முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  எதிர்வினை  
 
 
 

அன்பின் வல்லினம் ஆசிரியர்களுக்கு,

கவிஞர் பா.அ.சிவத்தின் மறைவு அதிர்ச்சியைத் தந்தது.

அவர் குறித்து நவீனும், பாலமுருகனும் எழுதியிருப்பதை வாசித்தேன். மனம் கனத்துப் போனது. கருத்துக்களால் வேறுபட்டாலும் நட்புக்கு கனம் கொடுத்திருக்கும் நண்பர்கள் நீங்கள்.
ஒரு படைப்பாளியின் மறைவு ஈடுசெய்ய முடியாதது - அதுவும் பிரபலத்தை விரும்பாத - படைப்பாளிகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

நீங்கள் அவரது கவிதைகளின் தொகுப்பை கொண்டு வருவதாக வல்லினத்தில் எழுதியிருக்கிறீர்கள். சிவத்தின் கவிதைகள் பலவற்றை வல்லினத்தின் முன் பக்கத்தில் வாசகர்களுக்காக போட்டிருப்பதற்கு பூங்குழலிக்கும், உங்களுக்கும் நன்றிகள்.

மிக்க அன்புடன்
ஆழியாள்


அ.மார்க்ஸ் அவர்களின் தொடர் நின்று போனதில் வருத்தம். இப்படித் திடீர் திடீரென தொடர்கள் நின்று போவதின் அர்த்தம் என்ன? அகிலனின் கட்டுரை அருமை. கடிதம் பகுதியை தொடர்ந்து இடம்பெற செய்ய வேண்டும்.

செண்பகவள்ளி, மலேசியா

விரைவில் அ.மார்க்ஸ் அவர்களில் தொடர் தொடரும் - ஆர்


முத்துகிருஷ்ணன் அவர்களின் தொடர் வல்லினத்தில் இடம்பெருவது மிகப் பயனானது. ஏற்கனவே அவரது கட்டுரைகளையும் இணையம் தொடர்பான பதில்களையும் வாசித்துள்ளேன். இணைய இதழான வல்லினத்தில் அது இடம்பெறும்போது மேலும் சிறப்பாக பயன் தருகிறது. அவருக்கு வாழ்த்துகள்.

புனிதா, பினாங்கு


அகிலனின் கட்டுரை இசையை கேட்காமலேயே பலவற்றையும் புரிய வைத்தது. அவர் தொடர்ந்து எழுதினால் என்னைப் போன்ற வாசகர்களுக்குப் பயனாக இருக்கும். அ.மார்க்ஸின் கட்டுரை பிரமாதம்.

வதனமுல்லை, அதிஷா - தமிழ்நாடு


சரவண தீர்ந்தா சொல்வது முற்றிலும் சரி. தினக்குரலில் பி.ஆர் ராஜன் போன்றவர்கள் சமுதாயத்துக்கு உழைப்பது போல பம்மாத்து காட்டுகிறார்கள். உண்மையில் அவர்கள் தங்களுக்காகவே போராட முடியாத அப்பாவிகள். இவர்கள் போராட்ட முகமெல்லாம் வேறொரு லாபத்துக்கான விசிடிங் கார்ட்.

கண்ணன், தலைநகர்


மார்ச்சில் இடம்பெற்ற எம்.ஏ.நுஃமானின் கட்டுரை அருமை. அவர் தொடர்ந்து எழுதுவது வல்லினத்துக்கும் எங்களைப் போன்ற வாசகர்களுக்கும் மிக உதவியாக இருக்கும். நன்றி. அவர் இலங்கையின் இலக்கியம் குறித்து அதிகமாக எழுத வேண்டும். அ.மார்க்ஸ் தொடர் எழுதாமல் வேறொரு தலைப்பில் கட்டுரை எழுதியது ஏமாற்றத்தைக் கொடுத்தது. அதே போல சிங்கை இளங்கோவம் பதில்களும்.

மொக்தார் - இலங்கை

அ.மார்க்ஸ் விரைவில் தொடரை தொடங்குவார். - ஆர்


கா. பாக்கியம் போன்றவர்களை நீங்கள் கருத வேண்டியதில்லை. அவர் போன்றவர்கள் இப்படித்தான் இலக்கியத்தை வைத்து அரசியல் செய்துகொண்டிருப்பார்கள். நீங்கள் இவர்களிடம் பேசி நேரத்தை வீணடிப்பது வீண். சிவத்தின் கவிதைகள் நெகிழ வைத்தன. அ.பாண்டியன் பணி முக்கியமானது.

அருண், கிள்ளான்


முத்துகிருஷ்ணனின் தொடர் சூப்பராக உள்ளது. என்னைப் போன்ற மாணவர்களுக்கு பயனான கட்டுரை. சரவணதீர்த்தா கட்டுரை எல்லா நாடுகளுக்கும் ஒத்துப்போகும் போல. அ.மார்க்ஸ் மீண்டும் தொடரை தொடங்க வேண்டும்.

வசந்தன்

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768