பொம்மைகளோடு
பழக்கப்படாத
என் பால்யம்
வெறும்
காகிதக் கப்பலோடு
மட்டுமே பயணம்....
மழைக்கால
தேக்கங்களில்
மிதக்க விடப்பட்ட
என் காகிதக் கப்பல்களை
பல மூழ்கிப் போயின...
மழையில்லா
நாட்களில்
நீங்கள் கண்டெடுக்க முடியும்
மூழ்கிப் போன
காகிதக் கப்பல்களை
என் பழைய வீட்டின்
நீர்த்தொட்டிகளில்...
தோம்புகளில்........
இருப்பினும்
இன்னும் மூழ்காமல்
அழகாய்
மிதந்துக் கொண்டிருக்கிறது
என் பால்யம்...
அனுமானங்கள்
திரும்பிப் பார்க்கும்
ஒவ்வொரு கணங்களையும்
பதிவு செய்து கொள்கிறேன்...
திரும்பாத பொழுதுகளில்
என்ன நடந்திருக்கும் என்று......