|
கட்டுரை
கலை என்பது...
ம. நவீன்
மொழி சிக்கல் இல்லாமல் அனைவருக்கும் புரியும் கலை வடிவங்கள் குறித்து யோசித்தபோது ஸ்டார் கணேசன் நினைவுக்கு வந்தார். புகைப்படத்துறையில் உலகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்தவர். வாழும் வரை தமிழ்ச் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். குறிப்பாக விளம்பரங்களைத் தேடாதவர். புகைப்படம் குறித்த ஒரு பட்டறைய அக்கல்லூரியில் ஏற்பாடு செய்யலாமா எனக்கேட்டபோது உடனே சம்மதித்தார்...
இரண்டாம் வாய்ப்பு...
ம. நவீன்
மருத்துவர் மா.சண்முகசிவா பலமுறை என்னிடம் இக்கல்லூரி குறித்து கூறியதுண்டு. 'சிறைச்சாலைக்குச் செல்ல இருப்பவர்களைத் தொழிற்சாலைக்கு அனுப்பும் முயற்சியாக இதைச் செய்கிறோம்' என்பார். பூச்சோங்கிலிருந்து அண்மையில் கிள்ளான் நகரில் புதிதாக இடம் மாற்றம் செய்த இக்கல்லூரியின் திறப்புவிழாவிற்குச் சென்ற போதுதான் அவர் சொன்ன சொற்களின் ஆழம் புரிந்தது. சட்டென ஒரு குற்ற உணர்ச்சி தொற்றிக்கொண்டது...
சாரு நிவேதிதா மலேசிய வருகை குறித்தான பதிவு
ஜெயமோகன் என் எழுத்தைப் பாராட்டினால்தான் ஆபத்து - சாரு நிவேதிதா
தயாஜி
தொடக்கத்தில் சாருவை சந்திக்கப் போகிறோம் என்ற ஆர்வமே சாருவை சந்தித்தால் என்னவெல்லாம் செய்யலாம் என ஒவ்வொரு யோசனையாக கொடுத்துக் கொண்டிருந்தது. கையைக் கொடுக்கலாம். கட்டிப் பிடிக்கலாம். கையைக் குலுக்கி முத்தமிடலாம். இப்படியாக பல யோசனைகள். ஏற்கனவே நவீன் அறிமுகம் செய்து வைத்த அவரது ஒரு நாவலுக்குப் பிறகு எக்ஸைல் நாவலைத் தவிர மற்ற நாவல்களைப் படித்திருந்தேன்...
சாரு நிவேதிதாவின் மலேசிய வருகை
கே. பாலமுருகன்
கடந்த 15ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை எழுத்தாளர் சாரு நிவேதிதா மலேசியாவிற்கு வருகையளித்திருந்தார். மலேசியாவில் பல இடங்கள் சுற்றிப் பார்த்தார். இரண்டு இலக்கியச் சந்திப்புகளில் கலந்து கொண்டதோடு இங்கிருந்த நாட்கள்வரை இலக்கியம், சினிமா, ஆன்மீகம், சமூகம் எனப் பல விசயங்களை நண்பர்களுடன் எழுத்தாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அவரைக் கெடா மாநிலம் வரவழைத்து இங்குள்ள வரலாற்றுமிக்க இடங்களைக் காண்பிக்க எண்ணம் கொண்டிருந்தேன்...
எதிர்வினை
எம்.கே.குமாரின் கற்பனை கட்டுரை
லதா
வல்லினம் நவம்பர் 2012 இதழில் வெளிவந்திருந்த எம்.கே. குமாரின் ‘ஈழநாதன் - சில நினைவுகள்’ கட்டுரை மிகுந்த மனவேதனையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.
சாதாரணமாகவே, இல்லாமல் போய் விட்ட ஒரு மனிதரைப் பற்றி மனதில் தோன்றியபடி எழுதுவது மிகத் தவறு. இதில், எவர் மனதையும் நோகச் செய்ய விரும்பாத ஈழநாதனைப் பற்றி, பலரும் அறிந்திருக்கும் ஈழநாதனைப் பற்றி இப்படி ஒரு கட்டுரையை 'வல்லினம்' எப்படிப் பிரசுரித்தது எனத் தெரியவில்லை...
|
|
சிறுகதை
நொண்டி
ம. நவீன்
இந்தக் கடலோரம் நடப்பது மட்டுமே சேதுவுக்கு அதிகம் பின் விளைவுகளை ஏற்படுத்தாது. திருமணமாகாத இந்த நாற்பதாவது வயதில் புதர்களுக்குள் முயங்கிக் கிடக்கும் இரு தேகங்களை நேர் காட்சியில் பார்ப்பதென்பதும் சூரிய குளியலுக்காகக் காத்திருக்கும் எண்ணெய் பிசுபிசுத்த பெண் உடல்களை கடப்பதென்பதும் அவரை தனது இரு காதலிகளையும் தொடர்புகொள்ளச் செய்யலாம். காதலிகள் அந்நேரத்தில் தனிமையில் இருந்தால் உரையாடல் மூலமாகவே உச்சத்தை அடைந்துவிடுவார்...
கவிதை
வல்லினம் வகுப்புகள் - 3
வல்லினம் வகுப்புகள் - 3 மற்றும் ஆதவன் தீட்சண்யாவின் உரை
வல்லினம் ஒவ்வொரு தலைப்புகளில் தொடர்ந்து வகுப்புகளை
நடத்திவருவதை அறிவீர்கள். அவ்வகையில் ஜனவரி 19 மற்றும் 20 ஆம்
திகதி எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் வழிக்காட்டலில்
கீழ்க்கண்ட தலைப்புகளில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோட்பாடுகள் சார்ந்து இல்லாமல் இம்முறை படைப்பிலக்கியம் சார்ந்த
பகிர்வாக இந்நிகழ்வு அமையும்...
|
|