Category: கவிதை

ஃபஷ்றி கவிதைகள்

நினைவில் தோன்றும் அடர் வனங்களின்கிளை ஒன்றில்,அலைந்து தனித்த பறவையான பொழுதுஅதிகாலை திறந்துவிடும் ஒற்றை ஜன்னலினூடு பாயும் குளிர் பட்டு சிலிர்க்கிறது அந்நினைவுநினைவில் உருகி வழிந்து பெருக்கெடுக்கிறேன்சருகுகளையும் கூழாங் கற்களையும்அள்ளிச் சுமந்தோடுகிறேன்சிறு மீன்கள் கொஞ்சம் தோன்றி மறைகின்றனஎதிர்ப்படும் பாறைகளில் முட்டிமோதிசொற்கள் வெடித்துச் சிதறுகின்றனசிதறிய சொற்கள்,கிளைகளாகி எட்டுத் திக்கும்எல்லா மொழிகளிலும் பெயர்ந்து கொண்டிருக்கின்றனஅதில் ஒரு துளி மட்டும் உங்களை…

மலேசிய கவிஞர்கள் வரிசை – 3 : கோ.புண்ணியவான்

‘உங்கள் கையில் இருக்கும் ஒரே கருவி சுத்தியல் என்றால், எல்லா பிரச்சனைகளும் உங்களுக்கு ஆணியாகவே கண்ணில் படும்’ என்று உளவியலில் ஒரு கூற்று உண்டு. உங்கள் கையில் சுத்தியும் அரிவாளும் மட்டுமே இருக்குமென்றால் எல்லா பிரச்சனைகளும் உங்களுக்கு ஆணியாகவும் தலைகளாகவும் தென்படும் என்று அதை நகைச்சுவையாகவும் சொல்வார்கள். சமூகத்தின் பிரச்சனைகளைக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் கைகளில்…

மலேசிய நவீன கவிஞர்கள் (1) : ந.பச்சைபாலன் கவிதைகள்

ஒரு கவிதையை விளக்கிக் கூறமுடிந்தால் அது கவிதையே இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. மொழியால் சொல்லித் தீராத ஒன்றை மொழியில் முன்வைக்க முயலும் வடிவம் என்றும் கவிதையைச் சொல்வது உண்டு. எனவே கவிதை என்பது ஒரு செயற்கரிய செயல் எனக் கொள்ளலாம். எது சொல்ல இயலாதது? ஒரு செய்தியைச் சொல்லிவிடலாம், கருத்தைத் தெரிவிக்கலாம், ஆனால் அனுபவத்தின் சாரத்தை,…

பெருந்தேவி கவிதைகள்

சில நாட்கள் இது நடக்கும் அதிகாலையிலிருந்தே அந்த நாள் உனக்கெதிராகச் சதி செய்வதாக ஒவ்வொரு நிமிடமும் உன்னை முறைத்துவிட்டு நகர்வதாக ஒவ்வொரு பார்வையும் உன் கழுத்தை நெரிக்கப்போவதாக உன் கைகளும் கால்களுமே உனக்கெதிரான சதியில் சேர்ந்துவிட்டதாக உன் நகங்கள் திடீரெனப் பெரிதாகி உன்னைக் கீறி ரத்த விளாறாக்கிவிடும் போல உன் கைகளை ஒன்றோடொன்று இறுக்கமாகக் கோர்த்தபடி…

வேணு வேட்ராயன் கவிதைகள்

2020இன் குமரகுருபரன் விருது பெற்ற கவிஞர் வேணு வேட்ராயன் கவிதைகள் இவை. தொழில்முறை மருத்துவரான இவர் தத்துவம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். இவரது ‘அலகில் அலகு’ எனும் கவிதை தொகுப்பு விருட்சம் வெளியீடாக வந்துள்ளது. வேணு வேட்ராயன் அவர்களுக்கு வல்லினத்தின் வாழ்த்துகள்.   (1) ஒடுங்குதல் நிகழ்கிறது. ஓவ்வொரு சாளரமாய் தன்னை சாத்திக்கொள்கிறது.…

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

1 நீ சொன்னாய் அம்மா “உன் சோகங்களை யாரிடமும் சொல்லாதே துயர முகம் பார்த்துப் பேச தோன்றாது எவருக்கும்…” அம்மா… உண்மையிலேயே உற்சாகத்தில் இருக்கையில் மனம் உள்ளொடுங்கிகொள்கிறது நகைச்சுவை உணர்வு தடுத்துக்கொள்கிறது திறமையோ மிரட்டுகிறது கட்டுப்பாடுகள் பிளவுபடுகிறது ஆனால் சோகம்… சோகம்தான் நமக்கு நம்மை வெளிப்படுத்தி காட்டுகிறது மூலம்: Rachel Naomi Remen 2. அந்த…

விஜிப்ரியா கவிதைகள்

அப்பாவின் வீடு கல்யாணத்திற்கு பிறகான அப்பா என்ன செய்வார்? வீட்டிற்கு வரும்போது வாஞ்சையுடன் பைகளை வாங்கி கொள்வாரா? எனக்கு பிடிக்குமென பக்குவமாக சமையல் செய்வாரா? வயிற்று பிள்ளைகாரியான என் கால்களை முன்புபோல பிடித்து விடுவாரா? பிள்ளையின் உச்சி முகர்ந்து முத்தம் வைத்திருப்பாரா? வலியால் முனகும் போது, தலைமேல் கை வைத்துவிடுவாரா? எனக்காய் படுக்கையை தட்டி தயார்…

விஜிப்ரியா கவிதைகள்

ஒரு வன்மம் சுழற்றி அடிக்கிறது புள்ளியில் தான் தொடங்குகிறது . டார்வின்தியரி போல பல்கி பெருகி ஒரு திமிங்கலம் அளவு வளர்ந்துவிட்டது. வழக்கமான வசைகளை வாறிஇறைத்து கற்களை கொண்டு அடித்தும் வீழ்த்துகிறேன். என் வசைகளின் பெருவெள்ளத்தில் கரை ஒதுங்கி மூச்சு அறுபட்டு துடித்து சாகும்மென என நினைத்து நான் நிறுத்துவதில்லை. வளர்ந்துவிட்ட அவை என் கண்ணில்…

ராஜேஷ் ஜீவா கவிதைகள்

தன்னையுண்ணும் ஒருவன் நீண்ட நாட்களாக ஊர்ஊராக யாசித்தும் பசியாற எதுவும் கிடைக்காதவன் நெடிய யோசனைக்குப் பின் உண்பதற்குத் தன்னைத் தேர்ந்து கொண்டான் மலைக்குகை தைல ஓவியத்தில் தொல்குடியொருவன் கையிலேந்திய கூர்ஈட்டியை கைமாறாகப் பெற்று மார்புச் சதையை கிழித்துச் சுவைத்தவன் அடுத்ததாக தன்  கெண்டைக்காலில் விளைந்திருக்கும் கொழுத்த திரட்சியினை அறுத்துத் தின்கையில் கடல்கன்னியர் சிப்பிகளை ஆசை ஆசையாகப்…

அமைரா கவிதைகள்

1. நான் ஒரு பாடலை பாட வேண்டும் மலைகளுக்கு மேலிருந்த எனது ஊற்றை திறந்து- இருண்ட பள்ளத்தாக்குகளுக்கிடையில் அமர்ந்து எனது மகிழ்ச்சியுடன்-அழுகையும்   என்னில் எல்லா சுமைகளும் கடந்து போக அமைதியில் மரங்கள் வளர்வதை பார்த்தேன்.   மின்னல் ஒளியை காண தாழைகளை வளர்த்தேன். அங்கே காதலின் மலர்கள் எவ்வாறு பூத்தது?   ஒரு கூர்வாளை…

தமிழ் உதயா கவிதைகள்

கொலைக்காடு ஒன்று வெவ்வேறு மர்மங்களால் ஆனது முட்களால் , வாள்களால், துளைக்கும் ரவைகளால், விடமேறிய சொற்களாலும் கூட. அவரவர் மனங்களின் எடைகளைப் பொறுத்தது சாவுக்கு சாவு மாறுபட்ட வெகு நீண்ட நாளொன்றில் நான் வரைபடத்தோடு கொலைக்காட்டுக்குச் சென்றேன் எட்ட நின்று அமிழ்தம் கவிழ்ந்த விடத்தில் கை நனைத்தேன் பருத்திச்சுளை தின்று பாற்பற்கள் கொழுத்திருந்தன ஆயிரம் நீர்ச்சுனைகள்…

சித்துராஜ் பொன்ராஜ் கவிதைகள்

அபிப்பிராய பேதங்கள் என் அபிப்பிராயங்கள் அனைத்தையும் வழவழப்பான கூழாங்கற்களாக்கி வீட்டு வரவேற்பறையில் உள்ள மீன் தொட்டியில் போட்டு வைத்திருந்தேன். ‘நல்லவிலைக்கு வந்தால் ஒரு கடலும் வாங்கிவிடலாம்’ என்றாள் லலிதா. இன்று ஞாயிற்றுக்கிழமை இருவரும் கடல் விற்கும் கடைக்குப் போனோம். ’மாதாந்திர வாடகைக்கு பௌர்ணமி அலைகள் சகிதம் சமுத்திரமே கிடைக்கும்’ என்றான் கடல் விற்பவன். சமுத்திரம் வாங்கி…

ராஜேஷ் ஜீவா கவிதைகள்

நன்னெஞ்சு விரல்மைதுனம் ஒவ்வொன்றிற்கும் அவள் கார்கூந்தலில் வெள்ளிக்கம்பிகள் உதிக்கின்றன சத்துடானிக் மூலிகைக்குளியல் அக்குபங்சர் ஆராஹீலிங் என சகலத்திற்கும் தலையை ஒப்புக்கொடுத்த பின்னரும் கணக்கு மட்டும் தீர்ந்தபாடில்லை நேர்ச்சைகளும் குறைந்தபாடில்லை அவ்வையென சகதோழிகள் சீண்டிச் சிரிக்கும் சமயங்களிலும் அவளுக்கு சங்கடங்கள் நேர்ந்ததில்லை கண்ணைத் திறந்த ஆட்டுக்குட்டி மலங்கமலங்க விழிப்பது போல குழலில்  பெருகும் நரைகள் குறித்து பெற்ற…

ஆணொருவன் அழுகிறான்

அலாவுதின் விளக்கில் அடைபட்டிருக்கும் பூதமொன்று அவனது அழுகை துளியின் சிறு துகள் பட்டு தூக்கம் கலைந்தது இது சாத்தியமே ஆகக்கூடாதென அசரீகள் முழுக்க பெண் குரல்களால் ஒலிக்கத்தொடங்கின   ஆயிரத்து இரண்டாவது நாளுக்கான கதையை அரேபியர்கள் தேடிப்போகலானார்கள் அதிலவன் தனது மார்புக்கூண்டிலிருந்து இதயத்தை கழற்றி அதற்கு தங்க முலாம் பூசியதன் தகுதியை உயர்த்திக்கொண்டிருந்தான் விபரம் தெரிந்தவிட்ட…

நதியிடம் ஓர் விண்ணப்பம்

வரம்புகளையும்  குதிரைகளாக நினைத்துக்கொள்கிறோம் கஞ்சி கூழ்கூட அதன் மடியில் வைத்து உண்பதில் ஒரு பூரிப்பு. அதன் முதுகின்மேல் சேற்றில் புதைந்த கால் காவலாளிபோல் கவனிப்பாக இருக்கிறது நாலு மைல் தொலைவில் நதியென படுக்கும் நீர்த்தொட்டி எம்  வயலை தடவிச்செல்வதாக ஒரு எதிர்பார்ப்பு களைத்து வரும் நதி முன்வரிசையில் இருக்கும் வரப்பை நிறைத்துவிட்டு இரவுநேர மின்வெட்டாய் போனபின்…