Author: இரா.சரவணதீர்த்தா

தி சர்க்கிள்: மனக் காடுகளும் மதக் கோடுகளும்

கிடக்கும் காடுகளைப் போல் மனிதனின் மனங்களுக்குள் அடர்ந்து கிடக்கும்  ஆசைகளும் கனவுகளும் மதக் கோடுகளால்  எல்லைப்படுத்தப்படும்  போது அதனால் விளையும் எதிர்வினைகள்  மதக் குற்றங்களாக விசாரணைக்குள் கைதாகிறது. இந்த மனக்காடுகளைச் சுமந்து கொண்டு சமூகத்தில் நடமாடும் மனிதனின் உணர்வுகள் மதக் கோடுகளால் பரிசீலனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் மதத்தின் பேரில் பெண்களின் மேல் பாய்ச்சப்படும் பரிசீலனைகள் ஆண்…

“தமிழ் எழுத்தாளர்களுக்குப் பெருமளவு ISBN குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.”- விஜயலட்சுமி

சரவணதீர்த்தா: தொடக்கத்தில் வெகுஜன இலக்கிய ரசனை கொண்ட உங்களுக்கு, தீவிர இலக்கியம் குறித்த ஆர்வம் எவ்வாறு தொடங்கியது? விஜயலட்சுமி: எனக்கு எப்போதுமே அதன் பேதம் புரிந்ததில்லை. எனது வாசிப்பும் பொதுவாக ஆய்வுகள் தொடர்பானதுதான். வல்லினம் நண்பர்கள் மூலமாகவே வெகுஜன மற்றும் தீவிர இலக்கியத்தின் பேதம் புரிந்தது. ‘கடக்க முடியாத காலம்’ எனும் ம.நவீனின் நூல் மூலமாக…

வாட்டர்: கனவுகளை மூழ்கடிக்கும் புண்ணிய நதி

இந்திய சமூகத்தில் விதவைகள் எந்த நிலைமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதனையும், அந்த அவலம்  வேத சாஸ்திரத்தைக் கொண்டு சமூகத்தின் மத்தியில் எவ்வாறு ஆழமான  நம்பிக்கையாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறது ‘வாட்டர்’ திரைப்படம். சர்ச்சைக்குரிய படைப்பாளி என்று கூறப்படும் இந்தோ-கன்னடியரான இயக்குனர் தீபா மேத்தாவின் இயற்கை கூறுகள் வரிசை கொண்ட (element trilogy) மூன்றாவது படமாக ‘வாட்டர்’…

கண்றாவிகளைச் சுமக்கும் கலாச்சாரம்

நேற்று முன்தினம் முக நூலில் என் அன்புக்கினிய தோழி மாலா ஒரு கேள்வியை முன்வைத்தாள். ” மலேசிய நாட்டில் இதுபோன்ற கலாச்சாரங்களை வரவேற்கலாமா?” என்பது அக்கேள்வியின் சாரமாக இருந்தது. தாயாஜியின் சிறுகதையே இவரின் கேள்விக்குப் பின்னணியாக இருந்தது. இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதற்குப் பதிலாக அவளிடம் நான் கேள்வியை எழுப்பினேன். “மலேசியா நாட்டில் ஏய்ட்ஸ் நோய்…

ஐந்தடிக்கரனின் செய்தி

தமிழ்ப் பத்திரிகை நிருபரை ஐந்தடிக்காரன் என்று அழைப்பதில் மலாக்கா மாநில ம.இகா தலைவர் டத்தோ இரா பெருமாளுக்கு ( முன்னாள் மாண்புமிகு மற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர்) ஆனந்தம் தருகிறதென்றால் அவர் அப்படியே அழைப்பதில் எனக்கு வருத்தமும் கோபமும் கிடையாது. ஐந்தடிக்காரன் ( அஞ்சடிக்காரன்), கொடுக்கும் செய்தி எல்லாவற்றையும் பத்திரிகையில் எழுதி விடுவாயா? என்று ஒருமுறை அவர்…

முதுமையின் குளியலறை

இளமைக்காலங்களின் அழுக்குகளை துவைத்தெடுப்பதற்கு முதுமைக்குக் கிடைத்த “புனித நதி” குளியலறைகள்.. மீண்டும் மீண்டும் வந்துப் போகுது இந்தக் குளியலறைக்கு பகிரங்கப் படுத்தாமலேயே  கழுவி எழுக்கமுடியாத அழுக்குகளை சுமந்துகொண்டு நதியும் முதுமையும் இதுவரையிலும் ஓடிக்கொண்டிருக்கிறது யாரோ பேச்சைகேட்டு

மே 5 வாழ்கையில் கிடைக்கும் ஒரே வாய்ப்பு!

ஒரு தலை ராகமாக ஊடகங்களில் செய்திகள் .உயரத்திலிருந்து கோழிக்குஞ்சு நடமாட்டத்தை கூர்மையாக கவனிக்கும் பருந்துபோல  வெளிநாடுகள் மலேசியாவை பார்த்துக் கொண்டிருகின்றன. ஜாதகக் காரர்கள், என் கணித நிபுணர்கள், கேரளா நம்பூர்தி, இந்தோனேசியா போமோ ஆகியோர்களை இரவு விருந்தோம்பலில் கவனிக்கும்  படுபிசியில் அரசியல்வாதிகள். ஹோட்டல் ரூம்பில் நடக்கும் உள்ளரங்கு விளையாட்டு பொது மைதானம் வரை பார்வைக்கு வைக்கும்…