Author: பாலா கருப்பசாமி

கவிஞர் சக்திஜோதியின் கவிதையுலகம்

sakthi 1

பொதுவாக எந்தக் கவிஞரையும் யாரும் நிராகரித்துவிட முடியாது. ஏதாவது ஒரு சமயத்தில் அசாத்தியமான கவிதையை எழுதியவர்களாக, எழுதக்கூடியவர்களாகவே எல்லாக் கவிஞர்களும் இருக்கிறார்கள். ஏகப்பட்ட தொகுப்புகள் ஆண்டுதோறும் வெளிவந்தபடி இருக்கின்றன. அவற்றுக்கு தவறாமல் முன்னுரைகளும் மதிப்புரைகளும் தாராளமாகக் கிடைத்து விடுகின்றன. கவிதைகளை விமர்சிக்கத்தான் ஆளைக் காணமுடிவதில்லை. இன்றைய கவிதை இயக்கச் சூழலில் இது மிகப்பெரிய குறையாக இருக்கிறது.…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 9

agam-1

ஒருகாட்சியை அப்படியே கண்முன் விரியுமாறு விவரிப்பதை படிமம் என்று சொல்கிறோம். சங்கப்பாடல்களில் அதுவும் அகநானூற்றில் பெரும்பாலானவை படிமங்கள் கொண்டவைதான். இந்தப்படிமங்கள் எதற்கு எடுத்தாளப்படுகின்றன என்றால் உணர்வை அழுத்தமாகச் சொல்ல அதுவே ஏதுவாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ‘சுண்ணாம்புக்கல் வெடித்ததுபோல் மலர்ந்திருக்கும் வெண் கடம்ப மலர்’ என்றொரு உவமை. அந்தக்காலத்தில் எல்லாம் வீட்டுக்கு வெள்ளையடிக்க சுண்ணாம்புக்கல்லை வாங்கி வந்து…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 8

agam-8

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில்தான் முதல் காதல் கடிதம் எழுதினேன். ஒருவாரமாக யோசித்து யோசித்து ஒன்றும் சரிவராமல் இப்படி எழுதினேன். “நான் உன்னை நேசிக்கிறேன். விருப்பமெனில் திருப்பித்தா. இல்லையெனில் கிழித்து எறிந்துவிடு (ரொம்பதூரம் தள்ளி கீழே) குறிப்பு: இது என் இதயம். தயவுசெய்து கிழித்துவிடாதே”. இந்த கடிதத்தின் வரிகள் எல்லாமே இன்னொரு நண்பனின் உபயம். இந்தக்கடிதத்தில் ஒரு…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 7

agam-7

கடைசியாய் காதலைப் பிரிப்பதற்காக பெண்ணை வீட்டில் அடைத்து வைக்கும் காட்சியுள்ள சினிமாவை எப்போது பார்த்தீர்கள்? காதலை எதிர்ப்பது போல? ஜாதிப் பிரச்சினை மட்டும் இல்லையென்றால், ஏகத்துக்கு காதல் திருமணங்களாய்த்தான் இருக்குமென்று நினைக்கிறேன். இருந்தாலும் படத்துக்கு நடுவில் திருமணம் ஆவதுபோல் காட்சி வந்தாலே, சரி யாரோ வந்து நிறுத்தப்போகிறார்கள் என்று தெரிந்து விடுகிறது. பெற்றோர்கள் மாறிவிட்டார்களா? காதல்…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 6

elephants-show-emotion_cc6d32507f281a67

தங்கர்பச்சானின் சொல்ல மறந்த கதை திரைப்படம் தலைகீழ் விகிதங்கள் நாவலின் தழுவல். மிக அழகாக, நுணுக்கமாக எடுத்திருப்பார். மாமனார் வீட்டோடு இருப்பது அசிங்கம், நெருங்கிய நண்பனுக்கு ஒருவேளை சோறுபோடக்கூடத் தான் வக்கற்று இருப்பதை, பணம் என்ற கண்ணுக்குத் தெரியாத கயிறால் அவன் முடக்கப்பட்டிருப்பதை நுட்பமாகச் சித்தரித்திருப்பார். சிவதாணுவின் மனைவி கடைசிவரை அவனைப் புரிந்துகொள்ளவில்லை. இவ்வளவு பணம்…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 5

agam1

ஆணாயிருந்தாலும் சரி பெண்ணாயிருந்தாலும் சரி பதினைந்து வயதில் பெரும்பாலும் வயதுக்கு வந்துவிடுகிறார்கள். அதுதான் பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் விலகும் பருவம். குழந்தைமை மறைந்து வாலிபம் முளைத்தெழும் வயது. சனீஸ்வரன் ஏழரை ஆண்டுகள் பிடிப்பான் என்பார்கள். உண்மையில் பதினைந்திலிருந்து இருபத்தைந்து வயது வரை எல்லோரையும் பிடிக்கிறான். தீவிரமான மனநிலையை உருவாக்கக்கூடிய பத்தாண்டுகள். எல்லோருமே இந்தக் கடினமான காலத்தைத் தாண்டி…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 4

அகம் 4

ஒருவகையில் பார்க்கப்போனால் ஆண் எப்போதும் தனது ஆதிகுணமான வேட்டையாடும் மனப்பான்மையுடனேயே பெண்ணை அணுகுகிறான். எப்படியாவது பெண்ணின் காதலைப் பெற வேண்டும். வென்றபிறகு வெற்றி ஒரு சரித்திர நிகழ்வாக மட்டும் இருக்கிறது. மீண்டும் தரையில் நடக்க ஆரம்பிக்கிறான். பெண் திரும்பத் திரும்பத் தேடுகிறாள், எங்கே அந்தக் காதலன் என்று. ஆணும்கூட ஒருவகையில் ஏக்கத்துடன் அவனையே தேடக்கூடும். பெண்…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 3

agam 1

பொதுவாய் மனைவியுடன், காதலியுடன் பேசும்போது அணுசரனையாகப் பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு கண்டபடி வாக்குறுதிகளை ஆண்கள் கொடுத்துவிடுவார்கள். பின்னர் அது மறந்தே போய்விடும். இந்த விஷயத்தில் மட்டும் எல்லாப் பெண்களும் அத்தனை துல்லியமாக ஞாபகம் வைத்திருப்பார்கள். திடீரென்று கேட்பார்கள் ‘ போன வருசம் ஜனவரி மாசம் நீ என்ன சொன்னே’. எவன் கண்டான்? நேற்றுச் சொன்னதே ஞாபகம்…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 2

unnamed

நமக்கு முந்தைய தலைமுறையில் இரண்டுதாரங்கள் வைத்திருப்பவரை யாரும் தவறாகப் பார்க்கவில்லை. அவர்கள் நமது தெருவில்கூட இருந்திருக்கலாம். நானிருந்த தெருவில்கூட இரண்டு குடும்பங்கள் அப்படி இருந்தன. என் எத்ரித்தவீட்டுப் பெண்மணிக்கு வயதுக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு பையன் இருந்தான். அவர் வாரத்துக்கு ஒருமுறை வந்துபோவார். அவர் வரும் அன்றைக்கு வீடே அதைக் கொண்டாடும். பிள்ளைகள்…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள்

அகம்

பொதுவாக பெண்களைவிட ஆண்களே கூச்சசுபாவம் மிக்கவர்கள் என்று நினைக்கிறேன். ஆண்கள் மட்டும் இருக்கையில் அவர்கள் வீரத்தைக் குறித்து சவடால் பேசுவதும் அதுவே ஒரு பெண்ணிடம் பேசுவதென்றால் உளறிக்கொட்டுவது அல்லது பேசத்தயங்குவதுமாக இருக்கிறார்கள். ஆணுக்கு பெண் ஒரு புதிர். தன் இரகசியங்களை வெளிக்காட்டவேண்டிய இடம். இப்படி நேரடியாக அணுகுவதில் உள்ள தயக்கத்தால், அதேநேரம் பெண்ணுடன் நெருங்கவேண்டும் என்ற…