Category: பத்தி

நம் வாழ்வில் சிறுத்து வரும் சிரிப்பு!

மனித வாழ்வின் அரிய பொக்கிஷம் அவனது இதழ் சிந்தும் சிரிப்பு என்பது பெரும்பாலானோருக்குப் புரியாமலே போகிறது.நித்தமும் வேகம் வேகமென்று ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் இன்று வாழ்க்கையெனும் பயணத்தை கடக்கையில், வழியில் சிதறிக்கிடக்கும் சிரிப்பை ரசிக்க மறந்துபோவது இன்றைய நிலையின் பரிதாபத்தின் உச்சம். இவர்கள் ஒருகட்டத்தில் சோர்ந்துபோய் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில், நிறைய இடங்கள் வெற்றிடங்களாகவே காட்சியளிக்கின்றன. வாழவேண்டும்!…

இன அரசியலும் மன முடக்கமும்

நேற்று என் அம்மாவை அரசாங்க மருத்துவமனைக்குக் கண் சிகிச்சை பெற அழைத்துச் சென்றேன். இது இரண்டாவது முறை மருத்துவச் சந்திப்பு. கூட்டம் முந்தியடித்துக் கொண்டு நின்றது. காலை 8-மணி சந்திப்புக்கு 6.30-மணியில் இருந்து மக்கள் வந்து காத்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். பெரும்பான்மை மருத்துவமனைகளில், அதிலும் அரசாங்க மருத்துவமனைகளில் இச்சூழல் இயல்புதான் என்பதால் அமைதியாக, தாதிகளின் அழைப்புக்குக் காத்திருந்தோம்.…

தொழில்

வகுப்பறையில் மாணவர்கள் எனக்காகக் காத்திருந்தனர். அவர்களுக்கும் எனக்கும் ஏற்கனவே ஓர் உடன்பாடு ஒப்பந்தமாகியிருந்தது. மாணவர்களாகட்டும் நானாகட்டும் பத்து நிமிடத்திற்குள் வகுப்பில் இருக்க வேண்டும். அடுத்த பதினோறாவது நிமிடத்தில் பாடம் ஆரம்பமாகும். ஐந்தாவது நிமிடத்தில் வகுப்பில் நுழைந்தேன். அவர்கள் முகத்தில் சின்னதாய் ஏமாற்றத்திற்கான ஓர் அறிகுறி. பாடம் தொடங்கியது. சீன மாணவர்களுக்குத் தமிழ்மொழி வேற்றுமொழிப் பாடம். எட்டு…

காப்புறுதி VS ஆப்புறுதி

சமீப காலமாக ஊடகங்களிலும் இணைய உலகிலும் காப்புறுதி குறித்த விளம்பரங்களை கேட்க, பார்க்க முடிகிறது. சொல்லப்போனால் அது தொடர்ந்து இருந்திருக்கிறதுதான் தற்போதைய அனுபவத்தால் அவ்விளம்பரங்கள் தனியாகத் தெரிகிறது போலும். நம்மில் பலருக்கு காப்புறுதி குறித்துத் தெரிந்திருக்கும். பலவித நிறுவனங்களில் இருந்து நாம் காப்புறுதியை வாங்கியிருப்போம். இன்னும் சொல்லப்போனால் நம் நண்பர் குழுவில் ஒருவராவது காப்புறுதி முகவராக…

என் பார்வையில் ‘தங்க ஒரு . . . ’

வல்லினம் குழுவின் சிறுகதை கலந்துரையாடல் என்ற புலனக்குழுவில்    பகிரப்பட்ட கதைகளில் என் மனத்தை வெகுவாய் கவர்ந்த கதையாய் அமைந்தது ‘கிருஷ்ணன் நம்பி’ எனும் எழுத்தாளர் எழுதிய ‘தங்க ஒரு’ எனும் கதை. மாய எதார்த்த வடிவில் இக்கதை எழுதப்பட்டுள்ளது. கதைசொல்லி தன் மனைவிக்கு எழுதும் கடிதம் மூலம் தொடங்குகிறது. நகரத்தில் தங்குவதற்கு ஒரு நல்லவீடு தேடி…

புகை சூழ் உலகு

நான் கல்லூரியில் சேர்ந்த அதே ஆண்டில் ‘விளையாட்டாக’ சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். அப்போதைய சூழலில் புகைத்தலுக்கு எதிரான இயக்கம் இத்தனை தீவிரமாக இல்லை. பொது இடத்தில் புகைக்கத் தடை, சிகரெட் விற்பனை கட்டுப்பாடு, வயதுகட்டுப்பாடு போன்றவை இல்லை. என்னைப்போன்றே ‘விளையாட்டாக’ சிகரெட் பிடிக்கத்தொடங்கிய பலர்தான் பிறகு பெட்டி பெட்டியாக ஊதித்தள்ளிக் கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நான்…

இன்னும் பேசுவதற்கு…

“இந்த பூமி பாரதீஸாக மாறும் காலம் வரும்போது காது கேளாதோரின் செவிகள் கேட்கும். (ஏசய்யா 35.5, பொது மொழிபெயர்ப்பு) நாங்கள் உரையாட ஆரம்பித்தோம், இருவரும் மாறிமாறி சைகையால் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பக்கத்து இருக்கையில் இருந்த நபருக்கு இதில் யார் வாய்பேச முடியாதவர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. உரையாடல் சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருக்கும்போது இன்னொருவரும் எங்களைக் கவனிக்க…

விலங்குகள்

மீண்டும் நிர்வாகத்திடமிருந்து அதே மின்னஞ்சல் வந்திருந்தது. இம்முறை, பல்கலைக்கழக வளாகத்தில் திரியும் விலங்குகளுக்குத் தீனி போடக்கூடாது என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பல்கலைக்கழகம் அமைந்திருந்த பெரிய நிலப்பரப்பில் விலங்குகள் திரிவது நிர்வாகத்திற்கு நெருடலாக இருந்தது. அவை ஆதியிலிருந்து அங்குதான் திரிந்து கொண்டிருந்தன. இப்போதும் அங்குதான் திரிந்து கொண்டிருக்கின்றன. பதினான்கு வருடங்கள் முன்பாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு அது…

கச்சடா பேச்சு!

கெட்ட வார்த்தையை எங்கள் ஊரில் கச்சடா பேச்சு என்றுதான் கூறுவர். நான் அனேகமாக 10 வயதுவரை கச்சடா பேச்சை அறிந்திருக்கவில்லை.  தோட்டங்களில் வாழ்ந்த என் நண்பர்கள் அதுபோன்ற வார்த்தைகளை அடையாளம் காண்பதிலும் அதைப் பிரயோகிப்பவர்களைக் காட்டிக்கொடுப்பதிலும் கில்லாடிகளாக இருந்தனர். தோட்டங்களில் கச்சடாவாகப் பேசுவது சகஜமானது. சண்டையென வந்துவிட்டால் கச்சடா வார்த்தைகள் ஒன்றாகச் சேர்ந்து எதிராளி வீட்டுத்…

நீயின்றி அமையாது உலகு – 4

புத்தக அலமாரியை சரிப்படுத்த எத்தனிக்கும்போது சில சமயங்களில் இது நடக்கலாம்.  பழைய நினைவுகள்.  மறக்க முடியாத தருணங்கள்.   கொடுத்ததும் கிடைத்ததும்.   வலிகள்.   இன்ப அதிர்ச்சி என அடுக்கிக்கொண்டே போகலாம் கிடைத்தது நமது நாட்குறிப்பாக இருக்கும்போது. . . நாட்குறிப்பு என்பதைவிட குறிப்புகள் எழுதுவதில் இருந்துதான் என் எழுத்து இயங்க ஆரம்பித்திருக்க வேண்டும்.  எனக்கு எதையும்…

அடையாளம்

விரிவுரையாளனுக்கான அடையாளத்தைச் சிவப்பு நிறக் கயிற்றில் தொங்கும் பெயரட்டையில் பல்கலைக்கழகம் எனக்கு கொடுத்திருந்து. கழுத்தில் பெயரட்டை தொங்கும்வரை வளாகத்தில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வளாகத்தை விட்டு வெளியேறினால் அடுத்து நான் சந்திக்கும் பலர் என்னிடம், “தம்பி, நீ என்னப்பா படிக்கிற?” என்ற கேள்வியைத்தான் கேட்பார்கள். இன்னும் சிலர் சந்தேகப் பார்வையுடன் பார்ப்பார்கள். வெளிச்சூழலில் அது…

நீயின்றி அமையாது உலகு – 3

துர்க்கனவு போல அவள் முகம் வந்துபோனது. அவளை மறந்துவிடுவேனோ என்ற அச்சம் அவள் வருகைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால்………… எஸ்.பி.எம் தேர்வு முடிந்த நிலையில் சிலமாத விடுமுறை கிடைத்தது. விடுமுறையைச் சம்பளமாக்கிட தற்காலிகமான வேலையை தேடிக்கொண்டிருந்தேன். அச்சமயம் தோட்டங்களை துண்டாடிய பின் அங்கு தொழிற்சாலைகளைக் கட்டியிருந்தார்கள். இதற்கு முன் அங்கு வாழந்தவர்களுக்குத்தான் முதல் வேலை வாய்ப்பு…