Author: சுனில் கிருஷ்ணன்

பசித்திரு தனித்திரு விழித்திரு

1  வெள்ளைச் சட்டையும் கருப்பு காற்சட்டையும் அணிந்த மாரிமுத்து நாற்காலியில் அமர்ந்து வாசல்கதவையே பார்த்திருந்தான். கைபேசியில் நேரத்தைப் பார்த்தான். மூன்று இருபது. “இந்தா வந்துருவார்… உக்காருங்க” எனச் சொல்லி பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இருப்பு கொள்ளவில்லை. அவன் முன் இருந்த முக்காலியில் வைக்கப்பட்டிருந்த பில்டர் காபி சூடிறங்கி ஆடை கட்டியிருந்தது.  எதிர் சுவற்றில் மூன்றுக்கு இரண்டடி அளவிலான பெரிய…

வரலாற்றின் கைவிளக்கு – ‘சுளுந்தீ’ நாவலை முன்வைத்து.

‘வரலாற்றுப் புனைவு’ என்பது வரலாறும் புனைவும் முயங்கி உருகொள்வது. வரலாற்றுப் புனைவு இரு விதங்களில் செயல்பட முடியும். அறியப்பட்ட வரலாற்றின் இடைவெளிகளை நிரப்ப முடியும். வரலாற்று நாயகர்களின் செயலுக்குப் பின் இயங்கும் விசைகள் மற்றும் மனவோட்டத்தை அடையாளப்படுத்த முடியும். 2018 ஆம் ஆண்டு இறுதியில் ஆதி பதிப்பக வெளியீடாக வெளிவந்து, பல்வேறு விருதுகளைப் பெற்று, வாசகப்பரப்பிலும்…

விஷக் கிணறு

1 “சரியான…காட்டெருமை” வண்டியின் கதவடைத்து இறங்கும்போது முணுமுணுத்தது மீனாவின் காதில் விழாது என எண்ணிக்கொண்டேன். ஆனால் ஏதோ லேசாக விழுந்திருக்க வேண்டும். நான் இப்போதெல்லாம் பெரும்பாலும் முணுமுணுப்பதால்  இயல்பாகவே அதற்கு செவிகூரத்தொடங்கி இருந்தாள். பின்னிருக்கையிலிருந்து இறங்கியபடி “என்னப்பா”என்று முகத்தில் குழப்பத்தை தேக்கியபடி என்னை நோக்கினாள். “ஒண்ணுமில்லம்மா… வண்டி நல்லா தாட்டியமா இருக்குன்னு சொன்னேன்”என்றேன். “ஃபோர் வில்லர்…

இயல்வாகை

கருக்கிருட்டில் தெருவிளக்குகள் எரிந்துக்கொண்டிருக்கும் விடிகாலையில் கல்லூரி சாலையைக் காண சத்தியனுக்குப் பிடிக்கும். அடர் கருமையிலிருந்து சாம்பல் மலரும் புலரிப் பொழுது அவருக்கு அணுக்கமானது. பல்கலைக்கழக தபால் அலுவலகத்தின் அருகே அவருடைய வெண்ணிற ஸ்விப்ட் காரை நிறுத்திவிட்டு காலை நடைக்கு தயாரானார். காலை நடையின்போது கைப்பேசியை அணைத்து விடுவார். அதற்காகப் பையிலிருந்து எடுத்தபோதுதான் ஓசையணைத்துக் கிடந்த கைபேசியில்…

பேய்ச்சி: முதல் வாசிப்பு

நாவலைப் பற்றிய சில பொதுவான எதிர்பார்ப்புகள் உண்டு. நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என சொல்லப்படுவதுண்டு. ஒரு நல்ல நாவல் வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும். ஒரு வரலாற்று பிரக்ஞை நாவலுக்குள் செயல்பட வேண்டும். கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகருடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாக பரிணாமம் கொள்ள வேண்டும். ஆன்மீகமான ஒரு…

அணையா அனல் – இமையத்தின் ஐந்து நாவல்களை முன்வைத்து

எழுத்தாளர் இமையம் தமிழின் தற்கால கதைசொல்லிகளில் முதன்மையானவர்களில் ஒருவர். அவருடைய கதைகள் நடுநாடு என்று விளிக்கப்படும் வட தமிழக – புதுச்சேரி நிலப்பரப்பை களமாக கொண்டவை. இயல்புவாதத் தன்மையிலானவை. அந்நிலத்தின் மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் கையாள்பவை. இக்கட்டுரை அவருடைய ‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங்கதே’ மற்றும் ‘செல்லாத பணம்’  என இதுவரை அவர் எழுதிய…