பத்தி:
சை. பீர் என்ற...... யுவராஜன்
மஇகா
மாநாட்டில் கடை நிலை பேராளர் இப்படிப் பேசலாம். ‘மீண்டும் என்னை
எழுப்பும் போது என் தோ ழ ர் க ளோ டு எழுப்பு’ என்ற நபிகள் நாயகத்தின்
தோழமையின் உ ய ர் வை ச் சொல்லும் வாசகத்தை சை.பீர் எதற்கு முடிச்சு
போட்டார் தெரியுமா? அடுத்தப் பிறவியில் சாமிவேலுவின் தோழமைக் கூட்டத்தில்
பிறக்க வேண்டுமாம்.
கட்டுரை: HOW TO FIGHT BACK சேனன்
ஒ டு க் க ப் ப டும்
மக்களுக்கு மார்க் சியத்தின் வழி போராடுவதை தவிர வேறு வழி யில்லை என்று
சுருக்கமாக சொல்லி விட்டு போய்விடலாம் தானே பிறகேன் நீண்ட வியாக்கியானம்
என்று நண்பர் ஒருவர் கேட்கின்றார். இந்தச் சுருக்கல் மார்க்சியம் பற்றிய சந்தேகங்களில் இருந்து பிறக்கிறது.
பத்தி: சிற்றிதழ்களும் தெருநாய்களும்
சிவா பெரியண்ணன் ஒரு தெருநாய் இறப்பைக் கண்டு விசனப் படுபவரா நீங்கள்? பார்ப்பதற்கு அழகு என்று எதுவும் இல்லை, பல வேளைகளில் ரோமங்கள் உதிர்ந்து சீழ் பிடித்து துர்நாற்றம் வீசும், மனிதர்களை கடித்து வைக்கும் தன்மைகளையுடைய ஒரு தெருநாயின் இருப்பில் யாருக்கு என்ன லாபம்?
புதியப்பதிவு: 20.09.2009
கட்டுரை: ஒரு டோடோ பறவையின் வரலாறு சித்ரா ரமேஸ் செவ்விலக்கியம்,
வட்டார மொழி இலக்கியம், புனைவிலக்கியம், யதார்த்த இலக்கியம், மாய யதார்த்த
இலக்கியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற வகைப்படுத்தல்கள் ஆங்கில
இலக்கியங்களுக்கே பெரும்பாலும் பொருத்தமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால்
உலகமயமாதலில் நாம் ஆங்கிலேயரின் சாப்பாடு, உடை, வாழ்க்கைமுறை
எல்லாவற்றையும் பின்பற்ற நேரிடும் போது இலக்கியத்திலும் ஆங்கில மொழியில்
எத்தகைய வகைப்படுத்தல்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றனவோ அதையே நவீன
தமிழ் இலக்கியவாதிகளும் பின்பற்றுகின்றனர்.
லும்பன் பக்கம்: ஏய் டண்டனக்கா... ஏய் டனக்கணக்கா
எழுத்தாளர்
சங்கத் தலைவர் இராஜேந்திரனை எதிர்த்துப் போட்டியிட முடிவெடுத்தப்பின்
அவருக்கு எதிரான பிரச்சாரத்தில், சங்கத்தின் பலவீனத்தையும் அதன்
ஒருதலைப்பட்சத்தையும் சங்கத்தின் இயலாமையையும் அதைப்புறக்கணிக்க வேண்டிய
எழுத்தாளனின் அறச்சீற்றத்தைப் பற்றியெல்லாம் பேசிவிட்டு தோல்வியடைந்த பின்
எழுத்தாளர் சங்கம் கொடுத்த விருதை மறுவருடமே வாங்கிக்கொண்ட
பெருந்தன்மையாளர். இன்னும் சை.பீர்முகமதுவின் சாகசங்களைப் பற்றிக்
கூறிக்கொண்டே போகலாம்.
பத்தி: நிறைய கண்களுடன் ஒருவன்... வீ.அ.மணிமொழி அந்தோணி
வந்து நுழைந்தார். சுமாராக இருந்த அந்தச் சீன இளைஞன் புன்னகைத் தந்து
நாற்காலியில் உட்கார்ந்தார். புத்தகப் பையிலிருந்து பேனாவும் ஒரு
டைரியையும் வெளியே எடுத்து விரிவுரையைக் கேட்க தயாரானது போல் தோன்றியது.
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பெண்மணி நுழைந்தார். நாற்பது வயதைத்
தாண்டியிருந்த அந்தப் பெண்மணி, அந்தோணியின் அம்மாவாக இருக்குமோ என
நினைத்துக் கிசுகிசுத்தோம். அவர் அந்தோணியின் எதிர்புறம் உட்கார்ந்த போது,
ஏன் அந்தோணியின் அம்மாவிற்கு இவ்வளவு முன்னுரிமை? என மீண்டும் கேள்விகள்.
பத்தி: பியானிஸ்ட்
(The Pianist) – அடையாளம் கடந்த நேயம் யுவராஜன் இயக்குநர்
வன்முறை நிறைந்த காட்சிகளைத் தூரக் காட்சிகளாகவே எடுத்திருக்கிறார். வயதான
யூதரைச் சக்கர நாற்காலியுடனேயே மூன்றாவது மாடியிலிருந்து கீழே போடுவது,
மண்டியிட்ட நிலையிலேயே சாலையில் இறந்து கிடக்கும் பெண், டேங்கர் மூலம்
மருத்துவமனையை நிர்மூலமாக்கும் காட்சி போன்ற இவையெல்லாம் உதாரணங்கள்.
விரல்கள் காற்றில் தந்தியடிக்கும் காட்சிகள் மூன்று முறை அண்மை காட்சியாகவே
காட்டப்படுகிறது. ஸ்பில்மனின் உயிரைக் காப்பதற்காக இருப்பிடங்களை மாற்றும்
காட்சிகளும், கிடைக்கும் உணவை வாயில் திணிக்கும் காட்சிகளும் கூட அண்மை
காட்சிகளாகவே இருக்கின்றன.
கட்டுரை: உலகின் இறுதி நாள் 21-12-2012 - மாயன்கள் உறுதி! விக்னேஷ்வரன் அடைக்கலம் மாயா
இனத்தவர்கள், அவர்களின் பொற்காலத்தின் போது உலகிற்குப் பயனுள்ள பல
துறைகளின் நுணுக்கங்களை ஆராய்ந்திருக்கிறார்கள். கலைத்திறனும் புத்திக்
கூர்மையும் பெற்று விளங்கினார்கள். 16-ம் நூற்றாண்டின் போது தென்
அமெரிக்கப் பகுதியை ஆட்சி செய்த ஸ்பெயின் நாட்டினரின் கடுமையான தாக்குதலால்
இப்பகுதி அழிந்து போனது. அவர்களின் கண்டுபிடிப்பும் எழுதிய நூல்களும்
அச்சமயம் அழிக்கப்பட்டன.
பத்தி:
வசூல் சீ. முத்துசாமி அந்த வகையில் ஒரு ஐம்பதாண்டுக்கால உழைப்பின் பின்னணியில் தாங்கள் கண்டடைந்த அந்த பிழைப்பு என்கிற தாரக மந்திரம், உங்களை இன்று, ஒரு வசூல் மன்னனாக இந்த இளிச்சவாய் சமூகத்திற்கு அடையாளப்படுத்தியதோடு அல்லாமல்- இந்நாட்டு புத்திலக்கியப் பரப்பில் ஒரு புதிய உற்சாக அலை பெருக்கெடுத்தோட உந்து சக்தியாகவும் மையம் கொண்டுள்ளதைக் காண உவகை ஊற்றெடுக்கிறது. நன்றி உணர்ச்சி மேலிட மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க நீங்கள் வாசம் கொண்டிருக்கும் தென்புலம் நோக்கி இருகரங்கூப்பி கண்ணீர் மல்க நிற்கத் தோன்றுகிறது அண்ணாச்சி. இனி வரும் காலங்களில் அண்ணாச்சியின் அடியொட்டி இன்னும் பல வசூல் சாதனைகள் இங்கே- நம் தமிழ் இலக்கிய உலகில் நடைபெறும் சாத்தியம் பிரகாசமாக உள்ளது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
சிறுகதை : ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள் முனிஸ்வரன் அந்த அடக்கு முறையாலோ அல்லது பச்சை
நிறத்துக் காகக் காத்திருக்கும் வெட்டிப் பொழுது களுக்காகவோ நான்
சாலைகளையும் பிரயாணங் களையும் வெறுத்துத் தள்ளுகிற ஆங்கார ஆசாமியாகி யிருந்தேன்.
சிறுகதை:
தூரத்தே தெரியும் வான் விளிம்பு
ஜெயந்தி சங்கர் இடது தொடையை யாரோ லேசாகப் பிராண்டுவதைப் போலிருக்க
திரும்பிப் பார்த்தேன். கண்ணாடியில் என்னையே பார்த்துக்
கொண்டிருப்பது போன்ற முகத்துடனும் வேறு மாதிரியான ஆடைகளுடனும்
ஒருவன்.
தொடர்:
பரதேசியின் நாட்குறிப்புகள் ...2 மஹாத்மன் ஆண் ஓரினச் சேர்க்கை விரும்பிகள் உலாவித் திரிவர். அசந்து தூங்குபவனின் அனுமதியின்றி கால் சட்டைக்குள் கையை விடுவார்கள். அவனுக்கு எதிர்புறம் ஒரு பெண் பாதி தூக்கக் கலக்கத்தில் இருந்தாலும் அவனுக்கு கவலையில்லை.
தொடர்:
எனது நங்கூரங்கள் ...2 இளைய அப்துல்லாஹ் பிள்ளைகள் பயத்தில் அழுது கொண்டே இருந்தனர். ஆம்பிளை பொம்பிளை என்ற பேதமில்லாமல் எல்லோரும் அழுதனர். ஒப்பாரி மயமாகவே இருந்தது பள்ளிக்கூடம். அம்மைப்பால் குத்தின பெடியன்களின் கையைப் பிடித்துப் பார்த்தால் கோடு மாதிரித்தான் இருந்தது.