முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  கவிதை  
  - செந்தில் குமரன் முனியாண்டி -  
 
 
 

ஞானம்

உடல் எங்கும் ரத்தவாடை
குருதியில் குளித்திருக்கிறது மேனி

இதுவரை எப்படி சுவாசித்தேன் என்பதை
இன்று முதல் மறக்கவேண்டும்

ஏதோ புது வெளிச்சம்

உணவு ஊட்டம் உயிர் மயிர் அனைத்தும்
கொடுத்தத்
தொப்புள்கொடி என்னைவிட்டு
எங்கோ செல்கிறது ஆழமாய்

இப்போது நான் முட்டி மோதவேண்டும்
கருவறை வாசலை
நானே கிழிக்கவேண்டும்
இல்லையேல்
இன்னொரு கத்தி வரும்

வாசலை சற்று அகல விரிக்க
அழுக்கு ரத்தம்
துர்நாற்றம்
துரோகம்
கத்தி
அனைத்தும் பார்த்து எப்படியோ
தலைக்குப்புற வந்து விழுந்து விட்டேன்

இனி நான் ஆவேனா
ஞானி...

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768