டும் இறந்த நிருபர்களுக்குக் கருணை காட்டுவதாகக் காட்டிக் கொள்ளும் பத்திரிகை நிர்வாகம் அவர்கள் வாழ்வதற்கு கருணை காட்டியுள்ளதா?

தன்னம்பிக்கை அற்ற நிலையில், முகத்தில் ஏதோ கவலை குடிகொண்ட பாவனையில், பம்மி பம்மி பிரமுகர்களின் முன் நின்று செய்தியைச் சேகரிக்கும் தமிழ்ப் பத்திரிகை நிருபர்களையும், புகைப்படக்காரர்களையும் பிற மொழிப் பத்திரிகை நிருபர்களோடும் அல்லது புகைப்படக்காரர்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பிற மொழி பத்திரிக்கை தங்களின் நிருபர்களை அவர்களின் அடையாளங்களாகக் கருதுவதால் பணி சம்பந்தப்பட்ட, நிருபர்களுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளும் அவர்களின் நிறுவனத்தாரால் பூர்த்தி செய்து கொடுக்கப்படுகிறது என்பதைக் காணலாம்.

தமிழ் பத்திரிகை நிறுவனம் பொறுத்தவரை "நீ கூலி, நான் முதலாளி" என்ற தோரணையில்தான் நிருபர்கள் நடத்தப்படுகின்றனர். உண்மையிலேயே அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்திருந்தால், ஒவ்வொரு நிருபரின் அடிப்படைப் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.

ஆனால் இன்றைய நிலைமை அதுவல்ல. சில நிருபர்களின் வாழ்க்கை செல்வச் செழிப்பாக இருப்பதற்கு அவர்களின் "கெட்டிக்காரத்தன்மை" காரணமாக இருக்கலாம்.. ஆனால் இவர்களைப்போல் எத்தனை நிருபர்களுக்கு கெட்டிக்காரத்தனத்தின் சூட்சுமம் தெரிந்திருக்கும்? அல்லது அந்தச் சிலரைப்போல் சந்தர்ப்பவாதிகளாக வாழ விரும்பாத நிருபர்களின் உரிமையைக் காக்க எவ்வழியில் குரல் கொடுப்பது?

தமிழ்ப் பத்திரிகை நிருபர்கள் உடுத்தும் உடைகளும், வேலைக்குப் பயன்படுத்தும் கருவிகளும் பணிக்கு ஏதுவானதற்ற நிலையிலும், பின்னடைவான தொழில் நுட்பத்தோடும், பலவேளைகளில் கோர்ட் சூட் வாங்கக் கூட வக்கில்லாத சூழ்நிலையில் ஆட்சிக்குழு அமர்வு கூட்டத்திலோ அல்லது உடை கோட்பாடு கொண்ட அரசாங்க நிகழ்வுகளிலோ கலந்து கொள்ள இயலாமலும் நிருபர்கள் "நிராயுதபாணியாக" வாசலுக்கு வெளியே நின்று நிகழ்ச்சி முடியும் வரை காத்துக் கொண்டிருக்கும் மானங்கெட்ட பிழைப்பையும் நடத்த வேண்டியக் கட்டாயத்துக்கும் கட்டுப் பட்டு பணிபுரிய வேண்டியுள்ளது.

"வொர்க் ஸ்மார்ட்" என்று கூறிக்கொண்டு, வீட்டுக்கு வெளியே தலையைக் காட்டாத காப்பி அடிக்கும் நிருபர்களுக்கு இந்த சூழ்நிலை சுமையாவதில்லை. ஆனால் அவர்களின் இந்த நடவடிக்கையினால் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகள் முடங்கிப் போய்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் அறியாமல் இருக்கலாம். இந்த அறியாமைக்கு யார் காரணம்? அறிந்தும் அறியாமல் பத்திரிகை விற்பனையில் மட்டுமே கவனம் செலுத்தும் பத்திரிகை நிர்வாகமே காரணம்.

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட காமிராக்கள், மடி கணினிகள், அகன்ற அலைவரிசை தொழில் நுட்பம், அனைத்து வசதிகள் அடங்கிய அலுவலகம், கம்பெனி கார், போனஸ், மருத்துவச் சலுகை, வாரம் ஒரு முறை விடுமுறை, வட்டாரத்திற்கு ஒரு நிருபர், அவர்களை கண்காணிக்க மாநிலத் தலைமை நிருபர், கூட்டி கழித்துப் பார்த்தாலும் 2500 வெள்ளிக்குக் குறையாத மாதச் சம்பளம் என்று ஏகப்பட்ட சலுகைகளின் சந்தோசங்கள் பிற மொழிப் பத்திரிகை நிருபர்களின் முகத்தில் இழையோடுவதைக் காண முடியும்.

காமிரா வாங்கியதால், வீட்டுத் தேவைக்கு கை நீட்டியதால், அலுவலகத்திற்கு கணினியும், தொலை நகலும் தேவைப்பட்டதால், அனைத்தையும் வாங்கிக் கொடுத்த நிறுவனம், நிருபர்களின் மாதச் சம்பளத்தில் கத்தரிக்கோலை வைக்கும் பொழுது கடன் முடியும் வரை வாயையும் வயிற்றையும் தைத்துக் கொண்டு குடும்பம் நடத்தவேண்டிய சூழ்நிலை நம் நிருபர்களுக்கு.

"மலாய், சீனம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் பத்திரிக்கைகளுக்கு விளம்பரங்கள் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. தமிழ் பத்திரிகைகளுக்கு அதுபோன்ற விளம்பர வாய்ப்புகள் குறைவு. தமிழ் பத்திரிகைகளை வாங்கிப் படிக்கும் வாசகர்களும் குறைவு. பத்திரிகை நட்டத்தில் ஓடுகிறது. விளம்பரத்தை தேடுங்கள் நீங்களும் கூடுதலாகப் பணம் பார்க்கலாம்" என்று பல நூற்றாண்டுகளாகக் கூறிவரும் பதிலையே நிருபர்களின் நெத்தியில் பச்சைக் குத்திக் கொண்டிருக்கிறது பத்திரிகை நிர்வாகம்.

நிருபர்கள் கூட்டங்களில் (அரசியல் கட்சி கூட்டம்போல் நடக்கும்) செலவுகளையே காட்டி நிருபர்களின் வாயையும் கண்ணையும் கட்டிப்போட்டு விடும் நிர்வாகத்தினர், பிற பத்திரிகை நிர்வாக முறையையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். பிற மொழிப் பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் அதிகமென்றோ, வாசகர்களின் எண்ணிக்கை அதிகமென்றோ கூறி, சம்பள உயர்வு மற்றும் இதரப் பணிச் செலவுகளைப் பிச்சை கேட்பதுபோல் நிறுவனத்திடம் கேட்க வரும் நிருபர்களுக்கு கல்தா கொடுப்பதை ஜீரணித்துக் கொண்டு வீடு திரும்பும் தொலை தூர நிருபர்கள் பஸ் பிடித்துதான் வீடு செல்ல வேண்டிய நிலைமை. ஆனால் நிருபர்களிடம் நட்டக் கணக்கைக் காண்பித்த கூட்டம் பட்டத்து அரசன் போல சொகுசு காரில் ஏறி செல்லுவதை நின்று வேடிக்கைப் பார்த்து, அவர்களுக்கு டாட்டா காண்பிப்பதில் அளப்பரிய ஆனந்தத்தை அடையும் ஏமாளி கூட்டமாகத்தான் தமிழ் பத்திரிகை நிருபர்களின் எதார்த்தம்.

மில்லியன் தொகையில் பங்களா, குடும்பமே மாறி மாறி ஏறிச் செல்ல வகை வகையான கார்கள், வெளிநாட்டில் பயிலும் பிள்ளைகளைக் காண, பக்கத்து ஊரில் இருப்பதைப்போல.

நினைத்தால் விமானப் பயணம், காசோலையில் கையெழுத்து இடுவதற்கு மட்டும் பயன்படும் பலநூறு வெள்ளிப் பேனா. நான்தான் முதலாளி எனும் அடையாளத்தை வெளிக்கொணர, உயர்ந்த ரக தொழில் நுட்பத் தொடர்புச் சாதனங்கள், வாயில் நுழையாத "பிரேண்டட்" கை கடிகாரங்கள், பள பளக்கும் ஆடைகள், என்று பல "உயர்ந்த சாதி" கம கமப்புகள் நட்டக் கணக்கைக் காட்டும் நிர்வாகத்திடமிருந்து நிருபர்கள் முகர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் இதுவரையிலும் யாரும் அந்த நட்டக் கணக்கை அறிக்கையின் வழி கண்டதே இல்லை. ஒரு சமயம் நிருபர்களிடம் அதனைக் காட்ட அவசியம் இல்லை என்றும் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்.

"இஷ்டமிருந்தால் வேலை செய்யுங்கள். இல்லையென்றால் கிளம்புங்கள்" என்று கேள்வி எழுப்பும் நிருபர்களை யூதர்களைச் சுட்ட ஹிட்லரைபோல் நிர்வாகம் சுட்டுத் தள்ளலாம். ஆனால் நாடே இல்லாமல் பிரிந்து கிடந்த யூதர்கள் ஒன்று பட்டதனால் இஸ்ரேல் என்ற மிகச் சிறிய நாட்டில் இருந்து கொண்டு இன்று உலகையே ஆட்டிப், படைக்கும் யூதர்கள், உலகமே அஞ்சும் இனமாக மறு அவதாரம் எடுத்துள்ளனர் என்பதை நிருபர்கள் உணர்வார்களேயானால். நாம் ஒரு குடையின் கீழ் ஒன்றுபடும் அவசியத்தையும் அறிந்திருப்பர்.

நிருபர் என்பது நமக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கான பதவி, பத்திரிகை என்பது நமது நிறுவனம், ஆசிரியர் நமது பணியின் கேப்டன் என்று உணர்ந்தாலே போதும் நாம் தமிழ்ப் பத்திரிகை முதலாளிகளின் பிரித்தாளும் கொள்கையிலிருந்து சிக்காமல் பணியைச் செய்யலாம். ஐந்துக்கும் பத்துக்கும் பல்லை இளித்துக் கொண்டும், பிறர் கால்களை நக்கிக் கொண்டும் பிழைப்பை ஓட்டிவிடலாம் என்று மறுத்துப் போன நிருபர்களாக இருப்போமானால், பார்க்கவே முடியாத கறுப்புக் கண்ணாடி போட்டிருக்கும் சொகுசுக் காருக்குள் அமர்ந்திருக்கும் முதலாளிக்கு டாட்டா காட்டும் வர்க்கமாகத்தான் வாலாட்டி சாகவேண்டிய நிருபராகத்தான் சிதைய வேண்டியிருக்கும். இதுமட்டுமல்ல நாம் வாழும் சுற்றுப் புற மக்களுக்கும் நமது உறவினர்களுக்கும் நம் வாழ்க்கை அவர்கள் வாசிக்கும் தலைப்புச் செய்தியாகத் தினமும் பேசப்படும்.

ஆகவே மனித வள விதிமுறைகளுக்கு தமிழ்ப் பத்திரிகை நிறுவனங்கள் கட்டுப்பட்டு, தொழிலாளிகளான நிருபர்களுக்குச் சேர வேண்டிய அடிப்படைச் சம்பளத்தையும், சலுகைகளையும், ஊக்கத் தொகைகளையும் வழங்கி அவர்களின் நலத்திலும் அக்கறை செலுத்துவார்களேயானால் "நமது இனம் நமது மொழி" என்று போராடும் தமிழ்ப் பத்திரிகையின் போராட்டத்தில் ஞாயம் இருக்கும்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768