வல்லினத்தில் தேடுதல்
எழுத்துரு உதவி / Tamil Font Help
கவிதை
மனஹரன் கவிதைகள்
விதைக்குழிக்குலிருந்து... விடைகொடு முதல் விரல் தொடுதலில் குருதிக்குள் மின்னல் பாய்ந்தது மென்மையான இதழ் விரித்து முனகலில் மிறு இதழ் தேடி புதியதாய் இன்னொரு மின்னல் பாய்ந்தது உன் விழிமொழியின் சின்ன அசைவில் சிதைந்து போனவன் நான் வா உன்னுள் ஐக்கியமான என்னை விடுவித்துக் கொள்ள இன்னொரு வாய்ப்புக்கொடு மீண்டுமொரு துவக்கத்தில் புதியதொரு மின்னலில் நான் தொலைந்து போகவேண்டும் செவிமுடி நீக்கி மெல்லிய நரம்பின் ஒத்தடம் கொடுக்க நீளுகிற நாவின் சுடுதிரவத்தினை துடைத்துவிட பாயும் விரலினைப்பிடித்து விடியும் வரை மௌனம் காப்பேன் நீயோ முனகலுக்குள் மூழ்கிக்கொண்டு பார்வையோடு வருவாய் மீண்டும் மீண்டும் வருவாய் விழிமீறல் எனக்குத்தெரியாமலே உனிதயத்தை வருடிய மெய்க்காற்று எனது மூச்சுதானெனப்பாடிய உன்னையும் நேச வத்தியேந்திவரும் உனது மென்கரஸ்பரிசத்தையும் எப்படித்தான் தூர விரட்டுவேனோ? நேர்வெம்மையில் முகங்கறுக்கும் அனலுக்குள் மெல்லிய கீறலாய் அகத்தையும் மறந்து புன்னகை கயிற்றை வீசிச் செல்லுமுன் உடம்பின் நரம்பினுள் சிக்கியிருந்தவனுக்கும் அதிராமல் அலையவிட்ட சீறும்பார்வையை விதைக்காமல் அள்ளிச்சென்றதும் செம்மண்வாசத்தையும் வளியையும் விலகிச் செல்லவிடாமல் இறுக்கமாய் சிக்கவைத்த சாட்சிப் பொருள்களாய் உடைந்து தெரிக்கும் எச்சில் துளிகளைச் சேகரிக்கும் உன் தேக உறுப்புகள் சிலிர்ப்புக்குள் தேடி வைத்துக்கொள்ளும் இமைச்சிப்பிக்குள் சவம்கொண்ட நீர்த்திவளைகளை நகக்கண்ணால் கிள்ளியெடுக்கும் விடுபட்ட இடைவெளிக்குள் புன்னகை விடைபிளந்து கொடுக்கும் ஒழுகிவிடும் உயிரீரத்தின் விம்மிவிடும் சப்த நோவுகளில் சிறைபட்ட கனவாய் முடிச்சவிழ்த்த விம்மலாய் ஓரோரத்தில் மௌனங்கொண்டு காத்திருக்கும்.
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature © vallinam.com.my | All Rights Reserved. 2009. | Designed by CVA | Best View in : Mozilla Firefox | Best resolution : 1024 X 768