மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கான ‘யாழ்’ சிறுகதைப் போட்டி – நாள் நீட்டிப்பு

000மலேசியா முழுவதும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதை போட்டியை யாழ் பதிப்பகம் ஏற்று நடத்துவதை அறிவீர்கள். இப்போட்டிக்கான இறுதி நாள் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 28.2.2019 திகதிக்குள் ஆசிரியர்கள் தங்கள் சிறுகதைகளை yazlstory@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

 ‘யாழ்’ சிறுகதைப் போட்டி விதிமுறைகளும் விளக்கங்களும்.

1.யாழ் சிறுகதைப் போட்டியில் மலேசியாவில் தற்போது பணியில் இருக்கும் எல்லா ஆசிரியர்களும் பங்கேற்கலாம். தற்சமயம் ஆசிரியர் பயிற்சி கழகங்களிலும் உயர்கல்விக் கூடங்களிலும் ஆசிரியப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பயிற்சி ஆசிரியர்களும் பங்கேற்கலாம்.

2. பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், பாலர்ப்பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க முடியாது.

3. இதுவரை தனித்த சிறுகதை தொகுப்பு வெளியிட்ட ஆசிரியர்கள் இப்போட்டியில்     கலந்துகொள்ள முடியாது.

4. சிறுகதைகளுக்கு பக்க அளவு இல்லை.

5. கதை கரு படைப்பாளியின் சொந்த தேர்வு.

6. கணினியில் தட்டச்சு செய்து அனுப்பப்படும் படைப்புகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். Unicode தமிழ் எழுதுருக்களைப்பயன் படுத்துவது வரவேற்கப்படுகிறது.

7. ஆசிரியர்கள் பல படைப்புகளை அனுப்பலாம். ஆனால் ஓர் எழுத்தாளரின் ஒரு படைப்பு மட்டுமே பரிசு பெற தகுதி பெரும்.

8. போட்டிக்கு அனுப்பப்படும் படைப்பு முன்னர் அச்சு ஊடகங்களிலோ இணையத்திலோ பிரசுரமாகியிருக்கக் கூடாது.

9. ஆசிரியர்கள்  படைப்பின் அசல்தன்மை குறித்து உறுதி கடிதம் கட்டாயம் இணைக்க.   வேண்டும்.

10. விதிமுறை 7 அல்லது 8ஐ மீறும் படைப்புகள் போட்டியில் இருந்து நீக்கப்படும்.

11. இப்போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுகதைகளில் அதிகபட்சம் 10 தரமான சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு படைப்பாளிக்கும் 1000 ரிங்கிட் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

12. நீதிபதிகள் முடிவே இறுதியானது.

13. மேல் விபரங்களுக்கு 016-3194522 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்

(Visited 14 times, 1 visits today)