Author: வ.ஐ.ச. ஜெயபாலன்

பாவைக் கூத்து

அம்ம வாழிய தோழி, யார் அவன் என்று வினாக்குறியானாய் அறிந்திலையோடி?   வீட்டுக் காவல் மறந்து சந்து பொந்து மரங்களில் எல்லாம் காலைத் தூக்கி நின்றாடி பெட்டை நாய்களுக்கு மூத்திரக் குறுஞ்சேதி எழுதி அலையுமே அந்தச் சீமை நாயின் பேர் இல்லத்து வம்பனடி அவன். போயும் போயும் அவனையா கேட்டாய்?   பொம்மலாட்டப் பாவையைப்போல் ஒருவர்…

சக கவிஞன் கி.பி. அரவிந்தன் நினைவாக…

என் இளமை பருவத்தில் இறந்த தோழர்கள், சான்றோர்கள் ஒருவரைக்கூட மறந்துவிடாமல் முந்திக்கொண்டு அஞ்சலிக் கவிதை எழுதுவதை ஒரு தவம்போல செய்து வந்தேன். முக்கியமான மரணங்களின்போது சிரித்திரன் ஆசிரியர் என்னை தேடுவார். நான் எழுதிய முக்கியமான அஞ்சலிகள் சில சிரித்திரனில் வெளிவந்தது. நான் வன்னிக்குப் போகும்போது அமரத்துவம் எய்திய போராளிகளுக்கு எழுதிய அஞ்சலிக் கவிதைகளுக்காக என்னை வாழ்த்துவார்கள்.…