|
தேவையற்றது,
மனம் சார்ந்தது, உடல் வலுவை இழக்கச்செய்வது, இரத்த ஓட்டத்தைச் சீர்
படுத்துவது என சுய இன்பம் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளைக்
கூறிக்கொண்டிருக்கும் ஒரு காலக்கட்டத்தில் ஒரு லும்பனான நான் அது குறித்து
கருத்து கூற ஒன்றும் இல்லை. மற்றவர்களைப் போலல்லாமல் அருவருப்புகளின்
போதும் தீராத மன உளைச்சல்களின் போதும் இரத்த அழுத்தத்தின் போதும் சுய
இன்பம் கொள்வது ஒரு வகையான சமநிலையையும் அதன் தொடர்ச்சியாக உறக்கத்தையும்
எனக்கு வர வழைத்துவிடுபவை. இந்த வினோதமான மனநிலையால் நான் சுய இன்பம்
கொள்வதற்கு இந்த அரசாங்கமும் அதன் தலைமை பீடங்களும் பல சந்தர்ப்பங்களில்
காரணமாகியிருப்பது பலருக்கும் அபத்தமாகப்படலாம். மேலும் சுய இன்பத்திற்கு
அதன் பெயரே கூடத் தடையாக இருப்பதால் (யாரோ மேல் தட்டு மனிதன்
வைத்தப்பெயராக இருக்க வேண்டும்) எளிதாகக் 'கைப்பழக்கம்' என்றே அதை
குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.
அண்மைய காலமாக இந்த மன நிலையின் உச்சக் காத்திரம் தலைவிரித்து ஆடியதால்
என்னைச் சரிபடுத்த சக நண்பர்கள் முடிவெடுத்தனர். இதற்கு சரியான மருந்து
இலக்கியத்தில்தான் உள்ளது என தீர்மானமாகக் கூறினர். அன்று நடக்கவிருந்த
சை.பீர்முகமதுவின் சிறுகதை புத்தக வெளியீட்டிற்குச் செல்வதெனவும்
முடிவெடுத்தனர்.
அதிஷ்டவசமாய் எனக்கு அமைந்த நண்பர்களும் லும்பர்கள்தான். அவர்கள்
'விவரமானவர்கள்' என்பதால் ஏதோ ஒரு நம்பிக்கையிலும் தைரியத்திலும் நடையைக்
கட்டினேன். இருந்தாலும் எனக்குச் சை.பீர்.முகமதுவை நினைத்து கொஞ்சம்
நடுக்கமாகவே இருந்தது. அவர் ஆளுமை என்னை பதற்றமடைய வைத்தது. மலேசிய
நாட்டின் மிக முக்கியமான எழுத்தாளர் அவர். மலேசிய இலக்கியத்தை தமிழகத்தில்
கொண்டு சேர்ப்பதற்கு அவர் பட்ட பாட்டை நினைத்தால் அதற்காகவே தனியாகக்
கையைப் பயன்படுத்த வேண்டிவரலாம்.
தினசரி ஏடுகள் எழுத்தாளர்களின் படைப்புகளுக்குச் சன்மானம் வழங்கவேண்டும்;
அப்படி வழங்காது போனால் பத்திரிகைகளுக்கு எழுத்தாளர்கள் எழுதக் கூடாது எனக்
குரல் கொடுத்தவர் சை.பீர்முகமது. (ஆனால் மறுவாரமே எந்தச் சன்மானமும்
வாங்காமல் பத்திரிகையில் அவர் படைப்புகள் வருவது பற்றி நாம் கேள்வி
எழுப்பக்கூடாது). எந்த இலக்கியத் தரமும் அற்ற 'பெண் குதிரை' என்ற அவர்
எழுத்துக் குவிப்புக்கு தனது பேச்சுத்திறமையாலும் வியாபாரத் திறமையாலும்
ஒரு நாவலுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர். எழுத்தாளர் சங்கத் தலைவர்
இராஜேந்திரனை எதிர்த்துப் போட்டியிட முடிவெடுத்தப்பின் அவருக்கு எதிரான
பிரச்சாரத்தில், சங்கத்தின் பலவீனத்தையும் அதன் ஒருதலைப்பட்சத்தையும்
சங்கத்தின் இயலாமையையும் அதைப்புறக்கணிக்க வேண்டிய எழுத்தாளனின்
அறச்சீற்றத்தைப் பற்றியெல்லாம் பேசிவிட்டு தோல்வியடைந்த பின் எழுத்தாளர்
சங்கம் கொடுத்த விருதை மறுவருடமே வாங்கிக்கொண்ட பெருந்தன்மையாளர். இன்னும்
சை.பீர்முகமதுவின் சாகசங்களைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட ஓர் ஆளுமையை நேரில் சந்திப்பதென்றால் பதற்றம் வராமல் என்ன
செய்யும். அதனால் யாருக்கும் தெரியாமல் நானும் எனது நண்பர்களும் பின்
இருக்கையில் அமர்ந்து கொண்டோம். நிகழ்விற்கு நிறைய பேர் வந்திருந்தனர்.
அவர்களில் பலரும் எழுத்தாளர்கள் இல்லை. ஒரு வேளை சை.பீர்முகமதுவிற்கு
மட்டுமே தெரிந்த அவரின் தீவிர வாசகர்களாக இருக்கலாம் என
நினைத்துக்கொண்டோம். நிகழ்வு தொடங்கியபோது டத்தோ சிரி சாமிவேலு, டத்தோ
சரவணன், டத்தோ சுப்ரமணியம் எனப் பலரும் வந்து இறங்கினர்.
எனக்கு ஒரு நிமிடம் இது எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவின் புத்தக
வெளியீடோ எனச் சந்தேகம்கூட ஏற்படத்தொடங்கியது. அவர்தான் டத்தோ
சுப்ரமணியம், டத்தோ சிரி சாமிவேலு என ஒருவரையும் தன் புத்தக
வெளியீட்டு விழாவிற்கு விட்டுவைப்பதில்லை.
நிகழ்வில் சை.பீர்முகமது பேசத்தொடங்கினார். சாமிவேலுவை வாயாரப்
புகழ்ந்தார். திடீரென சாமிவேலுவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக
அவர் மாற்றம் கண்டது குறித்து எங்களுக்கு ஒரே ஆச்சரியம். இறுதியில்
தனக்கு மிக நெருக்கமான எழுத்தாளர்களுக்குச் சாமிவேலு ஒரு லட்சம்
வெள்ளிவரை பெற்றுக்கொடுப்பார் எனப் பீடிகை போட்டு அதற்குப் பலனாக
நிகழ்வின் இறுதியில் அறுபதாயிரம் ரிங்கிட்டிற்கு மேல் பெற்றுக்கொண்டார்.
'எழுத்தாளன் என்பவன் வீரியத்துடன் இருக்க வேண்டும். எந்த அரசியல்
சக்திக்கு முன்னும் அடிபணியக் கூடாது' என முன்பு ஒரு மேடையில் சொன்ன
அதே வாயால் மொத்தத் தொகையையும் வாங்கிக்கொண்டு; குறுகி நின்று நன்றி
சொன்னார் பீர் முகமது.
பக்கத்தில் இருந்த நண்பர்கள் 'தான் ஏற்படுத்தும் பிம்பத்தை தானே
கட்டுடைக்கும் சை.பீர் உண்மையில் ஒரு பின்நவீனத்துவவாதிதான்' என
வாயாரப் புகழ்ந்தனர். மனப்பிறழ்வு ஏற்படும் சந்தர்ப்பங்களில்
மூன்று முடிச்சி படத்தில் வந்து ரஜினியைப் பயமுறுத்தும் 'மனசாட்சி'
நடராஜா போல எனக்கும் அவ்வப்போது வந்து போகும் டி.ராஜேந்தர் அன்றும்
அந்த மேடையில் திடீரெனத் தோன்றி,
'மேடை போட்ட பீரு
அவர் பக்கத்துல யாரு
முதுகெலும்ப தொலைச்சி நிக்கும்
எழுத்தாளன பாரு
ஏய் டண்டனக்க...ஏய் டனக்கணக்கா' எனப் பாடத்தொடங்கினார்.
பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பர் சட்டென கடுப்பாகி என் காதில்
கிசுகிசுத்தார்.
"உன் சிலுவாரு நனைஞ்சிருக்கே... உச்சா போய்ட்டியா?"
|
|