இதழ் 9
செப்டம்பர் 2009
  கவிதை : சாவுகளாற் பிரபலமான ஊர்
தர்மினி
 
     
  பத்தி:

சை. பீர் என்ற......

யுவ‌ராஜ‌ன்

சிற்றிதழ்களும் தெருநாய்களும்
சிவா பெரியண்ணன்


நிறைய‌ க‌ண்க‌ளுட‌ன் ஒருவ‌ன்...
வீ.அ. ம‌ணிமொழி

பியானிஸ்ட் (The Pianist) – அடையாளம் கடந்த நேயம்
யுவ‌ராஜ‌ன் 

வசூல்
சீ. முத்துசாமி 


கட்டுரை:

HOW TO FIGHT BACK
சேனன்

ஒரு டோடோ பறவையின் வரலாறு
சித்ரா ர‌மேஸ்

உலகின் இறுதி நாள் 21-12-2012 - மாயன்கள் உறுதி!
விக்னேஷ்வரன் அடைக்கலம்


சிறுகதை:

ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள்
முனிஸ்வரன்


தூரத்தே தெரியும் வான் விளிம்பு
ஜெயந்தி சங்கர்


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...2
"மலேசியத் தரகர்கள்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...2
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...2
இளைய அப்துல்லாஹ்


லும்ப‌ன் ப‌க்க‌ம்:

ஏய் ட‌ண்ட‌ன‌க்கா... ஏய் ட‌ன‌க்க‌ண‌க்கா


கவிதை:

தர்மினி


சந்துரு

லதா

தினேசுவரி

யோகி


தோழி

ரேணுகா

இளங்கோவன்
 
     
     
 

தீவிலுள்ள தீவுகளிலொன்றின் வாசற்துண்டாக
அக்கிராமம் இருக்கின்றது.

பாம்புக்கடிப் பரியாரியும்
பதிவு செய்யும் விதானையும்
வயோதிபர்களுமாக
வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஊர்.

மண்கும்பிகள் மதகுகள் தனித்திருக்க
விளையாட்டுகள் வேலியடைத்தல்
விடிகாலைப் பனங்காய் தேடல்
எதுவுமற்று
ஈச்சைகள் கிளுவைகள்
காவலுக்கு அரண்கள் மற்றும் கடற்படை
போரைப் பதிந்த முகமாய் அவ்வூர்.

சுடுகாட்டுத் தாழைகளிலிருந்து
நாகங்கள் தப்பித்தோடியிருக்க
கல்லறைப் பூவரசுகளின் நிழலில்
அடையாள அட்டைகளைக் கைகளிற் பொத்தியபடி
பிணந்தூக்க எவருமற்று
கிழவிகளும் கிழவர்களும்.
கால் நீட்டிக்காத்திருப்பர்.

'எலும்புகள் எடுத்தல்'
'குண்டுகள் வெடித்த கடைகள் '
'இடிந்த பள்ளிக்கூடம்'
'வெடி வைத்த கோயில்'
'உயிரோடு எரித்தல்'
'கிணறுகளில் கிழிந்த உடைப்பெண்கள்'
இப்படிப் பத்திரிகைத் தலைப்புகளாற்
பிரபலமானது இவ்வூர்.

சிதைவடைந்த ஊரிற் செழித்துக் கிடப்பவையோ
சுடுகாடும் இடுகாடும்.

 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768