முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  அறிவிப்பு  
வல்லினம் வகுப்புகள் - 3 மற்றும் ஆதவன் தீட்சண்யாவின் உரை
 
 
 

வல்லினம் ஒவ்வொரு தலைப்புகளில் தொடர்ந்து வகுப்புகளை நடத்திவருவதை அறிவீர்கள். அவ்வகையில் ஜனவரி 19 மற்றும் 20 ஆம் திகதி எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் வழிக்காட்டலில் கீழ்க்கண்ட தலைப்புகளில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோட்பாடுகள் சார்ந்து இல்லாமல் இம்முறை படைப்பிலக்கியம் சார்ந்த பகிர்வாக இந்நிகழ்வு அமையும். 50 பேருக்கு மட்டுமே வாய்ப்பு என்பதால் அவ்விடங்கள் நிறைவு பெற்றுவிட்டன. ஆதவன் தீட்சண்யா கீழ்கண்ட தலைப்புகளில் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடுவார்.

தலைப்பு 1 - புனைவின் கதை

இயற்கையை, சக மனிதர்களை, மற்ற மற்ற உயிர்களை விளங்கிக்கொள்ளும் தொடக்ககால மனிதர்களின் முயற்சி / அறிந்ததிலிருந்து அறியமுடியாதவற்றை புனைவாக - ஓவியமாக கதையாக பாட்டாக மாற்றிய வரலாறு - கலை இலக்கியத்தின் தோற்றத்திற்கான பின்புலம் / தேவை.

தலைப்பு 2 - எழுதியேதான் ஆகணுமா? / ஏன் எழுத வேண்டும்?

எழுத்தாகவோ வாய்மொழியாகவோ நிகழ்த்துக்கலையாகவோ தனக்குள்ள கருத்தை வெளிப்படுத்துவதன் தேவையை உணர்த்துவது, வெளிப்படுத்துவதில் உள்ள மனத்தடைகளை களைவது.

தலைப்பு 3 - இந்திய மனம்

இந்திய நிலப்பரப்பிலும் புலம் பெயர்ந்தும் வாழ்கிறவர்களின் மனதை கட்டமைத்திருக்கிற சாதியின் தோற்றம் வளர்ச்சி இன்றைய நிலை பற்றிய அறிமுகம்.

தலைப்பு 4 - சிந்தனை, மொழி, எழுத்து

இந்துமதத்தின் கருத்தியல் செல்வாக்கில் திளைக்கும் மனம், எழுதுவதற்கு தேர்வு செய்யும் பொருள், அதற்குரிய மொழி, சார்பு நிலை, மதிப்பீடுகள் மற்றும் தலித் / பெண் எழுத்து.

தலைப்பு 5 - கதை / கவிதை ஒன்றை கூட்டாக வாசிப்பது / விவாதிப்பது


ஆதவன் தீட்சண்யாவின் உரை (பொதுநிகழ்வு)

நாள் : 20.01.2012 (ஞாயிறு)
நேரம் : 2 மணிக்கு
இடம் : கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி (ம.இ.கா கட்டடம் எதிர்ப்புறம்)

நுழைவு இலவசம். கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்வது அவசியம்.

அனைத்து தொடர்புக்கும் : ம. நவீன் 016-3194522

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768