
மலேசிய நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளில் பலராலும் அறியப்பட்ட பெயர் சை.பீர்முகம்மது. 1961இல் சிங்கப்பூரில் வெளிவந்த ‘மாணவன்’ இதழில் முதல் சிறுகதையை எழுதினார். அப்போது தொடங்கி இன்றுவரை சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை, விமர்சனம், நாவல் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார். மலேசிய இலக்கியத்தை தமிழ் பேசும் நிலங்களில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தனியாத தாகம் கொண்ட…