இதழ் 9
செப்டம்பர் 2009
  HOW TO FIGHT BACK
சேனன்
 
     
  பத்தி:

சை. பீர் என்ற......

யுவ‌ராஜ‌ன்

சிற்றிதழ்களும் தெருநாய்களும்
சிவா பெரியண்ணன்


நிறைய‌ க‌ண்க‌ளுட‌ன் ஒருவ‌ன்...
வீ.அ. ம‌ணிமொழி

பியானிஸ்ட் (The Pianist) – அடையாளம் கடந்த நேயம்
யுவ‌ராஜ‌ன் 

வசூல்
சீ. முத்துசாமி 


கட்டுரை:

HOW TO FIGHT BACK
சேனன்

ஒரு டோடோ பறவையின் வரலாறு
சித்ரா ர‌மேஸ்

உலகின் இறுதி நாள் 21-12-2012 - மாயன்கள் உறுதி!
விக்னேஷ்வரன் அடைக்கலம்


சிறுகதை:

ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள்
முனிஸ்வரன்


தூரத்தே தெரியும் வான் விளிம்பு
ஜெயந்தி சங்கர்


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...2
"மலேசியத் தரகர்கள்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...2
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...2
இளைய அப்துல்லாஹ்


லும்ப‌ன் ப‌க்க‌ம்:

ஏய் ட‌ண்ட‌ன‌க்கா... ஏய் ட‌ன‌க்க‌ண‌க்கா


கவிதை:

தர்மினி


சந்துரு

லதா

தினேசுவரி

யோகி


தோழி

ரேணுகா

இளங்கோவன்
 
     
     
 

ஒடுக்கப்படும் மக்களுக்கு மார்க்சியத்தின் வழி போராடுவதை தவிர வேறு வழியில்லை என்று சுருக்கமாக சொல்லிவிட்டு போய்விடலாம்தானே பிறகேன் நீண்ட வியாக்கியானம் என்று நண்பர் ஒருவர் கேட்கின்றார். இந்தச் சுருக்கல் மார்க்சியம் பற்றிய சந்தேகங்களில் இருந்து –அவநம்பிக்கையில் இருந்து பிறக்கிறது. மார்க்சியம் வழிகாட்டித் தத்துவம் அல்ல மாறாக அது சமூக விஞ்ஞானம்.

எம் கண்முன்னால் விரியும் ஏற்றத்தாழ்வுகள் அநியாயங்களைப் புரிந்து கொண்டு அதை மாற்றி அனைவருக்கும் உகந்த சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்று ஆழமாக சிந்திக்க முயல்பவர்கள் சமூக உறவுகளை உற்று நோக்கி சில முடிபுகளுக்கு வருகிறார்கள். அந்த முடிவுகள் அவர்களை மார்க்சியத்தை நோக்கி தள்ளுகிறது. ஏனெனில் மார்க்சியம் மார்க்சிய அடிப்படைப் புரிதல்கள் சமூகம் பற்றிய ஆழமான அறிதலுக்கான அற்புதமான உபகரணமாக இருக்கிறது. மார்க்சியத்துக்கு நிகரான சமூகஞ்சார் விஞ்ஞானம் வேறெதுவும் கிடையாது என்று துணிந்து சொல்லலாம். இருப்பினும் சில வலதுசாரிக் கல்வியாளர்கள் இதை மறுத்து முதலாளித்துவப் பொருளாதார அடிப்படையை நியாயப்படுத்தும் தத்துவங்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். அவர்களுக்குப் பின்னியங்கும் அதிகார ஆதரவுப்பண்பைப் புரிந்து கொள்வது இலகுவானது.

ஆனால் சிலர் சமூக விஞ்ஞானம் என்ற பெயரில் சில குறுகிய தத்துவார்த்த வழிமுறைகளைச் சுட்டுகிறார்கள். அதாவது சமுகம் பற்றிய கணித மாடல்கள் மற்றும் உணர்தல் இயல்புகள் சார்ந்து வரையறைகளை உருவாக்குவதன் மூலம் சமூகத்தைப் புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள். இதிற் தவறில்லை. மிகச்சிக்கலான உறவுகளால் கட்டமைக்கப்படும் சமூகம் பற்றிய புரிதலுக்கு மரபு விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் இவர்களின் அரசியற் பின்னணி அவர்கள் வாதங்களில் பிணைந்து அதிகாரத்திற்கு சேவகம் செய்வதைப் பல சந்தர்ப்பங்களில் நாம் அவதானிக்கலாம். மரபு (பௌதிகவியல் அல்லது கணிதவியல் போன்றன) விஞ்ஞானத்திற்கும் சமூக விஞ்ஞானத்திற்கும் இருக்கும் முக்கிய வேறுபாடுகளில் ஒன்று இந்த அரசியல் பின்னணியின் முக்கியத்துவம். பாசிச கருத்துள்ள ஒரு மரபு விஞ்ஞானி புதிய கண்டு பிடிப்புகளைச் செய்யலாம்; ஆனால் அதே கருத்துள்ள சமூக விஞ்ஞானி செய்யும் சமூகக் கண்டுபிடிப்புகள் பாசிசத்துக்கு சேவை செய்வதாகவே இருக்கும்.

இது ஏன்? தனிமனிதன் சுயமாக சமூகம் பற்றி சிந்தித்து முடிவுக்கு வரமுடியாதா? என்று கேட்கலாம். இதை விளக்கவும் மார்க்சியம்தான் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு சமூக உறவுகளில் பின்னிப் பிணைந்துள்ளான், சமூக உறவுகள் எவ்வாறு தனிமனித அரசியலை நிர்ணயிக்கிறது, எப்படி அவன் தன் வர்க்கம் சார்ந்து இயங்குவது இயல்பாகிறது போன்ற விளக்கங்களை மார்க்சியம் தருகிறது.

மார்க்சியம் வழங்கும் புரிதலுக்கான உபகரணங்களை சமூக மாற்றுக்கான உத்திகளை நுணுக்கமாகப் பார்க்கும் முன் நாம் இன்று முதலாளித்துவப் பொருளாதாரம் உருவாக்கியுள்ள உலகை சற்று அவதானிக்க வேண்டும். உலகு ஏற்றத்தாழ்வற்று சரியான வழியிற் செல்கிறது என்று அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள்கூட சொல்வதில்லை. ஆனால் அவர்கள் முதலாளித்துவப் பொருளாதாரத்தைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி ஒடுக்குதல் ஒடுக்கப்படுதல் தவிர்க்கமுடியாத பகுதியாகிறது. வறுமை நிரந்தரத்தன்மையாகிறது. சிலர் சற்று மேலேபோய் மனிதாபிமான முதலாளித்துவம் பற்றி பேசுகிறார்கள். அதாவது வறுமை ஏற்றத்தாழ்வு ஒடுக்குதல் முதலானவை தவிர்க்கமுடியாதது, ஆனால் அதன் அகோரத்தன்மை குறைக்கப்படலாம் என்கிறார்கள். ஒடுக்குமுறை இல்லாதொழிக்கப் போராடும் நமக்கு ஒடுக்குதல் குறைக்கப்படுவதில் உடன்பாடே. ஆனால் மனிதாபிமான முதலாளித்துவவாதிகள் அது எப்படி சாத்தியம் என்பதை எமக்கு சொல்வதில்லை. ஏனெனில் அது முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவத்தை வர்ணிக்கவேண்டிய தேவையை அவர்களுக்கு உண்டாக்குகிறது.

முதலாளித்தும் வெளிப்படுத்தும் சமூக நடைமுறையை மேலோட்டமாகப் பார்த்தாலே ந‌மக்குச் சில உண்மைகள் விளங்கும். முக்கியமாகத் தற்போதைய உலகப் பொருளாதாரச் சரிவு வெளிக்காட்டியிருக்கும் முதலாளித்துவத்தின் பற்றாக்குறை முக்கியமான பாடம்; தற்போதைய பொருளாதாரப் பின்னடைவுக்கு முன் முதலாளித்துவம் சரியாக இயங்கிகொண்டிருக்கிறது என்று பெரும்பான்மையான முதலாளிகள் சொல்லிவந்தது எமக்கு தெரியும். அவர்களுக்கு இந்தப் பின்னடைவு மிகவும் ஆச்சரியமான ஒன்று. ஆனால் மார்க்சியர் இதுபற்றி தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்கள். அதனாற்தான் முதளாளித்துவச் சரிவை விளக்க மக்கள் மார்க்சியத்தை நாடுகிறார்கள். 45 வீதத்துக்கும் அதிகமான அமெரிக்க ஜேர்மனி ஸ்பெயின் முதலான நாட்டு மக்கள் முதலாளித்துவ பொருளாதாரம் வேலை செய்யவில்லை என்று நம்புவதாக அண்மையில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘சோசலிசத்துக்கு முடிவு கட்டிவிட்டோம் இது வரலாற்றின் முடிவு’ என்று துள்ளிக்குதித்த முதலாளித்துவம் இன்று படும் பாடும் மார்க்சியத்தின் பால் எழுந்துள்ள கவனமும் முக்கியமானது.

முதலாளித்துவத்தின் பற்றாக்குறை தெற்காசியாவில் மேலும் வெளிச்சமாகத் தெரிகிறது. உலகவங்கியின் தெற்காசியாவுக்கான முதன்மை பொருளாதார நிபுணர் சதா தேவராஜன் (Shata Devarajan) உலக பொருளாதார வீழ்ச்சி தெற்காசியாவை தொடப்போவதில்லை என்று 2008ல் பிதற்ற, அதையொட்டி மற்றைய சில்லறை ‘பொருளாதார நிபுணர்களும்' ஒரு பிரச்சினையுமில்லை என்று பாவனை செய்தததை நாமறிவோம். அனைத்து எதிர்பார்ப்புகளும் இன்று பிழையாகியுள்ளது. இந்தியா சீனா உட்பட பல நாடுகள் பெரிய பொருளாதாரப் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளன. இலங்கை பாகிஸ்தான் முதலான நாடுகளின் பொருளாதாரம் திவாலாகிப்போகும் கட்டத்திற்கு வந்து நிற்கிறது.

உலகசனத்தொகையின் அரைவாசிக்கும் மேற்பட்ட வறியமக்கள் தெற்காசியாவில் வாழ்கிறார்கள். ஏறத்தாழ 1.4 பில்லியன் மக்கள் ஒரு நாளுக்கு ஒரு டாலரிலும் குறைவான தொகையுடன் வாழும் பகுதியாக இருக்கும் தெற்காசியாவின் இராணுவமயப்படுத்தல் அதி உக்கிரமானது. இப்பகுதி நாடுகளில் வாழும் வறிய மக்கள் பலமுறை கிளர்ந்தெழுந்துள்ளார்கள். இலங்கை பாகிஸ்தான் முதலிய நாடுகளில் மிகப்பெரிய தொழிலாளர் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. மீண்டும் இத்தகைய போராட்டங்கள் தலையெடுப்பதை தவிர்ப்பதற்காக ஆளும் வர்க்கங்கள் தங்களை ஆயுதமயப்படுத்திக்கொண்டிருக்கின்றன.

இந்நாடுகளில் இராணுவச்செலவு ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கப்படுகிறது. இந்திய அரசு பாதுகாப்புச் செலவை 25 வீதமாக உயர்த்தியுள்ளது. தெற்காசிய பிராந்திய ஆக்கிரமிப்புக்காக போராடும் அவுஸ்திரேலியா மிகப்பெரும் கடற்படையைக் கட்டிவருகிறது. இரண்டாம் உலகயுத்தத்துக்குப் பின்னான மிகப்பெரிய கடற்படை பெருக்கமாக இது வர்ணிக்கப்படுகிறது. பாகிஸ்தான் தனது பாதுகாப்புச் செலவை 15.3 வீதமாக உயர்த்தியுள்ளது. இந்த பிரதேசத்தில் இருக்கும் இரண்டு அணு ஆயுத நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானின் பொருளாதார சரிவு ஒட்டுமொத்த உலகுக்குமே பெரும் கிலியை உண்டுபண்ணியுள்ளது. ஒப்பீட்டு முறையிற் பார்த்தால் இராணுவ செலவுக்கு அதிக பணம் ஒதுக்குவது இலங்கைதான். கடந்த முப்பது வருடத்தில் இராணுவச்செலவு 800 மடங்கு உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் கதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நவகாலனித்துவ நாடுகளின் பண உதவியிலும் தூள் கடத்தல் காசிலும் நகரும் பொருளாதாரம் பெரும்பான்மை ஆப்கான் மக்களின் எந்த நலன்களையும் நிவர்த்திசெய்ய வக்கற்றதாக இருக்கிறது.

பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாடுவதும் வக்கற்ற ஊழல் நிறைந்த அதிகார-ஆளும் வர்க்கம் இராணுவத்தைக் கொண்டு தங்களைப் பலப்படுத்தி மக்களை அடக்கி ஆள்வதும் ஆசியா முழுவதும் பார்க்கக்கூடிய ஒன்றே. ஒடுக்கப்படும் மக்களின் நலனுக்கு இயங்கும் ஆளும் வர்க்கத்தை எந்த நாட்டிலும் பார்க்கமுடியாது.

பிலிப்பைன்சில் சனாதிபதி குளோரியா அராயோ (Gloria Macapagal-Arroyo) நாட்டை கட்டுப்படுத்தும் மூன்றுவீத முதலாளிகளின் பொம்மையாகவே அராஜகம் செலுத்தி வருகிறார். கடந்த இரண்டு சகாப்தங்களாக பர்மா இராணுவ சர்வாதிகாரத்தினால் ஆட்சி செய்யப்படுகிறது. ஜனநாயகத்துக்காக போராடிய ஆங் சான் சு கி (Aung San Suu Kyi) இன்னும் வீட்டுக்காவற் சிறையில் வாடுகிறார். வட கொரிய மக்கள் கோரமான இராணுவ சர்வதிகாரத்தின் கீழ் மிக மோசமான வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். தாய்லாந்தில் சிவப்புக் கட்சியும் மஞ்சள் கட்சியும் அதிகாரத்தை மாறி மாறி பகிர்வதில் மட்டுமே குறியாக உள்ளன. வேகமாக வளரும் நாடாக கருதப்படும் சீனாவில் மில்லியன் கணக்கான மக்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். உலகின் பெரிய ஜனநாயகநாடு என்று வர்ணிக்கப்படும் இந்தியாவில் வறிய மக்களுக்கு ஜனநாயகத்தின் ஒரு சிறு கசிவும் எட்டவில்லை. கடந்த பத்து வருடத்துக்குள் 1500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேறு வழியின்றி தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். பெரும்பான்மை மக்கள் கொடிய வறுமையில் வாழ்கிறார்கள். வியட்நாமில் நாளுக்கு பத்துசென்ட் ஈரோ காசுக்கு வேலை செய்யும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். முன்றாவது பெரிய ஜனநாயக நாடாக வர்ணிக்கப்படும் இந்தோனேசியாவில் ஒடுக்கப்படும் மக்களுக்குக் குரல்கொடுக்க யாருமேயில்லை. மக்கள் போராடி சுகாட்டோவின் சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்பும் இன்றும் சுகாட்டோ ஆட்சியில் பங்குப்பெற்றவர்களே; ஆளும்வர்க்கமாக வடிவெடுத்துள்ளார்கள். கிழக்குத் திமோர் மக்களை வேட்டையாடியவர்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். மலேசியாவில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் அதிகாரத்துக்காக தமக்குள் அடித்துக்கொண்டிருக்கிறார்களே தவிர ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்து இயங்க யாரும் தயாராகயில்லை. இலங்கையில் யுத்தவெறியாடும் ராஜபக்ச அரசை பற்றி உலகுக்கு நன்றாக தெரியும். ஜப்பான், தென்கொரியா என்று எல்லா நாடுகளிலும் வறிய மக்கள், தொழிலாளர்கள் போராட்டங்களில் வேலை நிறுத்தங்களில் குதித்துள்ளார்கள்.

இது என்ன மிகப்பெரிய விபத்தா?

 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768