கட்டுரை
ஈழநாதன் – சில நினைவுகள்
எம்.கே.குமார்
ஷோபாசக்தியின் முகநூலில் அப்போதுதான் வந்திருந்த அந்தச் செய்தி பேரதிர்ச்சியாய் எனக்குள் இறங்கியது. ஈழநாதன் சிங்கப்பூரில்தான் இத்தனை வருடங்கள் இருந்தார் என்பதுகூடத் தெரியாது. அவரைக் கடைசியாய் பார்த்து ஐந்து வருடங்கள் இருக்கும். இம்முறை அவரை நான் பார்த்தபோது பொது பிரேதங்களுக்கான அறையொன்றில் படுத்திருந்தார். துர்நாற்றம் தொடங்கியிருந்தது...
சிறுகதை
நாளைக்கு இறந்தவன்
வெ. சந்திரமோகன்
சிலரைப் பார்க்கையில் அவர்கள் ஏதோ ஒருவகையில்
தற்காலிகமானவர்கள் என்ற கணிப்பு வரத் தொடங்கியபோது ரமணனுக்கு
பதிமூன்று வயது தான் ஆகியிருந்தது. தற்காலிகம் என்றால்
வாழ்க்கையிலா, படிப்பிலா வேலையிலா என்று உறுதியாக அவனுக்குத்
தெரியவில்லை. வெற்றியடைந்தவர்கள் தோல்வியடைந்தவர்கள் என்ற
வித்தியாசமும் இல்லை. நண்பர்கள் தெரிந்தவர்கள் உறவினர்களில் யாரைப்
பற்றியேனும் திடீரென்று இந்த நினைப்பு வரும். எதிர்பாராமல் ஏதாவது
ஒரு கட்டத்தில் அவர்களுடனான தொடர்பு என்பதே சுத்தமாக இல்லாதபடி
ஏதாவது நடக்கும்...
பதிவு
தேவதைகளின் காகிதக் கப்பல் நூல் வெளியீட்டு விழா
கடந்த 07.10.2012 ஆம் நாள் சுங்கை பட்டாணியில் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவில் மலேசியாவின் முதல் சிறுவர் சிறுகதை நூலான ‘தேவதைகளின் காகிதக் கப்பல்’ சிறப்பான முறையில் வெளியீடு கண்டது. கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் உயர்திரு. இராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு வருகையளித்து நூலை வெளியீடு செய்தார்...
சிறுவர் சிறுகதை
அல்ட்ராமேன் சைக்கிள்
கே. பாலமுருகன்
சன்னலுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளை வெகுநேரம் கதவை உரசிக் கொண்டிருந்தது. முகிலன் மெல்ல கண்களைத் திறந்தான். சன்னல் கதவின் சிறு துளையிலிருந்து உள்ளே நுழைந்த ஒளி அவன் முகத்தில் படர்ந்தது...
|