|
1.
இரு வழியில்
பச்சை மரங்கள் , செடி கொடிகள்
சற்று உயரத்தில்
பறக்கும் பறவைகள்
கண் முன்னே விரியும்
அகண்ட வெளி
என்னை
மகிழ்விக்கும் காற்று
முந்திச்செல்லும் மேகம்
பகலில் வட்டமிடும் சூரியன்
இரவில் நிலா
என்றும் விரிந்தே
செல்லும் வானம்
என்
இலக்கற்ற
நெடுந்தூர பயணம்
உன் பார்வையில்
உன் அரவணைப்பில்
உன்னைச் சுற்றியே நிகழ்கிறது
2.
என்னைக் கடைகிறேன்
முதலில் அமிர்தம்
பின்பே ஆலகால விஷம்
உணர்ந்து பருகுகையில்
அமிர்தத்தில் சுவையில்லை
3.
இருவழிச் சாலையில்
ஆங்காங்கே
மேடுகளும்,பள்ளங்களும்
இரைச்சலான
மோட்டார்ச் சத்தங்களுடன்
ஆர்ப்பாட்டமான
கூச்சல்கள்
எல்லையில்லா வானத்தில்
ஒர்
வெள்ளைப் பறவை
நேர் கொண்ட பார்வையில்
சத்தமில்லாமல் கடக்கிறது
|
|